முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

THE SOUTHERN BOY

 

In a bygone era, within a Southern township, amidst a petite hamlet teeming with canthium vegetation, interspersed with rocky outcrops, and bedecked with resplendent glory lilies, dwelled a burgeoning young bo. முன்னொரு காலத்தில் (In a bygone era), தெக்கத்தி சீமையில் (Southern Township), காரை மரங்கள் (Canthium Vegetation) நிறைந்தும் (Teeming with), பூமியை விட்டு மேலெழும்பிய பாறைகளால் (Rocky Outcrops) நிறைந்தும், அழகுற‌ மின்னும் (Resplendent ) செங்காந்தள் மலர்களால் வனப்பூட்டப்பட்டும் (Bedecked with) இருந்த சிறு கிராமத்தில் (Petite Hamlet), ஒரு வளரும் (Burgeoning : பர்ஜனின்) இளந்தாரிப் பையன் இருந்தான்.

The young lad found himself devoid of companionship, akin to a vacant receptacle. He had borne witness to myriad arduous circumstances, having naught to forfeit. அந்த இளம் பையன் தன்னிடம் கதைக்க யாருமில்லை (Devoid of companionship) என உணர்ந்து, தன்னை ஒரு வெற்று பாத்திரம் (Vacant Receptacle) போல எண்ணியிருந்தான். இழப்பதற்கு ஏதுமின்றியும் (Naught to forfeit) அதிகபடியான (Myriad) கடின (Arduous) சூழலை பார்த்து தாங்கியும் (Borne), இருந்தான்.

Despite perceiving the liveliness of the quails and feral felines, his vision was confined to the obsidian hue. Notwithstanding the auditory presence of wasps and crickets, his hearing was bound by the obsidian hue. While capable of experiencing both delight and suffering, his emotions resonated solely with the obsidian hue. கௌதாரி பறவைகள் மற்றும் காட்டு விருகுகளின் (Feral Felines) உயிர்ப்பை அவனால் காணமுடிந்தும், அவனது பார்வை கருமைக்குள்ளேயே (Obsidian Hue) தங்கியது. கடந்தை மற்றும் விட்டில்களின் ஓசை இருந்தபோதும் (Notwithstanding), அவனது செவி, கருமைக்குள்ளேயே தங்கியது. இன்பதுன்பங்களை உணரமுடிந்திருந்தபோதும், அவனது உணர்ச்சிகள் கருமைக்குள்ளேயே தங்கின‌.


The Rocky Outcrops were adorned with vibrant cyan lichens. There existed an age-old tale of a valorous warrior who possessed a luminous beacon, dashing through the velvety obscurity of evening within the village. An aura of trepidation, conscientiousness and tranquillity enveloped the village due to his presence. However, owing to the boy's all-encompassing vision of an ebony void, his perception rendered everything uniform, void of fluctuations in emotions like fear. பூமியிலிருந்து மேலெழும்பிய பாறைகள், பளிச்சென்ற (Vibrant) நீலபசும் நிற (Cyan) கற்பாசிகளால் (Lichens) அழகூட்டப்பட்டு (Adorned) இருந்தது. பிரகாசமான தீப்பந்தம் (Luminous Beacon) ஏந்தி, அந்திமாலையின் மென்மையான (Velvety), மங்கலின் (Obscurity) ஊடாக, விரைந்தோடும் (Dashing) பலத்த தைரியமிக்க (Valorous) அதிவீரன் ஒருவனின் தொன்மையான கதை ஒன்று கிராமத்தில் இருந்தது. அவனது இருப்பால், ஒருவித பயமும், தவறு செய்ய அஞ்சும் மனநிலையும் (Conscientiousness), அமைதியும் (Tranquillity) கொண்ட நெடி, அந்த கிராமத்தை சூழ்ந்திருந்தது (Enveloped). ஆயினும், அனைத்தையும் வெற்று கருமையுள் (Ebony Void) அடக்கும் (Encompassing) அந்த பையனது பார்வை, அனைத்தையும் ஒருபோலவே அவனுக்கு காட்டியதால், பயம்‌ முதலான உணர்வுகளில் ஏற்ற இறக்கம் ஏதுமின்றி அனைத்தையும் அவன் ஒன்றாகவே உணர்ந்தான்.
 

He discovered a serene sanctuary beneath a majestic banyan tree. This grand arboreal giant boasted an abundance of roots suspended like natural tapestries. The young lad, harboring an aversion to human presence, settled beneath the tree's expansive canopy, his gaze fixed upon the apex of his own nasal bridg. அவன் பிரம்மாண்டமான ஓர் ஆலமரத்தின் அடியில், அமைதியான (Serene) இடத்தை (Sanctuary) கண்டறிந்தான். அந்த பிரம்மாண்ட பெரிய மரம், இயற்கையான அலங்கார தோரணங்கள் (Tapestries) போல, (Grand Arboreal Giant), அதிகபடியான ‌(Abundance) அளவில் தனித்து தொங்கும் விழுதுகளை ரம்மியமாக காட்டியவாறு (Boasted) இருந்தது. மனித இருப்பினை அறவே வெறுத்த (Aversion to human presence) அந்த பையன், மரத்தின் விரிந்த கூரையின் (Canopy) கீழ், அமர்ந்தான். அவனது பார்வை (Gaze), அவனது மூக்கின் நுனியில் குவிந்தது.


He remained seated there for extended periods, fixating his gaze upon the tip of his own nose. Frequently, his sight beheld the spectacle of sheep grazing, snakes slithering, and skinks darting about. தனது பார்வையை மூக்கின் நுனியில் குவித்தவாறே, நீண்டநேரம், அவன் அமர்ந்தேயிருந்தான். அடிக்கடி, அவனது பார்வை, செம்மறி ஆடுகள் மேய்வதும், பாம்புகள் ஊர்வதும் (Slithering), அரணைகள் விரைந்தோடுவதுமானவற்றின் (Darting) மேல் திரும்பியது.





Each time he rested beneath the sprawling Banyan tree, he could only immerse himself in an inky abyss. Every evening, as he commenced his homeward journey, the bristling chaff plants encircling the Banyan tree inquired, "Are you bidding us adieu?" by ensnaring themselves onto his clothe. விரிந்திருக்கும் (Sprawling) ஆலமரத்தின் அடியில், ஒவ்வொரு முறையும் அவன் ஓய்விலிருந்தபோதெல்லாம், அவன் அவனை ஒரு கருமையான இருளில் மட்டுமே ஆழ்த்தமுடிந்தது. ஒவ்வொரு மாலையிலும், அவன் வீட்டைநோக்கிய பயணத்தை தொடங்கும்போது (Commenced), ஆலமரத்தை சூழ்ந்த முள் நிறைந்த (Bristling) நாயுருவிகள் (Chaff Plants), அவனது சட்டையை பற்றியபடியே (Ensnaring), "நீ எங்களை விட்டு செல்கிறாயா?" என்று கேட்டன.

Whenever he reclined beneath the tree, he fixed his gaze upon the tip of his nose. Then, one day, the ubiquitous obsidian canvas that enveloped his perception transformed into a different hue. The omnipresent color that graced his vision was now a tranquil shade of blue. His hitherto vacant mind acquired the capacity for desire. மரத்தடியில் எப்போது அயர்ந்து அமர்ந்திருந்தாலும் (Reclined), அவனது பார்வை மூக்குநுனியிலேயே இருந்தது. பின், ஒரு நாள், எங்குமிருந்த (Ubiquitous : உபிகுயிடஸ்), அவனது பார்வையை சூழ்ந்த கரிய காட்சி (Obsidian Canvas), புதியதொரு நிறமாக மாறியது.‌ அவனது பார்வை முழுக்க எங்குமிருந்த (Omnipresent) நிறமானது, தற்போது அமைதிமயமான (Tranquil) நீலநிறமாக மாறியது. அந்த நிமிடம் வரை (hitherto : ஹிதர்ட்டு), வெறுமையாக இருந்த அவனது மனம், ஆசைப்படக் கற்றுக்கொண்டது.


He commenced to nurture desires within him, reveling in euphoria each time his wishes materialized. Alongside the ecstasy, he found himself entangled in the intricate web of life's adversities. அவனுள் இருந்த ஆசைகள் நிறைவேற (Nurture) தொடங்க, ஒவ்வொரு முறை அவனது ஆசைகள் நிறைவேறி நிஜமாகும் போதும் (Materialized), பேரின்பத்தில் (Euphoria) மகிழ்ந்தான் (Revelling). இன்பத்தோடு (Ecstasy) சேர்ந்து, வாழ்வின் கடினசூழல்களின் (Adversities) சிக்கலான (Intricate) வலையில் அவன் மாட்டியுள்ளதாகவும் (Entangled) கண்டான்.



He harbored discontentment toward the somber blue. Thus, he redirected his attention back to the tip of his nose, ensconced beneath the Banyan tree's shade. His vision exhibited remarkable acuity akin to the finely serrated leaf of the queen sago palm. அவன் அடர் நீலநிறத்தோடு (Somber Blue), மனதிருப்தியின்றி (Discontentment) போனான். எனவே, ஆலமர நிழலில் இலகுவாக அமர்ந்து (Ensconced : இன்ஸ்கான்ஸ்ட்), மீண்டும் தனது கவனத்தை மூக்கின் நுனியில் செலுத்தினான். அவனது கவனம், நேர்த்தியான விதத்தில் கூரிய (Finely Serrated : செர்ரீட்டட்) ஈந்தமர இலைகளை போன்ற கூர்மையை (Acuity) வெளிப்படுத்தியது.


The transition from somber blue to verdant green unfolded before his eyes. This transformative spectacle bestowed upon him the capacity to scrutinize and glean knowledge from his observations. அவனது கண்ணுக்கெதிரில்,‌ அடர்நீலம், செழும்பச்சையாக (Verdant Green) மாற்றமுறுவது வெளிப்பட்டது (Unfolded). இந்த மாற்றத்தோற்றம் (Transformative Spectacle), ஆழ்ந்து கற்று (Scrutinize), அறிவை பெறும் (glean), திறனை அவனுக்கு வழங்கியது (Bestowed).


He acquired valuable insights with verdant green. In the village, the rainy season had arrived, and it revealed a wondrous world to him. He observed glass perchlets and translucent shrimps gliding gracefully through the limpid waters of the brook. அவன் செழும்பச்சையைக் கொண்டு, மதிப்புமிக்கவற்றை அறிய பெற்றான். கிராமத்தில், மழைகாலம் வந்ததோடு, அது அவனுக்கு வியப்பான உலகை வெளிக்காட்டியது. அவன், கண்ணாடிக்கெண்டைகளையும் (Glass Perchlets), ஒளி ஊடுருவும் (Translucent) இறால்களையும், ஓடையின் பளிங்குபோன்ற (Limpid) நீரில் செல்லக் கண்டான்.


Once more, he directed his attention to the tip of his nose while nestled beneath the Banyan tree. There, he discerned the subtle shift as the verdant surroundings transformed into vibrant shades of crimson. மீண்டும் ஒருமுறை, ஆலமரத்தின் அடியில் நுனிமூக்கில் நினைவிறுத்தி அமர்ந்தான். அவன், செழும்பச்சையாயிருந்தவை பளிச்சென்ற அடர் செந்நிறமாக (Vibrant Shades of Crimson) மாறும் நுணுக்கமான (Subtle) மாற்றத்தை கவனித்தான் (Discerned).

With his eyes gazing on the tip of his nose, a profound metamorphosis enveloped his surroundings, bathing everything in an intense shade of crimson. This vivid hue unveiled the utmost extremities of existence. Whether gazing upon a cactus or any element of nature, his perception unveiled the profound extremeness inherent in all things. The depth of this understanding resembled the graceful descent of a grebe as it brushes the submerged earth beneath the water's surfac. அவனது கண்கள் நுனிமூக்கை பார்த்துக்கொண்டுருக்க, ஓர் ஆழமான மாற்றம் (Metamorphosis) அவனை சூழ்ந்தவற்றை அடர் சிவப்பில் ஆழ்த்தியது (Bathing). இந்த அடர் நிறம், உள்ளவற்றின் அதீதத்தை வெளிப்படுத்தியது. ஒரு கள்ளியை‌ பார்த்தாலும் சரி... இயற்கையின் அங்கங்களை கண்டாலும் சரி... அவனது பார்வை, அவற்றில் முக்கியமாயுள்ள (Inherent) ஆழ்ந்த அதீதத்தை வெளிப்படுத்தியது. அவனது புரிதலின் ஆழம், ஒரு முக்குளிப்பான் (Grebe) நீருக்கடியில் புதையுண்டுள்ள தரையை தொடுவது (Brushes) போன்றிருந்தது.


The sheer extremity inherent in all things rendered him momentarily speechless. Meanwhile, the loquacious babbler birds, upon sighting a rat snake gracefully ascending the lofty heights of the Palmyra tree, coiling its black trunk in the process, filled the air with their cacophony. அனைத்திலும் இருந்த முழுமையான (Sheer) அதீதம் அவனை சிறிதுநேரம் (Momentarily) அமைதியில் வைத்தது (Rendered). இப்படியிருக்கையில், ஒரு சாரைப்பாம்பு (Rat Snake) வானளவு உயர்ந்துநின்ற (Lofty) பனையின் கரு உடலை (Trunk) பற்றி‌ சுருண்டவாறே அதன் உச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்ததை பார்த்த வாயாடி (Loquacious : லக்வேஷியஸ்) புனில் பறவைகள் (Babbler Birds) காற்றை தங்களது கூச்சலால் (Cacophony : Noise) நிறைத்தன.


The lad experienced a profound sense of elation, akin to savoring the essence of honey coursing through his entire being. This was a happiness so ineffable that words could not hope to capture its essenc. அவனது தேகம் முழுவதும் தேனின் சாரத்தை மகிழ்வதுபோன்ற (Savoring) ஆழ்ந்த இன்ப உணர்வை (Elation) அடைந்தான். அது வார்த்தைகளினால் வீறுபட விவரிக்க இயலாத பலத்த (Ineffable) இன்பமாயிருந்தது.


He beheld the entire spectrum transforming into a state of immaculate whiteness, transcending from its fiery red origins. Simultaneously, a profound sense of inner serenity and joy welled up within him. He found contentment within himself, and now, he possessed the ability to perceive the world through a lens of tranquil purity. Fear of snakes and venomous reptiles dissolved as he viewed all things bathed in pristine white. மொத்த செந்நிறசுற்றமும் தீவிர (Fiery) சிவப்பைத் தாண்டி (Transcending), அதிதூய (Immaculate) வெந்நிறமாக மாறக்கண்டான். அதேவேளையில், ஆழ்ந்த உள்ளமைதியும் களிப்பும் அவனுள் துள்ளிக்குதித்தது (Welled Up). அவனுள் ஒரு திருப்தியை (Contentment) கண்டான். மேலும், இப்போது அவனால் உலகை சச்சரவில்லா தூய்மையின் கண்களால் காணமுடிந்தது. பாம்புகள் மற்றும் விடங்கொண்ட சீவாதிகளைக் குறித்தான பயம், முழு (Pristine) வெண்மையில் மூழ்கிய பார்வையால் கண்டமையால், மறைந்துபோயிற்று.


The pristine white that graced his sight resembled the fully matured seeds of the impeccably ripened queen sago. It was akin to the viscous latex exuded by the opuntia cactus. அவனது பார்வையில் வந்த தூய வெண்மை, சற்றும் குறையின்றி (Impeccably) பழுத்து முற்றிய ஈந்தவிதைகளை போலிருந்தது. அது, சப்பாத்தி கள்ளியிலிருந்து வெளிப்படும் (Exuded) பாய்மத்தன்மை / எளிதில் பாயாத தன்மை (Viscous) உடைய பாலினை (Latex) ஒத்திருந்தது.


The serenity and bliss that enveloped him held him in unwavering stasis. He found himself rendered mute by the profoundness of these emotions. அவனை சூழ்ந்த அமைதியும் மகிழ்ச்சியும் அவனை அசையாத (Unwavering) நிலையில் இருத்தியது. அவன், தான் அந்த ஆழ்ந்த உணர்வுகளினால் சத்தமின்றி இருக்கக் கண்டான்.


Inside his mind, he experienced a blossoming akin to the lotus emerging from deep waters and unfurling at the surface. This feeling was reminiscent of the upward growth of an onion's flower, reaching its peak. மனதினுள், நீரடியிலிருந்து எழும்பி மேற்பரப்பில் இதழ் விரித்து (Unfurling) பூக்கும் தாமரையை ஒத்திருந்த மலர்ச்சியை உணர்ந்தான்.

இந்த உணர்வு, முதிர்ச்சியடைந்த பல்லாரி பூவின் மேல் நோக்கிய வளர்ச்சிக்கு ஒப்பானதாயிருந்தது.


What was once perceived in shades of black, blue, green, red, and white had now transformed into a state of absolute transparency. He beheld a pervasive clarity in all things, signifying that there existed no opaqueness in the realm of knowledge. With this newfound clarity, he possessed the capability to comprehend the profound extremities inherent in the transparent world before him. எது முன்னர் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு மற்றும் வெண்மை என உணரப்பட்டதோ, அது இப்போது தூய நிறமற்ற நிலைக்கு மாறியது. அவன் எங்கும் விரவிய (Pervasive) தெளிவை எல்லாவற்றிலும் கண்டான். அது, ஒன்றனை குறித்ததன் அறிவில் தெளிவோடிருப்பதை குறிக்கும். புதிதாக கிடைத்த இந்த தெளிவில், தன் முன்னிருந்த வெளிப்படையான உலகில் அனைத்திலும் இருந்த ஆழ்ந்த அதீதத்தை புரிந்துகொள்ள திராணி படைத்தவனானான்‌.


The boy grasped the profound realization that what we perceive as a heightened existence is merely a construct of our own minds. Knowledge is an ever-evolving entity, in a perpetual state of becoming, never reaching its final form. He comprehended that there exist life forms far surpassing our own in terms of wisdom and understandin. நாம் எதை உயர் வாழ்வு என உணர்ந்துள்ளோமோ, அது வெறும் நமது மனத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான் என்ற ஆழ்ந்த புரிதலை பையன் பற்றினான். அறிவு என்பது தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் நிலையை (Perpetual state of becoming) உடைய தொடர் பரிணாமமடையும் இறுதிநிலை அடையா ஒன்று. நமது அறிவு மற்றும் புரிதலை பெரிதும் மிஞ்சும் (Surpassing) வாழ்வு உள்ளதை அவன் உணர்ந்தான் (Comprehended).


Our human-defined conception of life is a construct of our own making. The daily actions of a butterfly are a manifestation of its acquired knowledge, and when it ceases to expand its learning, it remains confined as an insect. Similarly, when a human ceases to explore beyond the boundaries of life's definition, they remain limited as a human. The act of continuous improvement and knowledge expansion is an elusive pursuit, forever beyond our grasp. நம் வாழ்விற்கான வரையறை, நம்மால் உருவானது. ஒரு பட்டாம்பூச்சியின் தினசரி செயல்கள், அது கற்றதன் வெளிப்பாடு. அது மேலும் கற்பதை நிறுத்தும்போது, ஒரு பூச்சியாகவே நின்றுவிடுகிறது. அதுபோலவே, வாழ்வின் மனித-வரையறைக்கு மேல் ஒரு மனிதன் பயணிக்காமலிருக்கும்போது, அவன் வெறும் மனிதனாகவே அடங்கிபோகிறான். தொடர் முன்னேற்றம் மற்றும் அறிவு விரிவு என்பது நம் பிடியை தாண்டிய அடைவதற்கரிய தேடல்.


The Earth resembles a minuscule phytoplankton adrift in the vast expanse of an ocean. Our definition of intelligence is confined to what we have thus far observed on our planet. However, amidst this boundless cosmos, there exists an abundance yet to be explored. The boy apprehended these timeless verities with utmost clarity and lucidity. நம் பூமி, பேரளவில் விரிந்துள்ளபெருங்கடலில் மிதக்கும் (Adrift) மிகச்சிறிய தாவர மிதவை உயிரியை போன்றது. அறிவு என்பது இந்த பூமியிலடங்கியவற்றை கண்காணித்து வரையறுக்கப்பட்ட ஒன்று. எனினும், எல்லையில்லா வெட்ட வெளியில், இன்னும் நாம்‌ உணரவேண்டிய அதீதம் உள்ளது. அழிவில்லா இந்த உண்மைகளை (Verities) சாயுச்சியமான தெளிவோடு பையன் உணர்ந்தான் (Apprehended).


In the boy's gaze, everything dissolved into imperceptibility, including his own presence. Indeed, he vanished from the very spot where he had sat for years. Nevertheless, the lilting melodies of koels, the plaintive calls of quails, the chirrups of crickets, and the resonating hum of locusts endured. The gentle zephyr that had enfolded him in its embrace for an extended duration lingered steadfastly. அவனது பார்வையில் அனைத்தும் அவனோடு சேர்ந்து காணமுடியாத நிலைக்குள் (Imperceptibility) மறைந்தது. ஆம்... பல்லாண்டு அமர்ந்திருந்த பகுதியிலிருந்து அவன் மறைந்தான். இருந்தாலும் (Nevertheless), இனிமைநிறைந்த (Lilting) குயில்களின் (Koel) கூக்குரலும், பாவம்போன்ற (Plaintive) கௌதாரிகளின் கூப்பிடலும், வீச்சு செறிந்த வீட்டில்களின் (Crickets) சீற்றொலியும், எதிரொலிக்கும் பாலைவெட்டுக்கிளிகளின் முணுப்புகளும் மட்டும் இன்னமும் இருந்தது (Endured). தனது மடியில் நீண்டகாலம் அவனை பொதிந்த பணிவான தென்றல் காற்று (Zephyr), விடாப்பிடியாக (Steadfastly) அங்கு இன்னமும் நிலைத்திருந்தது (Lingered).

கருத்துகள்