முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (220)


2191. மண்ணுளி பாம்பின் (Sand Boa) பயன்?
     மண்ணிலேயே உண்டு மண்ணிலேயே கழிவிட்டு மண்ணை உரமாக்கும் மகத்துவம் மண்ணுளி பாம்பினது.
[மண்ணுளி பாம்பின் வால் பகுதி பிற‌ பாம்புகளை போல கூராகமல் தட்டையாகயிருப்பது, இதற்கு இரண்டு தலைகள் இருப்பது போல் காட்டுகிறது. யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் கதித்தோங்கும் என்பது போல மண்ணுளி பாம்பு வசிக்கும் மண்ணெங்கும் செடி கொடிகள் செழித்தோங்கும். மேலும் , இது நாக்கைக் கொண்டு நக்கினால் கேட்கும் திறன் இழந்துவிடுவோம் என்ற பேச்சு பரவலானது. நாக்கைக் கொண்டு நக்குவதற்கும் செவிதிறன் இழப்பதற்கும் என்ன தொடர்பு? இந்த பாம்பினை கொண்டு தீராத நோயெலாம் தீர்க்கலாம்..... மனித எதிர்ப்பு சக்தியை தூண்டலாம்...... என்றெலாம் அளந்துவிட்டு இதை அதிக விலைக்கு விற்கும் சதியொன்று பன்னெடுங்காலமாக அரங்கேறி வருகின்றது. இதன் பின்னணி விவசாயத்தை சரிப்பதே! ஏனெனில் இந்த உயிர் , உரத்திற்கென உயர் பங்களிப்பது ! இது வசிக்கும் இடத்தை சூழ்ந்திருக்கும் பயிர்கள் செழிப்பது உறுதி! இது கடித்து யாரும் இறந்ததாக எந்த பதிவுகளும் இல்லை! ஏனென்றால் இதற்கு விசம் கிடையாது. இனி‌ யாரும் உங்கள் தோட்டங்களிலோ அருகாமையிலோ இந்த மண்ணுளி பாம்பினை கண்டால் விற்று விடும் திட்டம் தீட்டுவதோ, இல்லை கொல்லவோ செய்யாதீர்கள் ! மனித விலங்குகள் கண்களில் படாதவாறு அப்புறப்படுத்துங்கள்!!!!]

                 
2192. இந்திய இரயில்வே முதன்முதலில் WIFI வசதியை எங்கே துவங்கியது?
     பெங்களூர்

2193. உலகிலேயே அதிவேகமாக பாயும் நதி?
     அமேசான் நதி  

2194. உலக தோற்றம் பற்றி கூறும் நூல்?
     பரிபாடல்  

2195. வாழை மரத்தை ஜப்பானியர்கள் எவ்வாறு அழைப்பர்?
     பாஷோ  

2196. ஜனநாயகத்தின் நான்கு தூண்கள்?
     சட்டமன்றம் | நிர்வாகி | நீதித்துறை | ஊடகங்கள்

2197. தமிழகத்தின் மூன்று முக்கிய துறைமுகங்கள்?
     சென்னை | தூத்துக்குடி | எண்ணூர்

2198. இந்தியாவின் முதல் பூச்சி அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
     கோயம்புத்தூர்

2199. தமிழ் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்?
     கோயம்புத்தூர்

2200. இரத்தம் உறைய தேவையான தாது?
     கால்சியம்  

கருத்துகள்