முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Gene Regulation


Gene Regulation
Regulation என்றாலே முறைமைபடுத்துதல்தான்! எப்போது இந்த ஜீன்கள்  இயக்கத்திலிருக்கவேண்டும்? எப்போது இந்த ஜீன்கள் இயக்கமற்று இருக்கவேண்டும்  என்பதையெல்லாம் நிர்ணயிப்பதுதான் இந்த Regulation! குறள்வழி சொல்வதென்றால் காலமும் ஞாலமும் கருதி செயல்தான்…உதாரணமாக, ஒரு பல்லியின் வால் விழுந்துவிட்டால், அவ்விடத்தில் அந்த வாலை மீண்டும் முளைக்கச்செய்யும் ஜீன்கள் இயக்கப்படும். வால் முளைத்ததும் அவை அறவே இயக்கமற்றுப்போகும். இவ்வாறு, இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் ஜீன்கள் இயக்கப்பட்டும் இயக்கம் தடுக்கப்பட்டும் இருக்க காரணமே Regulation தான்! Gene regulation refers to the mechanisms and processes by which a cell controls the expression of its genes. It is essential for ensuring that genes are turned on (expressed) or off (repressed) at the right time and in the right context.

Gene regulation is crucial for maintaining the proper functioning of an organism and responding to changing environmental conditions.

Transcriptional Regulation

Transcription என்றாலே, DNA-யின் மரபு தகவல்கள் mRNA-க்குள் வந்து எடுத்துசெல்லப்படும் கதை என அறிவோம். இந்த Transcription-க்கும் ஒரு முறைமை வேண்டுமல்லவா? முறைமை இல்லாமல் Transcription நடந்தால், பெரும்பிழையாகிவிடும்! உதாரணமாக, ஹீமோகுளோபினை நாம் அறிவோம். இது, இரத்த சிவப்பணுக்களில் இருப்பது! இதற்கான மரபுதகவல்களை DNA-யிலிருந்து எடுத்து, இரத்த வெள்ளையணுக்களில் கொண்டுவிட்டுவிட்டால் ஜெகஜோதிதானே?! Transcriptional Regulation involves the control of the initiation of transcription, where a gene's DNA is transcribed into messenger RNA (mRNA). Transcription factors and regulatory sequences on DNA play a significant role in this process.

Translation Regulation

சைட்டோபிளாசத்தை வந்தடையும் mRNA-க்களில் உள்ள மரபு தகவல்களை, ரிபோசோமுக்கு புரியும் வண்ணம் மாற்றுவது Translation! இந்த Translation நடைபெறுவதிலும் முறைமை வேண்டும்… சும்மா சும்மாலாம் இல்லாத பொல்லாதத Translate பண்ணிக்கிட்டிருக்கப்படாது…Once mRNA is in the cytoplasm, it can be controlled at the level of translation. This ensures that the mRNA is translated into protein only when needed.

MiRNA : Translation Regulation நடக்க காரணகர்த்தாவாகயிருப்பதே இந்த Micro RNA தான்! mRNA-யோடு ஒட்டிக்கொண்டு, Translation காலமும் ஞாலமும் கருதி நடைபெற இதுதான் வழிவகுக்கும். MiRNAs can bind to specific messenger RNAs (mRNAs) and influence their stability and translation.

பாலிசோம் : ஒரு Strand தானே RNA-யிடம் உள்ளதென நாம் எளிதாக எடை போட்டுவிடக்கூடாது… இந்த ஒரு Strand பல Strand-களோடு ஒட்டியவாறு சிக்கலான பெரும் அமைப்பை ஏற்படுத்திடும்.. இந்த அமைப்புதான், பாலிசோம்.

NEET : A single strand of mRNA attached to complex of ribosomes is called

(a) Okazaki fragments

(b) polymer

(c) polysome

(d) polypeptide

Answer: (c) Polysome



கருத்துகள்