முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (219)

 


2181. காய்கறிகளின் ராஜா எனப்படுவது?

     கத்தரிக்காய் [காய்கறிகளின் ராணி - வெண்டைக்காய்]

2182. நறுமண பொருட்களின் ராஜா எனப்படுவது?
     மிளகு [நறுமண பொருட்களின் ராணி - ஏலக்காய்]

2183. கருப்பு தங்கம் அல்லது கருப்பு வைரம் எனப்படுவது?
     நிலக்கரி [வெள்ளை தங்கம் எனப்படும் உலோகம் - பிளாட்டினம்]
[வெள்ளை தங்கம் எனப்படும் பயிர் - பருத்தி]


2184. பச்சைத் தங்கம் எனப்படுவது?
     மூங்கில் [சிவப்புத் தங்கம் எனப்படுவது -  குங்குமப்பூ]

2185. திரவ தங்கம் எனப்படுவது?
     பெட்ரோலியம் [திரவ வெள்ளி எனப்படுவது பாதரசம்]

2186. திருக்குறளில் இடம்பெறாத உயிரெழுத்து?
    

2187. திருக்குறளின் தொடக்க மற்றும் இறுதியெழுத்து?
     அ மற்றும் ன்
[குறளில் தமிழ் என்ற சொல்லே கிடையாது. தமிழ் தாய் ஈன்ற நூலாக இருப்பினும் உலக மக்கள் மொழி பாகுபாடின்றி பொதுவென கற்றுணரவே இவ்வாறென்போம்! ஆயினும் , தமிழின் முதலெழுத்தாகிய "அ"-வில் தொடங்கி , தமிழின் இறுதியெழுத்தாகிய "ன்"-இல் முடிகிறது. வள்ளுவர் தமிழை எழுதாவிடினும் எதார்த்தம் தமிழ் சாரத்தை ஈர்த்துவிட்டது!]


2188. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்?
     தமிழ் மற்றும் கடவுள்
[இவ்விரண்டு சொற்களும் குறளில் இல்லை என வெகுவாக பேசப்படுபவை. கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் கண்டிருப்போம். ஆனால் எந்த குறட்பாக்களிலும் கடவுள் என சொல்ல இடம்பெற்றிருக்கமாட்டாது. மாறாக , பகவன்  , வாலறிவன் , இறைவன் என காணலாம்.]


2189. திருக்குறளோடு அதிக தொடர்புடைய எண்?
     ஏழு
[திருக்குறள் ஒவ்வொன்றிலும் ஏழு சீர்கள் உண்டு. 133 அதிகாரங்கள்! இந்த இலக்கங்களின் கூட்டுத்தொகை ஏழு. 1330 குறட்பாக்கள் ! இதுவும் அவ்வாறே ! இன்னும் பல கோணங்களில் ஏழு குறளோடு இயைந்துள்ளது.]


2190. திருக்குறளில் பயன்படுத்தப்படாத எண்?
     ஒன்பது

கருத்துகள்