முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (269)

 

2681. 100% எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம்?
     எர்ணாக்குளம்

2682. சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம்?
     நான்காம் இடம்

2683. மின் அடுப்பில் உள்ள சூடேற்றும் பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது?
     நைக்ரோம்

2684. ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
     ரோமர்

2685. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்?
     18 கி.மீ

2686. படமியின் (Camera) படப்பிடிப்பு வில்லை (Lens) வட்ட வடிவில் இருந்தும் புகைப்படம் கட்ட வடிவில் கிடைக்க காரணம்?
     படமியின் படப்பிடிப்பு வில்லை தன் மீது படும் ஒளியை சதுர/செவ்வக வடிவில் குவிப்பதால் புகைப்படமும் அவ்வடிவை பெறுகிறது. இதற்கு வில்லையும் சதுர/செவ்வக வடிவில் இருந்தால் வேலை சுலபமாகலாமே என்ற எண்ணம் வரலாம். ஆனால் , வில்லையானது வட்ட வடிவில் உள்ளபோது தான் காட்சி பெருக்கம் / சுருக்கம் (Zoom Adjustments) எளிதாகிறது.

2687. அம்மான் என்றால் என்ன பொருள்?
     தாயுடன் பிறந்தவர்களைக் குறிக்கும் ஆண்பால் சொல். அதாவது , அம்மாவுடன் பிறந்தவர் அம்மான். (தாய்மாமன்) அன்றைய அம்மான்தான் இன்று மாமா , மாமோய்.... மாம்ஸ் என்றெல்லாம் உருத்தரித்து நிற்கிறது.

2688. அத்தன் என்றால் என்ன பொருள்?
     அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள். அத்தையோடு பிறந்தவர் அத்தன். (மலையாளத்தில் அச்சன்)

2689. வாழைப்பழ சோம்பேறி என்றால் என்ன?
     வாழைப்பழ சோம்பேறி என்றால் மிகுந்த சோம்பேறி என்று அர்த்தமாம். வாழைப்பழமானது மற்ற பழங்களை ஒப்பிடுகையில் குறைந்த உழைப்பினால் சாப்பிடக்கூடியது. உதாரணமாக பலாப்பழம் எடுத்துக்கொண்டால் பழத்தை உண்ணுவதற்கு வெளியில் உள்ள தோலை நீக்க கடுமையாக வேலை செய்தாக வேண்டும். அதேபோல மாம்பழத்தை எளிமையாக உண்ணலாம் என்றாலும் அது எல்லா கால நிலைகளிலும் கிடைக்காது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய , குறைந்த அளவு ஆற்றலை செலவு செய்து உண்ண கூடிய பழமாக இருப்பது வாழைப்பழம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு கூட உழைப்பதற்கு சோம்பல் கொண்டவரை வாழைப்பழ சோம்பேறி என்று குறிப்பிடுகின்றனராம்.

2690. பத்தரை மாற்று தங்கம்‌‌ என்றால் என்ன?
     பத்து + அரைமாற்று + தங்கம் = பத்தில், அரை அளவு மாற்று (உலோகம்) கலந்து உள்ள தங்கம் என்று பொருள். விளக்கமாக என்றால் , பத்து கிராம் நகையில், அரைகிராம் மாற்று உலோகம் கலந்துள்ள தங்கம்.

கருத்துகள்