முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

THE SERPENTINE PRINCE


 
The destitute old woman, bereft of sustenance, made her way to the riverbank, intent on both fishing and bathing. அடிப்படை வசதிகள் கூட இல்லாத (Destitute) ஒரு மூதாட்டி, உணவு (Sustenance) இல்லாதவளாய் (Bereft of), மீன்பிடிக்கவும் குளிக்கவும் உறுதிபூண்டு, நதிக்கரைக்கு வழிநடந்தாள்.
 

Emerging from the river's cool embrace, she was aghast to discover a venomous serpent nestled within her fishing pot. ஆற்றின் இதமான தழுவலிலிருந்து வெளியேறிய மூதாட்டி, தனது மீன்பிடி கூடையினுள் ஒரு பாம்பு வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியானாள் (Aghast).
 

She hesitated for a moment but decided to bring the serpent to her humble dwelling, hoping it might end her relentless misery . ஒரு கணம் தயங்கினாலும் (Hesitated), அது தனது ஆறா துயரத்தை (Relentless Misery) போக்குமென எண்ணி தன் இருப்பிடத்திற்கு கொணர தீர்மானித்தாள்.
 
However, when she cautiously uncovered the pot, to her astonishment, she didn't find a snake but instead a splendid and opulent necklace. கவனத்துடன் அந்த கூடையை அவள் திறந்தபோது, அவளை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் (To her astonishment) பாம்பிற்கு பதிலாக கண்ணை கவரும் (Splendid) மதிப்புமிகுந்த (Opulent) கழுத்தணி ஒன்றைக் கண்டாள்.
 
The old woman, now torn between hope and skepticism, decided to sell the extravagant necklace to the king, hoping it would alleviate her poverty. மூதாட்டி, நம்பிக்கை மற்றும் குழப்பத்திற்கு (Skeptism) இடையே முடிவெடுக்க முடியாதவளாய் (Torn between), தனது வறுமை தீர்க்கப்படும் (Alleviate) என நம்ப, அதிக மதிப்புள்ள (Extravagant) அந்த கழுத்தணியை மன்னனிடம் கொடுக்க தீர்மானித்தாள்.
 
The king, intrigued by the splendid ornament, placed it in a secure chest within his palace, unaware of the magical surprise it held. அரசன், அந்த கவர்ச்சிகரமான (Splendid) ஆபரணத்தால் ஆவல் தூண்டப்பட்டு, அது கொண்டிருந்த மந்திரசக்தியை அறியாமல் அதை தனது அரண்மனையினுள் ஒரு பாதுகாப்பான பெட்டியில் வைத்தான்.
 
To the astonishment of both the king and queen, when they opened the chest to exhibit the splendid necklace, they were met with an unexpected and magical sight. அரசரும் அரசியும் அந்த கண்கவரும் கழுத்தணியை பார்வையிட (To exhibit) பெட்டியை திறக்கையில், அவர்களை ஆச்சரியப்படுத்தும் வண்ணம் (To their astonishment) எதிர்பாராத விதமாக ஒரு மாயக்காட்சியை கண்டார்கள்.
 
Instead of the precious ornament, they beheld a newborn baby boy nestled within the chest, who would forever change their live. மதிப்புவாய்ந்த ஆபரணத்திற்கு பதிலாக, தங்கள் வாழ்வையே மாற்றத்தக்க, தற்போதே பிறந்த குழந்தை பெட்டியினுள் இருப்பதைக் கண்டார்கள் (Beheld).
 
The king and his wife, both astonished and overjoyed, decided to raise the foundling as their own son, while the old woman, who had become his nurse, spoke of the extraordinary circumstances of his arrival. அரசனும் அவனது மனைவியும், வியப்பு மற்றும் பேரின்பமடைந்து (Astonished and Overjoyed), கண்டெடுத்த குழந்தையை (Foundling) தங்கள் சொந்த மகனாக வளர்க்க தீர்மானிக்க, அக்குழந்தைக்கு செவிலித்தாயாக மாறிய மூதாட்டி, அக்குழந்தை எப்படி வந்தது என்பது குறித்தான வழக்கத்திற்கு மாறான சூழல்களை பற்றி பேசினாள்.
 
As the years elapsed, the young prince matured into a noble and virtuous gentleman, cherished by his regal parents and adored by the populace of the realm. வருடங்கள் ஓடிட (Elapsed), இளவரசன் தனது ராஜ பெற்றோர்களால் (Regal Parents) மகிழப்பட்டும் (Cherished), இராச்சியத்தின் மக்களால் (The Populace of The Realm) நேசிக்கப்பட்டும் (Adored), நேர்மைமிக்க (Noble) நீதிமானாக (Virtuous Gentleman) வளர்ச்சியடைந்தான்.
 
The king decided that their offspring should be wed with the neighbouring king’s daughter. When the neighboring king's daughter was about to be married, her mother warned her to inquire about the enchantment of how the prince was born . அரசர், தனது குலக்கொழுந்து (Offspring), அண்டைநாட்டு மன்னனது மகளை மணம்புரிய (should be wed with) தீர்மானித்தார். திருமணமாகும் தருவாயில் இளவரசனின் மாயமான பிறப்பை (The Enchantment of how the prince was born) விசாரிக்குமாறு அண்டைநாட்டு மன்னனது மகளை, அவளது தாய் எச்சரித்தாள்.
 
The princess, steadfast in her determination, refused to speak until the young prince revealed his extraordinary tale as a distant prince turned into a serpent and back again. இளவரசி, தனது தீர்மானத்தில் உறுதிபூண்டு நின்று (Steadfast in her determination), எங்கோ இளவரசனாகயிருந்து, பின் பாம்பாக மாறி பின்னர் மீண்டும் இளவரசனாக வந்திருக்கும் விநோத கதையை இளவரசன் கூறும்வரை, பேச மறுத்தாள்.
 
After her husband vanished, recounting the enchanting tale of his birth, the princess was engulfed by sorrow and a profound yearning for her metamorphosed spouse. தனது பிறப்பின் மாயம் நிறைந்த கதையை கூறி (Recounting) அவளது கணவன் மறைந்துபோக, இளவரசியை சோகமும், உருமாறிபோன தனது துணைவனுக்கான (Metamorphosed Spouse) ஆழ்ந்த ஏக்கமும் சூழ்ந்தது (Engulfed).
 
To her astonishment, the disappeared husband as a snake eventually approached her, advising her to place bowls of milk and sugar in each of the room's four corners to summon many serpents, led by their Queen, who could help reunite her with her beloved husband. அவளை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், மறைந்த கணவன் பாம்பாக அவளை அணுகி, மீண்டும் தன் பிரியமான கணவனோடு இணைய உதவும் ராணி பாம்பினால் வழிநடத்தப்படும் பல பாம்புகளை வரவழைக்க (To Summon), அறையின் நான்கு மூலைகளிலும் கிண்ணத்தில் பால்-சர்க்கரை வைக்குமாறு, ஆலோசனை அளித்தான்.
The princess diligently heeded the serpent's counsel, arranging vessels of milk and sugar in every nook of the chamber, with hopeful anticipation of the impending serpent assembly. இளவரசி, மிகுந்த கவனத்துடன் (Diligently) பாம்பின் ஆலோசனையில் கவனஞ்செலுத்தி (Heeded), அறையின் எல்லா மூலைகளிலும் (Every nooks of the chamber) பால்-சர்க்கரை பாத்திரங்களுக்கு ஏற்பாடு செய்து, நடக்கவிருக்கும் (Impending) சர்ப்ப அணிவகுப்பிற்காக நம்பிக்கைமிகுந்த எதிர்பார்ப்புடனிருந்தாள் (Hopeful Anticipation).
 
As the Monarch serpent guided her serpentine retinue into the room, the princess stood resolute, poised to beseech the reinstatement of her spouse. ராணி பாம்பு தனது சர்ப்ப அணிவகுப்பை (Serpentine Retinue) அறையினுள் வழிநடத்த, இளவரசி மீண்டும் தனது கணவனை பழைய நிலையாக்க (Reinstatement) கேக்க (Beseech) தயாராகி (Poised) உறுதியோடு நின்றாள் (Stood Resolute).
 
The Queen serpent, a majestic and formidable creature, regarded the princess with a piercing gaze before asking her what she desired in exchange for her husband's return. மேன்மை மற்றும் மரியாதைக்குரிய (Formidable) ராணிப்பாம்பு, கணவனை மீட்டுத்தருவதற்கு பதிலீடாக தான் விரும்பிவைத்திருந்ததை கேட்பதற்கு முன்னர், இளவரசியை கூரிய பார்வையுடன் (Pierce Gaze) கவனித்தது (Regarded).
 

With unwavering determination, the princess looked into the Queen's serpentine eyes and implored, "Oh Great Queen! Grant me the return of my beloved husband, and I shall forever be in your debt". அசையா தீர்மானத்துடன், ராணியின் பாம்புக்கண்களை உற்றுநோக்கிய இளவரசி, “சிறந்த ராணியே, என் கணவனை மீட்டுத்தாருங்கள்; என்றும் நான் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன்” என கெஞ்சினாள் (Implored).
 
The Monarch serpent, sagacious and discerning, recognized the authenticity of the princess's intentions and consented to reunite her with her metamorphosed spouse. The princess, brimming with thankfulness, witnessed as the serpentine sovereign conjured her enchantment, altering the serpentinely metamorphosed husband back into her cherished husband . அறிவு மிகைத்த (Sagacious : சகேஷஸ்) மற்றும் நீதிநிறைந்த (Discerning) ராணிப்பாம்பு, இளவரசியின் எண்ணத்திலிருந்த உண்மைத்தன்மையை (Authenticity) உணர்ந்து, உருமாறிய (Metamorphosed) அவளது துணைவனோடு மீண்டுமிணையவைக்க சம்மதித்தது (Consented). நன்றியுணர்வால் நிறைந்து (Brimming with Thankfulness) ததும்பிய இளவரசி, பாம்பு ராணி தனது மந்திரத்தை (Enchantment) உபயோகித்து/பிரயோகித்து (Conjured) பாம்பாக உருமாறிபோன தனது கணவனை மீண்டும் பாசத்திற்குரிய கணவனாக மாற்றுவதைக் கண்டாள் (Witnessed).
 
As the serpentine queen seized its enchantment , the serpent metamorphosed back into the prince, and the princess's heart brimmed with jubilation upon their reunion. The youthful prince, now renewed to his human state, enfolded his princess with deep tenderness, appreciative of her steadfast affection and resolve. பாம்பு ராணி தனது மந்திரத்தை நிறுத்தியதும் (Seized) பாம்பு மீண்டும் இளவரசனாக உருமாற, இளவரசியின் இதயம் அவர்கள் மீண்டும் இணைவதனால் பேரானந்தத்தில் (Jubilation : ஜூபுலேஷன்) நிரம்பி வழிந்தது (Brimmed). வாலிபமிக்க இளவரசன், மீண்டும் மனிதநிலையை அடைந்து (Renewed into his human state), இளவரசியை ஆழ்ந்த அன்போடு (Deep Tenderness) தழுவி (Enfolded : இன்ஃபோல்டட்) அவளது வர்மமாய் நிலைத்திருந்த ஈர்ப்பு மற்றும் உறுதியை (Steadfast affection and resolve) பாராட்டினான்.
Their love, stronger than ever, would endure all trials, and together, they ruled the kingdom with wisdom and benevolence. அவர்களது காதல், எப்போதிலும் வலுத்ததாய், பல சூழல்களிலும் நீடித்ததாயிருக்க, ஒன்றாக அறிவு மற்றும் அறவ ழியில் ராச்சியத்தை ஆண்டார்கள்.

கருத்துகள்