முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (245)

 

2441. கூகிள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா அபராதம் விதித்தது ஏன்?
     பயனர்களின் இருப்பிட தகவல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சேகரித்ததனால் ஆஸ்திரேலியா 300 கோடி ரூபாய் அளவில் கூகிள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.

2442. Virgin Fruits எனப்படுபவை?
     விதையில்லா கனிகள்

2443. அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் மதுபானம்?
     சேக் (Sake) - ஜப்பான் (Japan)

2444. MAAZA (மாசா) எனப்படும் குளிர்பானம் எந்த வகை மாங்கனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
     அல்ஃபோன்ஸா

2445. உலகின் மிகப்பெரிய வாழைப் பழம்?
     Giant Highland Banana

2446. வீட்டின் வெளி சுவர்களில் வறட்டிகளை (காய்ந்த பசுஞ்சாணம்) ஏன் ஒட்டிவைத்தனர்?
     15 நாட்களுக்கு ஒருமுறை என இந்த பழக்கம் தமிழர்களிடம் புழக்கத்திலிருந்தது. இதற்கு முக்கிய காரணம், வறட்டிகள் ஒட்டப்பட்ட  சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலையில் இருந்தாலும், குறைந்தளவு வெப்பநிலையையே வீட்டிற்குள் வழங்கும். இதனால் வெயிலின் தாக்கம் வீட்டினுள் குறையும். வெயில் நிமித்தம் வரும் நோய்களை வருமுன்னரே சாணம் விரட்டிடும். வியப்பான விடயம் யாதெனில், எருவாகவுள்ள (ஈரத்துடன்) சாணம் எருக்குழிகளில் உள்ளபோது பயங்கர வெப்பத்துடன் இருக்கும்... மீத்தேன் வாயுவினை உண்டாக்கும். ஈரப்பதம் சற்றும் இன்றி காய்ந்தநிலையில், வறட்டி என்ற பெயருடன், வெப்ப விரட்டி என்ற அந்தஸ்தை பெற்று, வீட்டின் குளிர்விப்பான் (Coolent) ஆகிவிடுகிறது.

2447. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு ஆக்சிஜன் வாயுவை சுவாசிக்கிறான்?
     சுமார் மூன்று சிலிண்டர் அளவு
[ஒரு சிலிண்டரின் விலை 700 ரூபாய். (சில நேரங்களில்) மூன்று சிலிண்டர் என்றால் ஒருநாளைக்கு 2100 ரூபாய். 70 வருடம் சராசரி ஆயுட்காலம் எனில் 5 கோடியை தாண்டும். இயற்கை தாய், என்னிடம் ஐந்து கோடியை தந்து பதிவு செய்தால் தான் உனக்கு ஆக்சிஜன் என்றுவிட்டால் , ஐந்து கோடிக்கு எங்கு செல்ல.....? செல்லும் வரை தாங்கதான் செய்யுமா? இது நகைப்பு மிகுந்த விபரீதமான நிதர்சனம் குறித்த சிந்தனை. இயற்கை தாய் நம்மிடம் கடன் தொகை கேட்பதில்லை. அதனால் தான் இயற்கை, தாய். ஆனால் , எந்த உயிர்களிடமுமில்லா அத்துமீறல்கள் மனித இனத்திடம் உள்ளன. இயற்கை சுரண்டல் அதீதமாக ஆர்ப்பரிக்கும் இக்காலத்தில் அழிவென்ன அரியதா? மரம் என்பது வரம் ! உரம் இட்டு காப்பதன்றோ அறம் !?]


2448. மிக குறைந்த வயதில் உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பெற்ற வீரர்?
     மைக் டைசன்  

2449. பழனி மலையின் தொடரச்சியாக காணப்படும் சுற்றுலாத்தலம்?
     கொடைக்கானல்

2450. இந்தியாவின் முக்கியமான வாணிப பயிர்?
     பருத்தி

கருத்துகள்