முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (278)

2771. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு?
     ஜெர்மனி

2772. இந்திய கப்பல்படையின் தலைமையகம் எங்குள்ளது?
     புதுடெல்லி

2773. ஜாவா மைனர் எனப்படும் தீவு?
     சுமத்ரா

2774. முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின்?
     வைட்டமின் ஏ

2775. உலகில் அதிகமாக புழக்கத்தில் உள்ள பணம்?
    டாலர்

2776. பெட்ரோல்/டீசல் போன்ற எரிபொருட்கள் எவ்வாறு வண்டியை இயக்கும் ஆற்றலை தோற்றுவிக்கின்றன?
     இவை எரிபொருட்களாதனின் , நீராவியை உருவாக்கும் பொருட்டு எரிக்கப்படுகின்றன. இந்த நீராவியைக் கொண்டு மின் இயற்றியை (Generator) சுற்றச்செய்வதன் மூலம் மின் உற்பத்தி அரங்கேறுகிறது.

2777. பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக பயன்படுவது?
     அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், கன்னெய் (பெட்ரோல்) போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப் படுகிறது.

2778. வெறியம் எனப்படுவது?
     எத்தனால்
[மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம், ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று.]


2779. மரச்சாராயம் எனப்படுவது?
     மெத்தனால்
[சாதாரணமாக ஆரோக்கியமான மனிதர்களிடத்தில் ஒரு சிறிய அளவில் மெத்தனால் காணப்படுகிறது. நம் மூக்கிலிருந்து வெளிப்படும் மூச்சில் உள்ள மெத்தனாலின் அளவு சராசரியாக மில்லியனுக்கு 4.5 பகுதிகள் என கணக்கிடப்பட்டுள்ளது.]


2780. எத்தனால் மற்றும் மெத்தனாலின் தன்மைகள்?
     எத்தனால் - போதை தன்மையுடையது
     மெத்தனால் - நச்சுத் தன்மையுடையது

கருத்துகள்