முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (240)


2391. பொதுநலவாய விளையாட்டுக்கள் (Commonwealth Games) எத்தனை ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறும்?

     நான்கு

2392. பொதுநலவாய விளையாட்டுக்களை எந்த நாடு முதன்முதலில் நடத்தியது?
     கனடா
[1930ல் முதன் முதலாக நடைபெற்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என நடைபெறுகிறது. 2022ல் தற்போது தான் நடந்தேறியது. பெண்களுக்கான கிரிக்கெட் இந்த வருடம் தான் முதன்முதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா 2010ஆம் ஆண்டு இந்த விளையாட்டுக்களை நடத்தியது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாடு முன்வந்து நடத்துகிறது. அதிகபடியாக ஆஸ்திரேலியாதான் நடத்தியுள்ளது.]


2393. கடைசியாக நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுக்களில் எத்தனை நாடுகள் பங்கேற்றன?
     72

2394. கடைசியாக நடைபெற்ற 22வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்தது?
    நான்காவது இடம்

2395. கடைசியாக நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?
     61 பதக்கங்கள்
[ Indian athletes won 61 medals, 22 golds, 16 silvers and 23 bronze, at the Commonwealth Games 2022. ]

 

2396. அதிக நாடுகளை கொண்ட கண்டம்?
     ஆப்ரிக்கா

2397. வட்ட வடிவில் அஞ்சல் தலைகளை வெளியிட்ட நாடு?
     மலேசியா

2398. உன்னைப் போல் ஒருவன் என்ற நாவலை எழுதியவர்?
     ஜெயகாந்தன்

2399. ஹிப்போபொட்டாமஸ் என்ற கிரேக்க சொல்லின் பொருள்?
    ஆற்றுக்குதிரை (River Horse)
[நீர்யானை (Hippopotamus) உண்மையில் பன்றியின் ஒருவகையென்று அறிவியல் முன்மொழிகிறது. ஆனால் கிரேக்கர்கள் அதை குதிரை என்று விட்டனர்.... அதுவும் ஆற்றுக்குதிரையாம்..... ஒருவேளை அதன் முகத்தை மட்டும் குதிரையோடு ஒப்பிட்டுருப்பார்களோ என்னவோ.....]


2400. மருத்துவத்தின் தந்தை எனப்படும் கிரேக்கர்?
     ஹிப்போகிரேட்டிஸ்
[கிரேக்கத்தில் ஹிப்போ என்றால் குதிரை என்று பொருள். ஹிப்போகிரேட்டிஸ் ஒரு மருத்துவர். குதிரை மந்திரக்கல் இதனால் தான் குணப்படுத்தும் திறனுடையதாக உள்ளது போலும்....]

கருத்துகள்