முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (244)

 2431. யூகலிப்டஸ் மரங்களின் பூர்வீகம்?
     ஆஸ்திரேலியா

2432. கிழார் என்றால் என்ன பொருள்?
     கிராமத்தலைவர்

2433. கோமகன் என்றால் என்ன பொருள்?
     இளவரசர் [கோ - அரசன். கோமகன் - அரசனின் மகன்]

2434. இளவரசர்கள் எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டனர்?
     இளங்கோ , இளஞ்சேரல்

2435. மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் தமிழகத்தில் எங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது?
     தூத்துக்குடி

2436. தேசிய அறிவியல் தினம்?
     பிப்ரவரி 28

2437. நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு?
     மீத்தேன்

2438. மனித உடலில் ஆதாமின் ஆப்பிள் (Adam's Apple) என அழைக்கப்படும் பகுதி?
     குரல்வளை

2439. கந்தகம் (Sulphur) எந்த நிறத்தில் இருக்கும்?
     மஞ்சள்

2440. பயோ டீசல் எதிலிருந்து பெறப்படுகிறது?
     காட்டாமணக்கு

கருத்துகள்