முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (267)

 
2661. தமிழ்நெறியில் ஓர் ஆண்டை எத்தனை பருவங்களாக பிரிப்பர்?

     ஆறு

2662.தமிழர்தம் ஆறு பருவங்கள்?
     கார் - கூதிர் - முன்பனி - பின்பனி - இளவேனில் - முதுவேனில்

2663. கார் காலம் எனப்படுவது?
     மழை காலம் (ஆவணி , புரட்டாசி)

2664. கூதிர் காலம் எனப்படுவது?
     குளிர் காலம் (ஐப்பசி , கார்த்திகை)

2665. ஒரு நாளின் ஆறு பொழுதுகள்?
     மாலை - யாமம் - வைகறை - விடியல் - நண்பகல் - எற்பாடு

2666. எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம்?
     ஹீலியம்

2667. இராஜநாகம் எவ்வளவு நீளமுடையது?
     18 அடிகள்

2668. சிறுகுடல் எவ்வளவு நீளமுடையது?
     22 அடிகள்

2669. அதிக இனிப்பான பொருள்?
     தாலின்

2670. தமிழ்நாட்டின் இயற்கை பூமி எனப்படுவது?
     தேனி

கருத்துகள்