முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

THE MONGOOSELINESS

 

In a hamlet nestled between meandering rivers, there resided a rustic agrarian. Approaching the prime of his third decade, he held an unwavering affection for every botanical inhabitant adorning his verdant enclav. வளைந்து செல்லும் (Meandering) ஆறுகளுக்கு இடையே அமையப்பெற்ற (Nestled) கிராமமொன்றில், எளிமையான/ பட்டிக்காட்டுத்தனமான (Rustic) விவசாயி (Agrarian). இருந்தான். முப்பது வயதின் முழுமையை (Prime) நெருங்கும் அவன், தனது பசுமையான (Verdant) நிலப்பகுதியை (Enclave) அலங்கரித்திருந்த (Adorning) அனைத்து தாவரங்களின் (Botanical Inhabitants) மீதும் திண்மையான / உறுதியான (Unwavering) ஈர்ப்பு கொண்டிருந்தான்.


One fine day, as he irrigated his lush garden, he stumbled upon a fledgling mongoose nestled beneath the obsidian honey shrub. The diminutive creature bore a striking resemblance to a neonate human infant, devoid of any fur adorning its delicate form. ஒரு நாள், அவன் தனது பசுமையான (Lush) தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய (Irrigated) போது, பூலாத்தி புதரின் (Black Honey Shrub) அடியில் ஒரு கீரிப்பிள்ளைக் குட்டியைக் (Fledgling :: Young) கண்டு அதிர்ச்சியுற்றான் (Stumbled). அது, அதன் நுணுக்கமான (Delicate) உடலை அலங்கரிக்கும் (Adorning) உரோமங்கள் ஏதும் அற்று (Devoid) அப்படியே ஒரு புதிதாக பிறந்த (Neonate) குழந்தையைப் (Infant) போன்ற தோற்றம் கொண்டிருந்தது.


The solitary presence of the baby mongoose appeared anomalous, given that mongooses typically bear multiple offspring in a single litter. Observing its plaintive cries of hunger amidst the perilous swarm of ebony ants, he resolved to take the orphaned mongoose under his wing, deciding to foster the tiny creature alongside him. ஓர் ஈற்றில் (Litter) பல குட்டிகளை கீரிப்பிள்ளை ஈனும் (Bears) என்றிருக்கையில் தனித்துக் கிடந்த கீரிப்பிள்ளைக் குட்டி, வழக்கத்திற்கு மாறானதாக (Anomalous) இருந்தது. ஆபத்தான (Perilous) கரும் எறும்புகளின் கூட்டத்துக்கு (Swarm) ஊடே கிடந்த, அதன் பாவம்போன்ற (Plaintive) பசி அலறலை கேட்டு, கவனிக்க யாருமில்லாத (Orphaned) அதை தனது பாதுகாப்பில் (Under his wing) தன்னோடு தத்தெடுத்து வளர்க்க (Foster) தீர்மானம் கொண்டான்.

He gently caressed the tender frame of the infant mongoose. In that fleeting moment, the fledgling creature seemed to sense the maternal presence it yearned for, eagerly anticipating nourishment. Sympathy welled within the farmer's heart as he beheld the sight of the yet-unopened eyes of the tiny mongoose and its elongated, infantile tongue questing for sustenance. அவன் குட்டி கீரிப்பிள்ளையின் மெல்லுடலை (Tender Frame) பணிவாக தொட்டான் (Caressed). சட்டென்று (In that fleeting moment), தான் ஏங்கி கொண்டிருந்த (Yearned for) தனது தாய் வந்ததாக உணர்ந்து, பசியாறுமென எதிர்பார்த்தது (Anticipating: எதிர்பார்த்தல் Nourishment: உணவூட்டம்) குட்டி கீரிப்பிள்ளை. இன்னமும் விழிக்காத கண்களையும், உணவை (Sustenance) தேடும் வெளிநீண்ட குழந்தை நாக்கையும் கண்டதும் (Beheld), பாவம்போல உணர்ந்தான் விவசாயி.


He enveloped the infant mongoose in the folds of the cloth draped upon his head, soothing the tiny creature's trepidation. With gentle care, he cradled the baby mongoose within the fabric, embarking on the journey to his abode. தனது தலையில் சுற்றியிருந்த (Draped) துண்டினில் குட்டி கீரிப்பிள்ளையை எடுத்து, அதனை பயந்தெளித்தான். பணிவான அக்கறையுடன், துணியில் அதை பிடித்துக்கொண்டு (Cradled : To hold or support something, especially gently and protectively, as if holding a baby in one's arms) தனது இருப்பிடம் (Abode) நோக்கி பயணம் தொடங்கினான்.



As he carried the baby mongoose within his towel, it emitted melodic sounds akin to an infant's cries. The farmer mollified the tiny creature by tenderly caressing its cranium with his hands. Its hue bore a delicate shade of light pink, with fingers, mouth, and ears adorned in a vibrant hue of rosy pink. அதை தனது துண்டினுள் வைத்து எடுத்துசெல்லுகையில், அது குழந்தை அழுகையை போன்ற சத்தம் எழுப்பியது. அதன் தலையை (Cranium) தன் கைகளால் பணிவாக வருடிவிட்டு (Caressing) அதை அமைதிபடுத்தினான் (Mollified). அதன் நிறம் (Hue) நுணுக்கமான இளஞ்சிவப்பு கலந்ததாகவும் (Shade of Pink), அதன் விரல்கள், வாய் மற்றும் காதுகள் அடர் இளஞ்சிவப்பு நிறத்திலும் அழகுற்று இருந்தன.


Upon bringing the infant mongoose to their homestead, he presented it to his wife, who was enamored by the baby-like visage of the creature. In their abode, a six-month-old babg dwelled. The sight of the mongoose's pinkish digits enraptured her, leading to a delightful interaction. குட்டி கீரிப்பிள்ளையை தனது தனது வசிப்பிடத்திற்கு (Homestead) கொணர்ந்து, அதன் குழந்தை போன்ற முகத்தோற்றத்தை (Visage) அதிகம் நேசித்த (Enamored) தனது மனைவியிடம் அளித்தான்‌. அவர்களது வசிப்பிடத்தில் ஓர் ஆறுமாத குழந்தை இருந்தது. கீரிப்பிள்ளையின் இளஞ்சிவப்பு நிற விரல்கள் (Digits) அவனது மனைவியை மகிழ்ச்சியுறச் (Enraptured) செய்து, பூரிப்புடன் அணுகவைத்தது.


They procured an extra bottle of milk, one intended for the baby mongoose. Currently, they possessed two bottles, one allocated to their baby and the other to the latest addition to their famil. அவர்கள் குட்டி கீரிப்பிள்ளையை கருத்தில் கொண்டு மேலுமொரு பால் பாட்டில் வாங்கினார்கள்‌. அவர்களிடம் அப்போது, குழந்தைக்கொன்று மற்றும் புதிதாக அவர்களது குடும்பத்தில் சேர்ந்தவருக்கொன்றென இரண்டு பால் பாட்டில்கள் இருந்தன.


Within a rattan container, typically employed for the safekeeping of garden produce, they replete it with a generous mixture of hay and cotton sponges, rendering it exceedingly plush. Following the nourishment, they allowed the baby mongoose to repose within this makeshift cradle. தோட்டத்தின் விளைச்சல்களை பத்திரப்படுத்தி வைக்க வைத்திருந்த, பிரம்பினால் (Rattan) செய்யப்பட்ட கூடையினுள், மிருதுவான வைக்கோல் (Hay) மற்றும் பருத்தி பஞ்சினால் நிரப்பி (Replete: Filled or abundantly supplied with something) அதை அதிக பஞ்சு பஞ்சென (Plush) ஆக்கினார்கள். குட்டி கீரிப்பிள்ளைக்கு ஊட்டமளித்ததும் (பால்), கிடைத்ததையெல்லாம் வைத்து உருவாக்கிய (Makeshift: A temporary and improvised solution or arrangement, often used when themergence of a lustrous ebony coat. It displayed remarkable civility in their presence, often accompanying the farmer, perching on his shoulder, or gracefully trailing him on his excursions. அவனது மனைவி இரு குழந்தைகள் மீதும் அதீத அன்பு வைத்திருந்தாள். குறிப்பிடும் வகையில், குட்டி கீரிப்பிள்ளை, அவர்களது பிள்ளையின் வளர்ச்சியை விஞ்சி வேகமாக வளர்ந்தது. அதன் குழந்தைமேனியில் ஜொலிக்கும் (Lustrous) கரும் உre's a need to create something quickly and with available materials, even if it's not ideal or permanent) சிறு தூங்குதொட்டிலில் (Cradle) ஓய்வெடுத்துறங்க (Repose) விட்டார்கள்.


His spouse harbored a profound affection for both their offspring. Remarkably, the baby mongoose exhibited rapid growth, surpassing the infant's development pace. Its once-naked form had given way to the emergence of a lustrous ebony coat. It displayed remarkable civility in their presence, often accompanying the farmer, perching on his shoulder, or gracefully trailing him on his excursions. அவனது மனைவி இரு குழந்தைகள் மீதும் அதீத அன்பு வைத்திருந்தாள். குறிப்பிடும் வகையில், குட்டி கீரிப்பிள்ளை, அவர்களது பிள்ளையின் வளர்ச்சியை விஞ்சி வேகமாக வளர்ந்தது. அதன் குழந்தைமேனியில் ஜொலிக்கும் (Lustrous) கரும் உரோமங்கள் வளரலாயின. எப்போதும் விவசாயி உலா (Excursion) செல்லுகையில், அவனோடு அவன் தோளில் அமர்ந்தவாறோ (Perching : Resting) அல்லது அவனை பின்தொடர்ந்தவாறோ (Trailing) சென்று அவர்கள் மீது பேரன்பை/விசுவாசத்தை (Civility) கீரிப்பிள்ளை வெளிப்படுத்தியது.


It proved invaluable to the farmer, efficiently consolidating the vegetables harvested from his garden. Its swiftness in gathering and transporting the produce to a central location was impressive. During the afternoon hours, they sought reprieve beneath the shade of a tree, savoring their meal of porridge. கீரிப்பிள்ளை, தோட்டத்தில் அறுவடை செய்த காய்கறிகளை எடுத்துவந்து குவித்துவைப்பதில் பயனளித்தது. காய்கறிகளை குவித்துவைத்து பின் எடுத்துசெல்வதில் அதன் வேகம் கவரும் வண்ணம் இருந்தது. அவர்கள் மதியநேரம், மரத்தடியில் கூழ்கஞ்சியை (Porridge) குடித்து மகிழ்ந்திருக்கும் (Savoring) ஓய்வை தேடினார்கள்.


The diligent farmer reaped the paddy crop and stored the sacks within the confines of his abode. Amidst the grain-laden sanctuary, they fashioned a snug nook for their baby to sleep in cradle. The farmer's spouse sang a tender lullaby, coaxing the baby into peaceful slumber. கண்ணியமிகுந்த (Diligent) விவசாயி, நெல் அறுவடை செய்து அதனை தன் இருப்பிடத்தில் மூட்டைகளில் வைத்திருந்தான். தானியம் நிறைந்த (Laden) சேமிப்பகத்திற்கு (Sanctuary) ஊடே, தங்கள் குழந்தை, தொட்டிலில் உறங்க, ஒரு சிறிய இடத்தை (Nook) ஏற்படுத்தினர் (Fashioned). இதமான உறக்கத்தில் (Slumber) குழந்தையை வைக்க (Coaxing), விவசாயியின் மனைவி இனிய தாலாட்டு பாடினாள்.


On a particular day, while their infant slumbered peacefully in the cradle, an unwelcome guest in the form of a cobra slithered into their home. The farmer's wife was occupied with her task of fetching water in bot, while the farmer toiled away in the garden. The sole occupants of the dwelling at that moment were their cherished baby, the mongoose, and the newly arrived serpent. ஒரு நாள், அவர்களது குழந்தை தொட்டிலில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த (Slumbered) போது, அழையா விருந்தாளியாக ஒரு நாகம் அவர்களது வீட்டினுள் சன்னமாக வந்தது (Slithered). விவசாயியின் மனைவி, குடத்தில் நீர் எடுத்துவரச்சென்றும், விவசாயி தோட்டவேலையில் ஈடுபட்டும் (Toiled) இருந்தார்கள். அந்நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் அவர்களது அன்பு குழந்தையும், கீரிப்பிள்ளையும், புதிதாக வந்த பாம்பும் தான்!


The mongoose, perceiving the cobra's stealthy approach toward the cradle, initiated an urgent alert and engaged in combat with the intruder. Despite suffering three venomous bites from the serpent, the mongoose remained resolute, retaliating by clawing at the snake with its formidable nails and sharp teeth. நாகத்தின், தொட்டிலை நோக்கிய சன்னமான (யாரும் காணாத வண்ணம்) நகர்வை (Stealthy Approach) கவனித்ததும், சத்தமெழுப்பி, அத்துமீறி உள்நுழைந்தவரான (Intruder) நாகத்தோடு சண்டையிட்டது கீரிப்பிள்ளை. பாம்பிடமிருந்து மூன்று விசக்கடிகளால் பாதிக்கப்பட்டும், கீரிப்பிள்ளை உறுதியாகயிருந்து (Resolute), தனது பயங்கரமான (Formidable) நகத்தாலும், கூரிய பற்களாலும் பாம்பை கீறி (Clawing) பழிவாங்கியது (Retaliated).


The mongoose fiercely sank its teeth into the serpent's body, endeavoring to sever it. In a relentless struggle, it cleaved the snake's form into five distinct segments, ultimately leading to the demise of the reptile. Meanwhile, the baby slumbered undisturbed in peaceful repose, unaware of the tumultuous battle. The mongoose's mouth bore the crimson evidence of the fierce encounter. கீரிப்பிள்ளை வலுவாக (Fiercely) தனது பற்களை பாம்பின் உடலில் ஆழ்த்தி (Sank : Past tense of sink), அதன் உடலை துண்டாக்க (Sever : செவ்எ : To cut off) அயராது முயற்சித்தது (Endeavoring). முடிவில்லா (Relentless : ரிலன்ட்லெஸ்) சண்டையில், இறுதியில் பாம்பு சாகும்படியாக, பாம்பின் உடலை ஐந்து துண்டங்களாக கீரிப்பிள்ளை வெட்டித்தள்ளியது (Cleaved). இப்படி இருக்கையில் (Meanwhile), குழந்தை தொந்தரவின்றி, இந்த அமளியை (Tumultuous Battle) அறியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. கீரிப்பிள்ளையின் வாயில் பயங்கரமான தாக்கத்தினால் அடர் செந்நிற/இரத்தச் சுவடுகள் இருந்தன.


The farmer's wife cautiously entered the room, balancing a brimming pot of water, only to be greeted by the disconcerting sight of crimson stains besmirching the floor. Panic surged within her. Beneath the cradle, a gruesome scene unfolded, with traces of blood marring the area. Her gaze fell upon the mongoose, whose mouth bore vestiges of blood. விவசாயியின் மனைவி கவனத்துடன் நிரம்பி வழியும் (Brimming) குடத்தை ஏந்தி, அறையினுள் நுழைய, தரையை கலங்கப்படுத்தியிருந்த (Besmirching) இரத்த கறைகளைக் கண்டு, மனம் நொந்துபோனாள் (Disconcerting). அவளுள் பதற்றம் எழுந்தது (Surged). தொட்டிலுக்கு அடியில் (Beneath), இரத்தக்கறைகள் தரையை கொடூரமாக்கி (Marring) இருந்த பயங்கரமான (Gruesome) காட்சி தென்பட்டது. இரத்த அடையாளங்களை (Vestiges) கொண்டிருந்த கீரிப்பிள்ளையின் வாயின் மீது, அவளது பார்வை விழுந்தது.




In her apprehension, she harbored the notion that the mongoose had inflicted harm upon the infant, causing bleeding. Without additional contemplation, consumed by intense trepidation, she impulsively hurled the pot upon the mongoose. The mongoose met its demise in palpable agony. தனது மனத்தில், கீரிப்பிள்ளைதான் குழந்தையை கடித்து ரத்தம் வரச்செய்தது என்ற எண்ணம் கொண்டாள். மேலும் யோசியாமல், அதீத பயத்தால், சற்றும் கருதாமல் நீர் நிரம்பிய குடத்தை கீரிப்பிள்ளையின் மீது வீசினாள். அது, துடிதுடித்து இறந்தது.


The pristine white underside of the cradle, previously untouched by even the faintest trace of blood, was now tainted a vivid crimson as it came into contact with the mongoose's life force. The peaceful slumber of the baby was abruptly shattered by inconsolable cries upon the mongoose's demise. The farmer's wife, in her dismay, observed the serpent, now divided into distinct segments. துளியளவு (Faintest) ரத்தக்கறை கூட படியாத தொட்டிலின் அடிப்பகுதியில், கீரிப்பிள்ளையின் ரத்தம் படிந்தது (Tainted). கீரிப்பிள்ளையின் பரிதாப மரணத்தால், குழந்தையின் அமைதியான தூக்கம் திடீரென (Abruptly) கழைந்தது. விவசாயியின் மனைவி, பாம்பு துண்டாக்கப்பட்டுக் கிடப்பதை பயத்தோடு கவனித்தாள்.


She peered into the cradle, finding the baby unscathed and free from any bodily harm. She suddenly realized the chain of events and her impulsive actions. அவள் தொட்டிலினுள் பார்வையிட, அங்கு குழந்தை எவ்வித காயமுமின்றி (Unscathed) இருந்தது. அவள் யோசியாமல் செய்த செயல்களை (Impulsive Actions) உணர்ந்தாள்.


She came to recognize the benevolent nature of the mongoose and regretted her impetuous choice. After a moment of solemn silence, she broke into inconsolable tears, grieving deeply for the departed creature. The farmer, upon entering the room, swiftly grasped the situation. கீரிப்பிள்ளையின் நற்குணத்தையும் (Benevolent Nature) தனது சற்றும் யோசியாமல் எடுத்த முடிவையும் (Impetuous Choice) உணர்ந்தாள். ஒரு நிமிட தீவிர அமைதிக்குப் (Solemn Silence) பின்னர், கீரிப்பிள்ளையை எண்ணி வருந்தி பயங்கரமாக அழுதாள். விவசாயி, அறையினுள் நுழைந்ததும் சூழ்நிலையை உணர்ந்தான்.


The farmer stood in somber silence, his eyes moist with tears cascading down his cheeks. His wife, reflecting on the once-pinkish paws of the mongoose upon its arrival, now stained crimson, wept uncontrollably. Her sorrow was overwhelming. The farmer, moved by empathy, offered solace and comfort. விவசாயி, கண்களில் நீர் ததும்பி கன்னங்களில் வடிய (cascading), அதீத அமைதியில் (Somber Silence) நின்றான். அவனது மனைவி, முதல்முறை வீட்டிற்கு கொண்டுவரும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த கீரிப்பிள்ளையின் கைகள் இப்போது இரத்த கறைபடிந்திருப்பதை எண்ணி கட்டின்றி அழுதாள். இரக்கத்துடன் விவசாயி, அவளை அரவணைத்து தேற்றினான்.


With utmost tenderness, he placed the lifeless mongoose within the prepared resting place and offered his tears. He proceeded to inter it in the earth, gently covering it with soil. Meanwhile, his wife lamented the mongoose's defense of their infant against the serpent and expressed remorse over her hasty actions. மிக பணிவுடன், கீரிப்பிள்ளையின் உடலை குழியில் வைத்து, கண்ணீர் சிந்தினான். அதனை மண்ணில் தகனித்து (Inter) மண்ணால் மூடினான். இப்படியிருக்கையில், அவனது மனைவி, கீரிப்பிள்ளை தங்களது குழந்தையை பாம்பிடமிருந்து காத்ததை புலம்பி, தனது அவசர அசைவுகளுக்காக பெருவருத்தம் (Remorse) கொண்டாள்.


Impetuous decisions can usher us into irreversible anguish throughout our journey. Live life to the fullest extent, always striving to ensure it doesn't bring harm to others. ஆராயாமல் எடுக்கும் முடிவுகள் (Impetuous Decisions), நம் வாழ்க்கை பயணத்தில், மீளா துயருக்கு (Irreversible Anguish) நம்மை இட்டுச்செல்லும் (Usher). வாழ்வை, அதன் முழுமையில், யாருக்கும் தீங்கிழைக்கா வண்ணம் வாழ்க.

கருத்துகள்