முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (215)

2141. குத்துவிளக்கிற்கு பெயர் பெற்ற ஊர்?
     நாச்சியார் கோவில் (கும்பகோணம்)

2142. நாதசுவரத்திற்கு பெயர் பெற்ற ஊர்?
     நரசிங்கம்பேட்டை (தஞ்சாவூர்)

2143. வெற்றிலைக்கு பெயர் பெற்ற ஊர்?
     கும்பகோணம்
["கும்பகோணத்து வெத்திலைய மடிடா!" என்ற சினிமா பாடல் , "கும்பகோணம் வெத்தல! உன் பாசம் எனக்கு பத்தல!" என்ற கானா பாடல் , "கும்பகோணம் கொளுந்து வெத்தலயா" என்ற தெம்மாங்கு பாடல் என அநேக பாடல்களில் கும்பகோணத்திற்கும் வெற்றிலைக்குமான தொடர்பை அறியலாம்... இந்த பாடல்களையெல்லாம் இப்படிப்பட்ட புரிந்துணர்வோடு கேட்டால் நாலு GK Question-க்காவுது தேறும்!]


2144. கிராம்பிற்கு பெயர் பெற்ற ஊர்?
     கன்னியாகுமரி

2145. அரிவாள் உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊர்?
     திருப்பாச்சி

2146. நெட்டை தென்னைக்கு பெயர் பெற்ற ஊர்?
     ஈத்தாமொழி (கன்னியாகுமரி)

2147. வெண்பட்டுக்கு பெயர் பெற்ற ஊர்?
     சேலம்

2148. பனியனுக்கு பெயர் பெற்ற ஊர்?
     திருப்பூர்

2149. கல்சிற்பத்திற்கு பெயர் பெற்ற ஊர்?
     மாமல்லபுரம்

2150. மரசிற்பத்திற்கு பெயர் பெற்ற ஊர்?
     அரும்பாவூர் (பெரம்பலூர்)

கருத்துகள்