முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (283)

2821. கொடிகாத்த மூதாட்டி எனப்படுபவர்?
     மாதங்கனி ஹெஸ்ரா (வங்காளம்)

2822. இந்தியாவில் தொடங்கிய முதல் வங்கி?
     பஞ்சாப் தேசிய வங்கி

2823. சென்னை சைதாப்பேட்டையின் பழைய பெயர்?
     கண்டர்மேடு

2824. சீனப் பெருஞ்சுவரை கட்டிய மன்னர்?
     ஷிங்ஹ்வாங்டி

2825. செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர்?
    வில்லியம் கோல்ஃப்

2826. செடி , கொடிகள் மற்றும் புற்களென அனைத்து தாவரங்களும் மழை பெய்ததும் பச்சை பசேலென மாறி, பூமித்தாயை பசும் உடையால் போர்த்தி விடுகின்றன. இதே நாம் நீரிட்டு வளர்த்தால் அவ்வளவு சீக்கிரம் செழிப்பில்லை. ஏன்?
     வளிமண்டல நைட்ரஜன் , நைட்ரிக் ஆக்சைடாக மாறிதான் மழையோடு பூமிக்கு வருகிறது. மேலும் , இது நைட்ரேட்டாக மாறும்போது தாவரங்களுக்கு சிறந்ததொரு உரமாகி விடுகிறது. நீரிலேயே உரத்தை சேர்த்து மழை, ஊட்டுகிறது.

2827. அமிலமழையின் போது மழையின் தன்மை?
     மழையில் நைட்ரிக் ஆக்சைடின் அளவு அதிகமெனில் ,  அமிலத்தன்மை பெறும்.

2828. மழையில் மீன்கள் பெய்யுமா?
     கிணறுகளில் நீரிரைப்பான்களை (Pump) உபயோகிக்கும்போது குழாயின் வழியாக சில நேரங்களில் நீருடன் சிறு மீன்கள் வருவதுண்டு. நீர்க்கெண்டி தேற்றப்பாடு (Waterspout Phenomenon)  என்றொன்று உண்டு. மேகங்கள் மற்றும் நீர்த்திவலைகளோடு சேர்ந்த சுழல் காற்று கடல்களில் ஏற்பட்டால் மீன்கள் போன்ற சிறு உயிரினங்கள் விண்ணை நோக்கி உயர்த்தப்பட்டு மழையோடு மீண்டும் பூமிக்கு வருமாம்.

2829. மேற்கு தொடர்ச்சி மலை எவ்வாறு நமக்கு மழையை தருகிறது?
     அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் தோன்றும் தென்மேற்கு பருவக்காற்றை இடைமறிக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. இதனால் மேகங்கள் அங்கே நிலைகொண்டு தமிழகம் மற்றும் கேரளத்திற்கு மழையை பொழிகின்றன.

2830. மலேரியாவிற்கு காரணமான ஒட்டுண்ணி?
    பிளாஸ்மோடியம். கொசுக்கள் இவற்றை கடத்துபவையே.

கருத்துகள்