முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (243)

2421. தேங்காயிலுள்ள அமிலம்?

     கேப்ரிக் அமிலம் (Capric Acid)

[இது ஒரு நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat). அதாவது கெட்ட கொழுப்பு....]

2422. DROPSY எனப்படும் வீக்கங்களை ஏற்படுத்தும் களை தாவரம்?
     நாய்கடுகு
[கண்ணை கொள்ளை கொள்ளும் மஞ்சள் நிறப்பூ.... ஆங்காங்கே வெளிர் நிற முட்கள்.... ஒடித்தால் மஞ்சள் நிற திரவம் என இந்த செடியை சிறுவயதிலேயே அறுவை சிகிச்சை செய்த அனுபவம் உண்டு... அது விசம் என்று அன்றே அறிவுறுத்தப்பட்டாலும் அறிவியலும் உறுத்தும் போதுதான் அதன் விபரீதம் அறியலாகிறது.... Mexican Poppy என ஆங்கிலத்திலும் Argemone Mexicana என அறிவியலிலும் இது அழைக்கப்படுகிறது. வெளிநாட்டு தாவரங்கள் பெரும்பாலும் நன்மைக்கே இல்லை.... சீமை கருவேலத்தின் வரிசையில் தான் இவையும்....]


2423. மாதுளை பழத்தின் செந்நிறத்தின் காரணம்?
     ஆந்தோ சயனின்

2424. Sweet Banana என அழைக்கப்படுவது?
     குடை மிளகாவின் (Capsicum) ஒரு வகை.....
[வாழைப்பழம் மாதிரியே வெளிர் மஞ்சள் நிறத்துடனும் சற்றே ஒத்த உருவுடனும் இந்த மிளகாய் தோற்றமளிக்கிறது. கேரளாவில் அநேக கடைகளில் இந்த மிளகாய் பஜ்ஜிதான்....]


2425. சில நேரங்களில் மாதுளை பழம் அதுவாகவே வெடிப்பதன் காரணம்?
     அதிகமாக கனிந்துவிட்டால் மாதுளை வெடித்துவிடும் என்ற கூற்று யாரும் கூறாமலேயே வரக்கூடும்‌. இன்னும் நுணுக்கமாக நோக்கினால் , மாதுளை கனியும் போது போரான் (Boron) எனப்படும் தாதுவை  இழக்கிறது. இதனால் , தோல்களில் பிணைப்பு தளர்ந்து பிளப்பு ஏற்படுகிறது. மாதுளையாவது வயது நிரம்பி கனிந்த பின் தான் ஊட்டம் இழந்துபோய் வாட்டம் இழக்கிறது. நாம் சரியான உணவு பழக்கம் மற்றும் பயிற்சிகளின்றி கூடாத வயதிலேயே ஊட்டமின்றி வாட்டம் இழப்பவர்களாயிற்றே‌.....

2426. உலகிலேயே மிகவும் சுத்தமான நாடு?
     டென்மார்க் [டென்மார்க்குக்கு  டென் மார்க் கொடுத்துறலாம்.... அம்புட்டு சுத்தம்!]

2427. இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம்?
     இந்தூர்

2428. இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம்?
     டெல்லி

2429. உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடு?
     பங்களாதேஷ்

2430. ஹார்ட்டிகல்ச்சர் (Horticulture) என்றால் என்ன?
     காய்கறிகள் , பழங்கள் , அலங்காரச் செடிகள் , நறுமண தாவரங்கள் , மூலிகைகள் மற்றும் பலவகையான செடி கொடிகளென தோட்டம் வைத்து பராமரிக்கும் ஒரு கலை.

கருத்துகள்