முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (222)

 2211. மனித உடலில் எத்தனை விலா எலும்புகள் உள்ளன?

     12 ஜோடிகள் (24)

2212. உண்மை விலா எலும்புகள் (True Ribs) என்பவை?
     முதல் 7 ஜோடிகள் மட்டுமே மார்பெலும்புடன் இணைந்துள்ளன. இவை , உண்மை விலா எலும்புகள்.

2213. பொய் விலா எலும்புகள் (False Ribs) என்பவை?
     8 , 9 மற்றும் 10வது ஜோடிகள் ஒரு சேர 7வது ஜோடி எலும்புகளோடு இணைந்துள்ளன. இவை , பொய் விலா எலும்புகள்.

2214. மிதக்கும் விலா எலும்புகள் (Floating Ribs) என்பவை?
     11 மற்றும் 12வது ஜோடிகள் எந்த எலும்புகளோடும் இணையவில்லை. இவையே மிதக்கும் விலா எலும்புகள்.

2215. மனித நுரையீரல்களில் எந்த நுரையீரல் பெரியது?
     வலது நுரையீரல்

2216. ECG என்றால் என்ன?
     Electro Cardio Graphy (ECG) எனப்படுவது இதயத்தின் ஒவ்வொரு மின் அசைவுகளையும் துல்லியமாக அறியச் செய்யும் மருத்துவ கருவியாகும். இதயத்திலுள்ள சிறு சிறு கணுக்கள் மிகவும் சிறிதளவில் இதயத்தில் மின் உற்பத்தி செய்பவை. இவற்றினால் தான் இதயம் சரிவர இயங்குகிறது. இந்த மின் அளவினை , தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் வரைபடமாக (Graph) காட்ட ECG பயன்படுகிறது. இதன் மூலமாக மருத்துவர்கள் இதயத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்து அதற்கேற்ப சிகிச்சை வழங்கவியலும். அநேக திரைப்படங்கள் இக்கருவியை நம்மிடம் அறிமுகம் செய்துள்ளன. தொலைக்காட்சி தொடர்களில் ஒரு மாத காலம் இந்த ECG காட்சி தான் ! வாழ்க்கை என்பது மேடுபள்ளம் நிறைந்தது என்பதை சொல்லாமல் சொல்கிறது ECG ! 

[Electro - மின்சார்ந்த , Cardio - இதயம் சார்ந்த , Graphy - வரைபடம்]

2217. ECT என்றால் என்ன?
     நொம்பலம் மற்றும் சஞ்சலம் என இரு வார்த்தைகள் உண்டு. நொம்பலம் என்பது உடலில் ஏற்படும் நோய்! சஞ்சலம் என்பது மனதில் ஏற்படும் நோய் ! மனநிலை சரியில்லாத நிலை! Electro Convulsive Therapy (ECT) என்பது மனித உடலில் சிறிதளவில் மின்சாரத்தை பாய்ச்சி மூளையில் வேதிமாற்றங்களை நிகழ்த்தி மன நோய்களை தீர்க்கும் நுட்பமாகும். இது ஒரு Magic போன்று தான் ! மனவலியை தீர்க்க ECT சிகிச்சை... இயற்கையோடு இயைந்து தன்னில் தானே இன்பம் காண்போர்க்கு ஏது மனவலி....? யாதொரு நொம்பலமும் யாதொரு சஞ்சலமும் இல்லாமல் வாழ வழிவகை தேடுவோம்!

2218. ECV என்றால் என்ன?
     குழந்தை பிறக்கும் போது தலைதான் முதலில்..... சிலநேரங்களில் குழந்தை, தாயின் வயிற்றில் தலை கீழாகயிருக்கக்கூடும். (அதாவது தலை மேலாக...) அச்சமூட்டும் இந்த நிலையை மாற்ற மருத்துவரோ தாதியோ (Nurse) தங்கள் கைகளினாலேயே குழந்தையை சரிவர மாற்றுவர். இந்த சிகிச்சையையே External Cephalic Version (ECV) என்பர். Cephalus என்பது தலையை குறிக்கும் கிரேக்க மொழி சொல்... Leuco என்றால் வெள்ளை என பொருள். Leucocephala என்றால் வெள்ளை நிற தலையையுடைய என பொருள். நம்மூர்களில் வெள்ளை நிற தொப்பியணிந்தவாறு பூத்துக் குலுங்கும் சூபா புல் (எங்கள் ஊரில் : கூவா புல்) என்ற மரத்தின் அறிவியல் பெயர் Leucaena leucocephala. மேலும் வெண்ணிற தலையுடைய Bald Eagle எனப்படும் கிருஷ்ண பருந்திற்கு (மலையாளம்) Haliaeetus leucocephalus என அறிவியல் பெயர். [இந்த சிந்தனைகளுக்கிடையே பிரிதொரு சிந்தனையும் சன்னமாக தளிர் விட்டது. பைபிள் கதைகளில் வரும் பீட்டர் எனப்படும் பேதுரு அராமிக் மொழியில் Cephas என அழைக்கப்படுகிறார். Cephas என்ற சொல் தலையென பொருள்படும் Cephalus என்ற சொல்லோடு சற்று ஒத்துப்போகிறது. மேலும் , பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டதாக வரும் விவிலிய நிகழ்வை சற்று ஒப்பிடும்போது சிந்தனையின் வீரியத்தை அறிய முடிந்தது.]

 
2219. Electro Cardio Version என்றால் என்ன?
     இதய துடிப்பின் தாளம் (Rhythm) ஒரு முறைமையோடு (Harmonic) இருத்தல் வேண்டும். முறைமை தாண்டி வழக்கத்திற்கு மாறாக துடிக்கும் போது பேராபத்துகளுக்கு வழிவகுக்கும். இதை சமன்செய்ய பயன்படும் சிகிச்சை முறையே Electro Cardio Version. இதயத்திற்குள் சிறிதளவு மின்சாரத்தை பாய்ச்சி மீண்டும் துடிப்பை சீராக்குவதே இந்த சிகிச்சை முறையின் சாரம்.

2220. CPR என்றால் என்ன?
     எதிர்பாரா விதமாய் யாரோ ஒருவரின் இதயத்துடிப்போ மூச்சோ நின்றுவிடும் பட்சத்தில் , அவர்தம் வாயில் ஊதியும் இதயபகுதியை அமிழ்த்தியும் மீண்டும் சீரென இயங்கசெய்யும் நுட்பமே CPR எனப்படும் Cardio Pulmonary Resuscitation ஆகும். [இதற்கென எந்த ஒரு படிப்பியலும் தேவையில்லை. கிராமங்களில் நோயுற்றோ காலநிலை மாற்ற ஒவ்வாமையாலோ நடக்கவியலாமல் போராடும் கோழிக்குஞ்சுகளை பெரிய உலோக வாளியினுள் வைத்து கவிழ்த்திய நிலையில் தட்டுவர். கோழிக்குஞ்சு மீண்டும் எழுந்து நடப்பதை கண்ணாற கண்டுள்ளேன்‌. தட்டும்போது வரும் நாதம் மீண்டும் அவ்வுயிரை கிளர்ச்சியுற செய்வதுபோல்தான் இதயத்தை நோக்கி அமிழ்த்தும் போது ஏற்படும் அதிர்வலைகள் மீண்டும்  இதயத்தை செயல்பட செய்கின்றன. அப்றம் என்ன? என் இதயம் இதுவரை துடிக்கவில்லை... இப்போ துடிக்கிறதே... என்ற பாடலை கேட்டுக்கொண்டு ஆகவேண்டியதை பார்க்கவேண்டியதுதான்....]

கருத்துகள்