முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (226)

 

2251. காற்றில் அதிகபடியாய் கலந்துள்ள வாயு?
     நைட்ரஜன்

2252. காற்றை அதிகபடியாய் மாசுபடுத்தும் வாயு?
     கார்பன் மோனாக்சைடு

2253. அதிக காடுகளை கொண்ட இந்திய மாநிலம்?
     மத்திய பிரதேசம்

2254. நிலவொளி பூமியை அடைய ஆகும் காலம்?
     1.3 நொடிகள்
[சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகும். நிலவுக்கு தான் சுயமாய் ஒளி கிடையாதே.... சூரிய ஒளியை தானே பிரதிபலிக்கிறது.... அப்படியென்றால் சூரிய ஒளி 1.3 நொடிகளில் பூமியை அடைகிறது என்று கொண்டாலும் சரிதான்.... பரீட்சையில் எழுதினாலும் சரிதான்... மதிப்பெண் மட்டும் வழங்கப்பட மாட்டாது....]


2255. தாவர வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தாவரம்?
      புகையிலை

2256. விரல் நுனி வெளிச்சங்கள் என்ற நூலை எழுதியவர்?
     தாராபாரதி

2257. பூமி சூரியனுக்கு மிக தொலைவில் இருக்கும் மாதம்?
     ஜீலை           

2258. பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் மாதம்?
     ஜனவரி

2259. தனையை என்றால் என்ன பொருள்?
     மகள் (தனையள் என்றும் கூறலாம் [தனையன் - மகன்])

2260. தமக்கை என்றால் என்ன பொருள்?
      சகோதரி [தமையன் - சகோதரன்]

கருத்துகள்