முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (279)

2781. நவீன கம்பர் எனப்படுபவர்?
     மீனாட்சிசுந்தரனார்

2782. இசுலாமிய கம்பர் எனப்படுபவர்?
     உமறுப்புலவர்

2783. கிறித்துவ கம்பர் எனப்படுபவர்?
     எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை

2784. தமிழுக்கு வித்திட்டவர் எனப்படுபவர்?
     பரிதிமாற்கலைஞர்

2785. தமிழை ஆளென வளர்த்து மாண்புறச் செய்தவர்?
    தேவநேய பாவாணர்

2786. நவம்பர் 1, குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட காரணம்?
     மேற்கில் திருவனந்தபுரத்தையும் கிழக்கே திருநெல்வேலியையும் எல்லைகளாய் கொண்ட குமரி மாவட்டம் , தமிழகத்தோடு இணைக்கப்பட்ட நாள் நவம்பர் 1-ம் தேதி (1956) ஆகும். இதன் பொருட்டு குமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.

2787. சென்னை என்றால் பொருள் என்ன?
     முதலில் சென்னை , சென்னப்ப நாயக்கர் பட்டினம் எனப்பட்டதாம். காரணம் , இது சென்னப்ப நாயக்கருக்கு சொந்தமான பகுதியாம். மேலும் தமிழில் , சென்னி என்றால் உயர்ந்த , உச்சி மற்றும் சிறப்பு என்றெல்லாம் பொருள். தமிழகத்தின் உச்சியில் சிறந்த நகராயும் தலைநகராயும் உள்ளது சென்னை தானே.... ஆனால் , இராமலிங்க வள்ளலாருக்கு ஏனோ சென்னையின் சனசமுத்திரம் பிடிக்கவில்லை. "தேட்டமிகு சென்னை" என சென்னையை விவரித்தார்.

2788. பட்டினம் என்பதன் பொருள்?
     பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நகரங்களைக் குறிக்கும். இது நெய்தல் நிலம் தொடர்புடைய பண்டைய சொல். நாகப்பட்டினம்,விசாகப்பட்டினம்,காவிரிப்பூம்பட்டினம் , பூம்புகார்பட்டினம் , முசிறிப்பட்டினம் ,மதராசபட்டினம் அனைத்தும் பண்டைய புகழ்பெற்ற நகரங்களாம்.

2789. சென்னையில் ஒரு பகுதியான மாம்பலத்திற்கு அவ்வாறு பெயர் வர காரணம்?
     அது மாம்பழம்‌ அல்ல! மாம்பலம். முற்காலத்தில் அப்பகுதியில் பெரிய சிவ ஆலயம் இருந்ததாகவும் , அதன் பொருட்டே அந்த ஊர் , மாஅம்பலம் (பெரிய‌ அம்பலம்) என அழைக்கப்பட்டு பின்னர் மாம்பலம் என்றானதாகவும் கருத்து நிலவுகிறது. (சிற்றம்பலம் - சிற்றம்பரம் - சித்தம்பரம் - சிதம்பரம் ஆனதுபோல)

2790. உனக்கோசரம் என்றால் சென்னை தமிழில் என்ன பொருள்?
    உனக்காக / உன் பொருட்டு என பொருள். ஓசரம் என்றால் சென்னை பேரகராதி தரும் பொருள் "ஒன்றன் காரணமாக (For the sake of)" என்பதுதான். உனக்கோசரம் வந்தேன் - உனக்காக‌ வந்தேன் என பொருள்.
[தமிழ் , மறைகுமரி கண்டத்தின் காற்றில் மலர்ந்து , குமரியில் பிஞ்சாகி , நெல்லை - மதுரையில் நன்கு கனிந்து , சென்னையில் அழுகுகிறது என என் ஆசிரியை உவமை காட்டியுள்ளார்.]

கருத்துகள்