முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (210)


2091. மாம்பழத்தின் தாயகம்?

     தெற்கு ஆசியா

2092. மாம்பழம் எந்த நாடுகட்கெலாம் தேசிய பழம்?
     இந்தியா , பாகிஸ்தான் , பிலிப்பைன்சு

2093. பங்களாதேசின் தேசிய மரம்?
     மாமரம்

2094. மாம்பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
     உலக மொத்த மாம்பழ உற்பத்தியில் பாதிக்கு மேல் இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. அடுத்து சீனா,  மூன்றாவது தாய்லாந்து. அதிகளவில் மாம்பழ ஏற்றுமதியும் நாம் செய்கின்றோம்.

2095. மாம்பழங்களின் மன்னன்?
     அல்போன்சா மாம்பழம்

2096. இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி?
     தமிழ்

2097. பெரியபுராணத்தில் திருநாடு எனப்படுவது?
     சோழநாடு

2098. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் எனப்படுபவர்?
     மித்தாலி ராஜ்

2099. கிரிக்கெட் மட்டைகள் செய்ய பயன்படும் மரம்?
     வில்லோ

2100. ஹாக்கி மட்டைகள் செய்ய பயன்படும் மரம்?
     மல்பெரி
 

கருத்துகள்