முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

THE EXCELLENT BRAIN-WASH

 
On a picturesque Wednesday morning, a school bus brimming with pre-KG pupils embarked on a journey through a serpentine road that meandered amidst the untamed wilderness. ஒரு கண்கவரும் (Picturesque) புதன் கிழமையில், மழலை மாணவப்பிஞ்சுகளால் நிரம்பியிருந்த (Brimming) பள்ளி பேருந்து, கட்டற்ற காட்டுவெளியில் (Untamed Wilderness) வளைந்து நெளிந்த சாலையில் (Serpentine Road) பயணம் தொடங்கியது (Embarked on a journey).

As the school bus was a mere 2 kilometers from its destination, the erudite trio of teachers aboard signaled the driver to halt the bus through a gesture. பள்ளி பேருந்து அதன் இலக்கை அடைய வெறும் (Mere) 2 கி.மீ தூரமேயிருக்கும்போது, உள்ளேயிருந்த (Aboard) அறிவிற்சிறந்த (Erudite) மூன்று ஆசிரியர்கள், பேருந்தை நிறுத்துமாறு (halt) ஓட்டுநரிடம் சைகை (Gesture) வாயிலாக கூறினார்கள்.

The little scholars aboard found themselves in a state of bewilderment as the bus came to a halt unexpectedly. The educators asked the youngsters to beseech their deities for a seamless resumption of the bus travel. பேருந்து, எதிர்பாராவிதமாக நிறுத்தப்பட்டதால் உள்ளிருந்த குட்டி மாணவர்கள் (The little scholars aboard) குழப்பநிலையில் (Bewilderment) இருந்தார்கள். ஆசிரியர்கள், தடையில்லாமல் (Seamless) மீண்டும் பேருந்து புறப்பட, குழந்தைகளிடம் அவரவர்தம் தெய்வங்களை வேண்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

Young Thuruv fervently implored his ancestral deity Kulkan, the divine figure his father had guided him to worship. Meanwhile, Mayuri, a girl of distinct heritage, devoutly entreated her revered god Aal, the one her wise grandmother had guided her to revere. Similarly, each of the young pupils on board, guided by their parental wisdom, offered heartfelt prayer to their respective gods so that bus can start as their three teachers preceded . தனது தந்தை வழிபடுமாறு சுட்டிய குல்கன் எனும் தனது குலதெய்வத்தை குட்டிப்பையன் துருவ் தீவிரமாக (Fervently) வேண்டினான் (Implored). இப்படியிருக்கையில், தனது பாட்டி வழிபடுமாறு சுட்டிய ஆல் எனும் தெய்வத்தை மயூரி எனும் தனி பாரம்பரியத்தைச் சார்ந்த குட்டிப்பெண் தொழுதாள் (Revered). இதுபோல, பேருந்திலிருந்த (On board) ஒவ்வொரு மாணவப்பிஞ்சுகளும், “இப்படி செய்தால் பேருந்து தொடங்கும்” என்ற தங்கள் ஆசிரியர்களின் போதனையின்பேரில் தங்கள் பெற்றோர் சுட்டிய தங்கள் தங்கள் தெய்வங்களுக்கு நெஞ்சார்ந்த பிரார்த்தனை வைத்தார்கள்.

With their individual supplications concluded, the students held on to hope that the bus would soon resume its journey as teachers preached. However, the driver without restarting the bus, well aware of the opportune moment, remained patient and poised for that right time to recommence the journey. The realization that their hopes remained unfulfilled gradually settled in their minds. தங்களது தனித்தனி பிரார்த்தனைகளும் முடிந்திட, ஆசிரியர்கள் சொன்னதுபோலவே பேருந்து மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர் மாணவப்பிஞ்சுகள். ஆனால், ஓட்டுநரோ பேருந்தை இயக்காமல், உகந்த நேரம் (Opportune Time) எதுவென நன்கு அறிந்திருந்து, பேருந்தை மீண்டும் தொடங்குவதற்கான சரியான நேரத்திற்காக பொறுமை மற்றும் தயாராகயிருந்தார் (Poised). தங்கள் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை என குழந்தைகள் மனம் இசைந்தது.

Now, the teachers introduced God Agnus as an omnipotent deity whose power surpasses all other gods’ power, including the students’ tribal pantheons like Aal and Kulkan. They insisted the lessons about the deity and encouraged the students to pray Agnus so that the bus can start again. Eventhough the unfamiliar name initially posed a linguistic quandary for their young tongues, the young students earnestly began their supplications to Agnus. இப்போது, ஆக்னஸ் எனும் கடவுள் எல்லாம் வல்ல (Omnipotent) தெய்வமாகவும், மாணவர்களின் இனக்கடவுள்களான (Tribal Pantheons) ஆல் மற்றும் குல்கனின் சக்திகளை விஞ்சுமளவுக்கு (Surpass) சக்தியுள்ளவர் என்றும் ஆசிரியர்கள் அறிமுகம் செய்தனர். ஆக்னஸை பற்றி பாடம் எடுத்துவிட்டு, அவரை பணிந்தால் பேருந்து மீண்டும் துவங்கும் என மாணவர்களை ஊக்குவித்தனர். பழக்கமில்லாத பெயர், இளம் நாக்குகளுக்கு முதலில் ஓர் உச்சரிப்பு சவாலை (Linguistic Quandary) ஏற்படுத்தினாலும் (Posed), மாணவப்பிஞ்சுகள் ஆக்னஸை நோக்கி தீவிரமாக (Earnestly) தங்கள் பிரார்த்தனைகளை (Supplications) தொடங்கினார்கள்.

After they concluded their supplications to Agnus, the teachers discreetly signaled the driver to start the bus. The young students, filled with wonder, began to believe that their appeals to Agnus had been heeded. Simultaneously, they gradually adopted the mindset that their entreaties to their individual deities might have been in vain. The bus resumed its journey, accompanied by the melodious hymns dedicated to Agnus. அவர்கள் ஆக்னஸை நோக்கிய தங்கள் மன்றாடலை முடித்ததும், ஆசிரியர்கள் கவனமாக (Discreetly) பேருந்தை தொடங்குமாறு ஓட்டுநருக்கு சமிக்ஞை காட்டினார்கள். மாணவப்பிஞ்சுகள், ஆச்சரியத்தில் நிரம்பியவர்களாய், ஆக்னஸை நோக்கிய தங்கள் வேண்டல்கள் (Appeals) கேட்கப்பட்டுவிட்டதாக (Heeded) நம்பினார்கள். அதேவேளையில், அவர்கள் தங்களது தனிப்பட்ட சொந்த கடவுளரை நோக்கிய வேண்டுதல்கள் (Entreaties), “வீண்” (Vain) என்ற மனப்பான்மையை ஏற்றுக்கொண்டனர். ஆக்னஸை நோக்கிய இன்துதி பாடியவாறே பேருந்து மீண்டும் பயணந்தொடங்கியது.

Witnessing these abhorrent aspects of the earth, Agnus, The One God revered as Aal by Mayuri and Kulkan by Thuruv, with frowned face, descended upon the Earth astride a majestic white steed, wearing a robe dipped in blood resembling vermillion, accompanied by the sounds of seven thunders. மயூரியின் ஆல் என்றும், துருவ்வின் குல்கன் என்றும் போற்றப்பட்ட (Revered) ஏக பரனாகிய ஆக்னஸ், பூமியின் இந்த அறுவறுப்பான பக்கங்களை (Abhorrent Aspects) கண்டு முகஞ்சுளித்தவாறு (With Frowned Face), ஏழு இடிமுழக்க ஓசைகளோடு, இரத்தத்தில் தோய்ந்த செம்பழுப்பு நிறத்தையொத்த அங்கியணிந்தவராய் (Wearing A Robe), வெண்பரியேறி அமர்ந்து (Astride A White Steed), பூமியின் மீது இறங்கினார்.

கருத்துகள்