முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (217)

 

2161. இந்திய இராணுவத்தின் முப்படைகள் யாவை?

     இராணுவப்படை , விமானப்படை , கடற்படை


2162. அக்னி பாத் திட்டம் என்பது?
     நான்கு ஆண்டுகட்கு இராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களை பணியாற்ற வழிவகை செய்யும் திட்டம் 

2163. புதுக்கோட்டையின் பழைய பெயர்?
     புதுகை

2164. சேலத்தின் பழைய பெயர்?
     சேரலம்  [சேரர்கள் ஆண்ட நிலம் என்ற பொருளில்...]

2165. ஈரோடு - பழைய பெயர்?
     ஈரோடை  
[பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை (இரண்டு ஓடை) எனும் பெயரானது. ஈரோட்டிற்கு மறந்தை, உறந்தை, மயிலை, மத்தியபுரி, கபாலபுரி என்று பல்வேறு பெயர்களை ஈரோடு தலபுராணம் கூறுகிறது.] 

2166. காவிரி பூம்பட்டினத்தின் பழைய பெயர்?
     பூம்புகார்

2167. சிதம்பரத்தின் பழைய பெயர்?
     தில்லை

2168. தஞ்சாவூரின் பழைய பெயர்?
     தன்செய்யூர்

2169. தனுஷ்கோடியின் பழைய பெயர்?
     வில்முனை  [தனுஷ் என்றால் வில் என பொருள்.]

2170. மயிலாடுதுறையின் பழைய பெயர்?
     மாயவரம்

கருத்துகள்