முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (238)

 2371. நமது தேசிய ஊர்வன உயிரினம்?

     இராஜநாகம்

2372. நமது தேசிய நீர்வாழ் உயிரினம்?
     நன்னீர் டால்பின்

2373. நமது தேசிய பாரம்பரிய விலங்கு?
     யானை

2374. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடியவர்?
    திருநாவுக்கரசர்

2375. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர் ஆகும். இதில் மான்செஸ்டர் என்றால் என்ன?
     பருத்தி சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கு பெயர் போன நகரம் மான்செஸ்டர். தென்னிந்தியாவில் பருத்தி சார்ந்த தயாரிப்புகளில் கோயம்புத்தூர் முன்முகப்பில் நிற்பதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுகிறது. இந்தியாவின் மான்செஸ்டர் அகமதாபாத்.

2376. முல்லைக்கு தேர் கொடுத்தவர்?
     பாரி

2377. யாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கியவர்?
     ஓரி
[வல்வில் ஓரி , யாழ் எனப்படும் நமது தொல்லிசை கருவியை இசைக்கும் (மீட்டும்) பாணர்களுக்கு (பாட்டுடைய புலவர் பெருமக்கள்) பரிசு அளித்த வள்ளல்]


2378. ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தவர்?
     அதியமான்
[அந்த நெல்லிக்கனியை உண்டால் மரணம் நேராதாம். அப்படியெனில் அதை உண்ட ஔவை பாட்டி எங்கே? என சிறுவயது தொட்டு பெருவயது வரை (அவ்வளவு பெரிய வயது இல்லை ) , ஐயம் மனதில் மையம் கொண்டுள்ளது. ஆனால் , ஐயத்திற்கிடமின்றி ஔவை மூதாட்டி இன்னும் வாழுகிறாள். ஆத்திசூடி தொட்டு உலகு தமிழ் மக்களிடையே இலகு தமிழ் எண்ணங்களாய் அழகு தமிழ் வரிகளாய்.....]


2379. மலைவாழ் மக்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கியவர்?
    நள்ளி

2380. மயிலுக்கு போர்வை ஈந்தவர்?
     பேகன்
[வியப்பிற்குரிய ஆனால் சற்றும் பொருந்தா ஒரு உண்மை யாதெனில் , பெண் மயிலை ஆங்கிலத்தில் , Peahen (பீகன்) என்பதுண்டு. இது பேகனோடு மோனைநயம் பாராட்டுகிறது.... தமிழில் மையல் என்றால் வசீகரிக்கும் அழகுடைய என்று பொருள். அதுவே மயிலில் மயமாயிருக்கும் போலும்.]

கருத்துகள்