முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (275)


2741. இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை (Logo) பெற்ற முதல் நகரம்?
     பெங்களூரு

2742. கொரில்லா போர் முறை என்றால் என்ன?
     எந்த ஒரு முறையையும் சாராத போர் முறை

2743. GST இந்தியாவில் எப்போது நடைமுறைக்கு வந்தது?
     சூலை 1 , 2017

2744. பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்?
     H1N1 வைரஸ்

2745. உலகின் முதல் மின்கலத்தை (Battery) உருவாக்கியவர்?
    அலெசாண்ட்ரோ வோல்ட்டா

2746. கிலி என்றால் என்ன பொருள்?
    பயம்

2747. பெயரெச்சம் என்றால் என்ன?
     முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் (வெர்ப்) ஒரு பெயர்ச்சொல்லைக் (நவுன்) கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம்
["எழுதிய கடிதம்" - இதில் எழுதிய என்பது வினையை குறிக்கும் வினைச்சொல் என அறிவோம்..... கடிதம் என்பது பெயர்ச்சொல் எனவும் அறிவோம்..... " எழுதிய கடிதம் " - ஆமாம்... எழுதிய கடிதம் தான்.... அந்த கடிதத்துக்கு என்ன தான் ஆச்சு? அதுதான் தெரியல..... அதனாலதான் இது பெயரெச்சம்..... சரியாக இது முற்றுப்பெறாததால் சரியாக நம்மால் எதையும் புரிந்துணர முடியவில்லை. எழுதிய கடிதம் என்னதான் ஆச்சு !? சீத்தாராமம் படத்துல கூட அவங்களோட கடிதம் என்ன ஆச்சுனு ஒரு பதில் இருக்கும்... ஆனா இந்த கடிதத்துக்கு பதிலே இல்ல... அதுக்கு என்ன ஆச்சுனு தெரியல... அதனால தான் இது பெயரெச்சம்.... இதே மாதிரி தான் , சூடிய மலர் , ஆடிய பாதம் , படித்த புத்தகம் , ஓடிய கால்கள் என பெயரெச்ச பட்டியல் நீளும். இவை அனைத்திலும் முதலில் ஒரு முடிவுபெறாத வினைச்சொல்லும் பின்னர் ஒரு பெயர்ச்சொல்லும் வருகின்றன.]


2748. ஈறுகெட்ட எதிர்மறை‌ பெயரெச்சம்‌ என்றால் என்ன?
     எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல், அதன் கடைசி எழுத்து இல்லாமல் வந்து, அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல்
[ஈறு என்றால் கடைசி என‌ பொருள். " இமைக்கா நொடிகள் " - இது ஒரு ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். எங்கனம்? முதல் சொல்லாகிய இமைக்கா என்பது ஒரு வினைச்சொல். (இமைப்பது ஒரு வினை தானே !?) மேலும் இது ஓர் எதிர்மறை சொல். இமைக்கா என்றால் இமைக்காத என விரிவு. இமைக்காத என்ற சொல்லின் கடைசி (ஈறு) மறைந்து (கெட்டு) இமைக்கா என மாறியுள்ளது. மேலும் , " இமைக்கா நொடிகள் ",  முழுமை பொருள் முழங்காமையால் பெயரெச்சமாகிவிடுகிறது. எனவே இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். இதுபோல தான் , அறியா வயசு (அறியாத வயசு என்பதன் விரிவு) , புரியா பேச்சு‌ (புரியாத பேச்சு என்பதன் விரிவு). இவை அனைத்திலும் வினையின்‌ கடைச்சொல் கெட்டு நிற்பதை காணலாம்.]


2749. மரபியலின் தந்தை யார்?
     கிரகர் ஜோகன் மெண்டல்

2750. நவீன மரபியலின் தந்தை யார்?
    T. H. மார்கன்

கருத்துகள்