முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (270)

2691. மின்சார பிளக்கின் மூன்று ஊசிகளிலும் கீறல் இருப்பதற்கான காரணம் என்ன?
     ஊசிகளின் வழியாக மின்சாரம் பாயும் போதெல்லாம், வெட்டுக் காரணமாக மின்சாரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது, இதனால் அவை விரைவாக வெப்பமடையாது. அதனால் சேதம் ஏற்படும் அபாயம் இல்லை.

2692. வச்சிரவல்லி எனப்படுவது?
     பிரண்டை
[பிரண்டை நம்மூர்களில் சாதாரணமாக வளரும் அசாதாரண மூலிகை! வேர்முதல் குருத்து நுனி வரை மருந்துதான்! புதைக்குழிகளின் மேல் நட்டு வைக்கும் வழக்கம் உண்டு. பிரண்டை கொடியும் குழியை மேவி செழிப்பதுண்டு. இந்த பிரண்டை செழிப்பது போல் வம்சம் செழிக்கும் என்ற எண்ணவோட்டம் அக்காலம் தொட்டு இருந்துவருகின்றது. உலகிலேயே கடினமான பொருளான வைரத்தையே தகர்க்கும் சக்தி பிரண்டைக்கு உண்டாம். பிரண்டையை துவையல்/சட்னி செய்து உண்டால் உடல் வலி வேறு வழியின்றி ஓடிடும் ! கொஞ்சம் கவனமா இருக்கணும்.... குருத்து பிரண்ட தான் துவையலுக்கு... விளைஞ்ச பிரண்டய சாப்டா , வாயெல்லாம் அரிக்கும்.... (அனுபவம் ) இதற்கான தீர்வு , புளி சேர்த்து சமைப்பதுதான்....]


2693. தாவரம் - சொல்லின் காரணம்?
     தாவரம் என்ற சொல்லை சொல்லிக்கொண்டேயிருந்தால் , தாவரம் - தா வரம் - வரம்‌தா - வரம் தா என்றாகி எங்களுக்கு வரம் தா என்று‌ முற்றுபெறும். ஆம். உயிர்களின் பசி நீக்க வரம் தா.... கனிகளை ஈன்று வரம் தா.... மலர்களை தந்து வரம் தா....வெயிலில் குளிர்ச்சி தரும் நிழலெனும் வரம் தா..... இன்னும் எத்துனை வரங்களை பசுந்தாய் ஈன்றாள்....

2694. ஆம்பல் எனப்படுவது?
     ஆம்பல் எனப்படுவது நீரில் வளரும் அல்லிதான். அல் என்றால் இரவு/நிலவை குறிக்கும். அல் ஆகிய நிலவின் ஒளியில் மலர்வதால் அல்லி என பெயர் பெற்றது. எல் என்றால் சூரியன். எல் ஆகிய சூரிய ஒளியில் தாமரை மலர்கிறது.

2695. ஞாளி என்றால் என்ன பொருள்?
     ஞாளி - என்பது நாயைக் குறித்த பழந்தமிழ்ச் சொல். ஞால் என்றால் தொங்குதல் என பொருள். நாக்கை தொங்க விடுவதனால் ஞாளி என்ற பெயர். மேலும் நாய் என்ற சொல்லிலும் நாக்கு என பொருள்படும் , "நா" என்ற சொல் உள்ளதை காணலாம்.

2696. எறும்புகளை ஆராய்வது?
     ஆஸ்ட்ராலஜி

2697. காந்தியின் அரசியல் குரு எனப்படுபவர்?
     கோபால கிருஷ்ண கோகலே

2698. காமராஜரின் அரசியல் குரு எனப்படுபவர்?
     திரு. சத்தியமூர்த்தி

2699. வ.உ.சிதம்பரனாரின் அரசியல் குரு எனப்படுபவர்?
     பால கங்காதர திலகர்

2700. பசும்பொன் முத்துராமலிங்கனாரின் அரசியல் குரு எனப்படுபவர்?
     நேதாஜி. சுபாஷ் சந்திர போஸ்

கருத்துகள்