முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (265)

 

2641. தமிழ் இமயம் எனப்படுபவர்?

     வ.சுப.மாணிக்கம்

2642. தமிழ் வியாசர் எனப்படுபவர்?
     நம்பியாண்டார் நம்பி

2643. தமிழ் மாறன் எனப்படுபவர்?
     நம்மாழ்வார்

2644. தமிழ் தென்றல் எனப்படுபவர்?
     திரு.வி.கலியாணசுந்தரனார்

2645. தமிழ் தாத்தா எனப்படுபவர்?
     உ.வே.சுவாமிநாதர்

2646. ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டிக் காட்டும் பொருளில் வரும் எழுத்து?
     சுட்டு எழுத்து

2647. சுட்டு எழுத்துகள் யாவை?
     'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள்

2648. அண்மையில் (அருகில்) உள்ளவற்றைக் குறிக்க உதவும் சுட்டு?
     அண்மைச்சுட்டு
[இ என்ற சுட்டெழுத்து அண்மையைக் குறிக்க உதவுகிறது.
சான்றுகள் : இக்காட்சி, இவன்,இவர்,இங்கே.]


2649. சேய்மையில் (தொலைவில்) உள்ளவற்றைச் சுட்டிக் காட்ட உதவும் சுட்டு?
     சேய்மைச் சுட்டு
[அ என்ற சுட்டெழுத்து தொலைவைக் குறிக்க உதவுகிறது.
சான்றுகள் : அக்கடிதம்,அவன்,அவர்,அங்கே.]


2650. தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத சுட்டெழுத்து?
     உ
[சேய்மைக்கும் அண்மைக்கும் இடையில் உள்ளவற்றைக் குறிக்க 'உ' என்ற சுட்டெழுத்து பயன்பட்டது. நடுவிலுள்ள பொருள்களையும், உயரத்திலுள்ள பொருள்களையும், பின்பக்கம் உள்ள பொருள்களையும் சுட்ட 'உ' பயன்படும்
சான்றுகள் :
உம்பர்- மேலே என்ற பொருள் தரும்.
உப்பக்கம் - முதுகுப்பக்கம் என்ற பொருள் தரும்.
உதுக்காண் - சற்று தூரத்தில் பார் என்ற பொருள் தரும்.]

கருத்துகள்