முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (280)

 

2791. புள்ளப்பூச்சி என்றால் என்ன?
     உண்ணாப்பிள்ளை என்றும் அழைக்கப்படும் இந்த புள்ளப்பூச்சி (Gryllotalpa brachyptera) குழி தோண்டும் பூச்சி என பொருள்படுகிறது. கிராமங்களில் , இது தொப்புளின் வழியாக உடலுக்குள் சென்றுவிடும் என்ற பேச்சு இந்த பூச்சி வரும்போதெல்லாம் உடன்வரும். அவ்வளவு ஏன்.... புள்ளப்பூச்சிய கொண்ணா புள்ள பொறக்காதுனே வாசகம் இருக்குன்னா பாத்துக்கோங்க... [புள் = தோண்டு ; துளை செய் : : புல்லாங்குழல் - துளைகளிடப்பட்ட கருவியாதலின் புள்-புல்லாங்குழல் ஆனது.]

2792. அன்ன பறவை உண்மையிலேயே பாலுடன் கலந்த நீரிலிருந்து பாலை தனியே பிரிக்குமா?
     பால் எல்லாம் குடிக்க தருவதில்லை (தந்தாலும் குடிப்பதில்லை). அன்ன பறவை பாலையும் நீரையும் பிரிக்குமென்பது பொய் தான். அவ்வாறென்றால் இந்த கூற்றிற்கு பொருளென்ன?  சுடுசாதத்தில் (அன்னம்) பால் கலந்த நீரை ஊற்றி வைத்து பாருங்கள்.‌ பாலை அன்னம் உறிஞ்சிவிட , தெளிந்த நீர் பிரிந்து நிற்கும். அன்னம் என்று தான் முன்னோர்கள் சொன்னார்கள். அது பறவை அன்னமல்ல! பசிதீர்க்கும் அன்னம்!

2793. காண்டாமிருகத்தின் கொம்பில் மருத்துவம் உள்ளது எனும் கூற்று சரியா?
     இயற்கையை நாசமாக்குவதில் முக்கிய பங்கு மனிதன் எனப்படும் அபாயகரமான விலங்கினது. இவ்விலங்கு யோசிக்கும் திறனுடையதாதலால் தன்னிலும் பலம் பொருந்திய அப்பாவி உயிர்களை சித்திரவதை செய்யும் நுட்பம் தெரிந்தவை. யோசிக்க தெரிந்தும் சற்றும் சாரமில்லாத அதிமூட பழக்கங்களில் புரளும் இந்த மனித விலங்குகள், யானை தந்தம் முதல் கரப்பான்பூச்சியின் கால் வரை அனைத்தையும் உண்பவை ! சுரண்டுபவை ! அவ்விதம் தான் அரிய உயிரினமான காண்டா மிருகத்தை கொம்பிற்காக வேட்டையாடுவதும். இன்னுமொரு விசயம்! மனித இரத்தம் குடித்தால் இளமையாகலாம்‌ என நர ரத்தம் உண்ணும் பொருட்டு மனிதனை வேட்டையாடும் செய்கைகளும் பல நாடுகளில் நடந்துவரத்தான் செய்கிறது. எச்சரிக்கை !

2794. இரட்டை நாக்கு உடையவர் என்றால் என்ன பொருள்?
     இரட்டை நாக்கன் என்பது ஒரு விசயத்தை நம்மிடம் ஒரு மாதிரியும் பிறரிடம் வேறு மாதிரியும் கூறுபவர் தான். இதற்கு  இக்காலத்திய சிற்றார்கள் (2K Kids) , "இப்டி ஒரு உருட்டு ! அப்டி ஒரு உருட்டு" என்று எளிய விளக்கம் தர வல்லவர்கள்.

2795. முதலைகள் ஏன் நீர்யானைகளை தாக்குவதில்லை?
    எல்லாம் உயிர் பயமே ! நீர்யானை உலகிலுள்ள மிக பயங்கரமான விலங்கும் அபரீதமான பலம் கொண்ட விலங்குமாகும். இதன்‌ மூர்க்கமான ஒரு கடிக்கு முதலையால் ஈடு கொடுக்க முடியாது. ஆகவே,  சீண்டி பார்த்து பின் வாங்கி கட்டியப்பின் நீர்யானைகளை பார்ப்பதோடு நிறுத்திவிடுகின்றன முதலைகள். [முதலைகள் : நமக்கெதுக்கு வம்பு!?]

2796. கரும்பு நகரம் எனப்படும் மாவட்டம்?
     கள்ளக்குறிச்சி மாவட்டம்

2797. திருத்தல மாவட்டம்‌ எனப்படும் மாவட்டம்?
     திருவள்ளூர்

2798. அருவிகளின் நகரம் எனப்படும் மாவட்டம்?
     தென்காசி

2799. தீபநகரம்‌ எனப்படும் மாவட்டம்?
     திருவண்ணாமலை

2800. தமிழகத்தின் பூக்கடை எனப்படும் மாவட்டம்?
    கிருஷ்ணகிரி

கருத்துகள்