முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (277)

 

2761. தீபாவளி - பெயர்க்காரணம்?

     தீபாவளி = தீபம் + ஆவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். உதாரணமாக , நாமாவளி என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் , நாமம் + ஆவளி என பிரிந்து நாமங்களின் (பெயர்களின்) வரிசை என்றாகும். ஆக , தீபாவளி என்றால் ஒளிவரிசை என்றும் அகல் விளக்குகளின் வரிசை என்றும் பொருள். அதுசரி... அகல்விளக்குலாம் இப்போ எங்கயிருக்கு!! ஆகாயத்தை கிழிக்கும் அதிர்வேட்டுகள் தான் எங்கும்.

2762. தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்?
     புளியங்குடி (திருநெல்வேலி) [எலுமிச்சை பழம் -- புளிப்பு -- புளியங்குடி]

2763. தமிழ்நாட்டில் துப்பாக்கி தொழிற்சாலை எங்குள்ளது?
     நவல்பட்டு (திருச்சி)

2764. தமிழ்நாட்டில் இரயில்பெட்டிகள் தயாரிக்கும் இடம் எங்குள்ளது?
     பெரம்பூர் (சென்னை)

2765. Cat's Eye (பூனையின் கண்) எனப்படும் நவரத்தின வகை?
    வைடூரியம்

2766. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்ததைக் கூறும் சங்ககாலத்திய நூல்?
     சிலப்பதிகாரம்

2767. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு தவறான தீர்ப்பளித்த மன்னன் யார்?
     பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

2768. சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
     புதுக்கோட்டை

2769. அலுமினியம் அதிகம் கிடைக்கும் இந்திய மாநிலம்?
     கேரளம்

2770. தண்ணீரில் மிதக்கும் கல்?
    புமிஸ் கல்

கருத்துகள்