முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (284)

2831. கோட்டை நகரம் எனப்படும் தமிழக மாவட்டம்?
     வேலூர்

2832. சிமெண்ட் நகரம் எனப்படும் தமிழக மாவட்டம்?
     அரியலூர்

2833. தேரழகு நகரம் எனப்படும் தமிழக மாவட்டம்?
     திருவாரூர்

2834. பல்லவர் பூமி எனப்படும் தமிழக மாவட்டம்?
     செங்கல்பட்டு

2835. தென்னிந்தியாவின் நுழைவாயில் எனப்படும் தமிழக மாவட்டம்?
     சென்னை [தமிழ்நாட்டின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது “தூத்துக்குடி மாவட்டம்”.]

2836. நாம் உணவினால் பெற்ற சக்தி என்ன?
     உணவினால் தான் நாம் யாதொரு காரியத்தையும் யாதோர் எண்ணத்திலும் செய்கிறோம். அறிவியலின் படி , அடினோசின் டிரை பாஸ்பேட் (Adenosine Tri Phosphate) எனப்படும் ATP தான் நாம் பெற்ற சக்தி. மறக்கவேண்டாம். நாம் உண்ணுவதனால் நமக்கு கிடைக்கும் சக்தி என்பது ATP தான். [Biology Students : நியாபகம் வருதே நியாபகம் வருதே....]

2837. கூடுகட்டும் பாம்பு வகை?
     இராஜநாகம்
[இராஜநாகம் , கூடுகட்டி அதில் வாழ்வதில்லை. மாறாக முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுபொறிப்பதற்காக மட்டுமே பிரத்யேகமாக கூடு கட்டுகிறது. இன்னொரு விசயம். என்னதான் இராஜநாகம் என பெயரிருந்தாலும் இது நாகவகையே இல்லை. இதன் கழுத்துப் பகுதியில் உள்ள அகன்ற தசையமைப்பு இதனை நாகத்தை போன்று காட்டலாம். ஆனால் , இது Elapidae எனப்படும் விசப்பாம்புகளின் குடும்பத்தை சார்ந்தது.]


2838. தன் இனத்தையே உண்ணும் பாம்பு?
     இராஜநாகம்
[Ophiophagus hannah என்பது இராஜநாகத்தின் அறிவியல் பெயர். Ophio என்றால் இலத்தீனில் பாம்பு என பொருள். Phagus என்றால் உண்பது என பொருள். ஆக, பாம்பை உண்பவன் எனதான் ஐயாவுக்கு பெயரே... இதையே தன்னினம் உண்ணுதல் (Cannibalism) என்பதுண்டு. ஒரு சேதி தெரியுமா? ஏதோ மொராக்கோ நாட்டுக்காரியாம்... அரபுநாட்டுக்காரனோட காதலாம்.... பத்துவருசமா காதலிச்ச பையனுக்கு வேற ஒரு கல்யாண ஆச வந்ததும் மொராக்கோவுக்கு டாட்டா காட்ட பாத்தானாம்... அவ்ளோதான்... பையன பையா கொன்னு பிரியாணி ஆக்கி பகுத்துண்டு மகிழ்ந்தாலாம் மொராக்கோ நாட்டு பெண்விளக்கு‌.... { https://www.bbc.com/news/world-middle-east-46287259 } என்னே உலகம் ! ஆறறிவோட இருக்குற விலங்குக்கு ஆகாரம் வேணும்னு வாய்திறந்து கேட்கதெரியாத உயிர் பண்றது அறுவறுப்பா இருக்கு......]


2839. எண்ணெய் - பெயர்க்காரணம்?
     எள் + நெய் = எண்ணெய். பொதுவாக நெய் என்பது எண்ணெயை (Oil) குறிக்கும் சொல்தான். காலப்போக்கில் நெய் என்றாலே அது பசுவிடம் பெறப்பெற்ற‌ நெய்தான்‌ என்றாகிபோனது. எள் + நெய் என்பதே இக்காலத்திய‌ எண்ணெய்.

2840. சம்பளம் - பெயர்க்காரணம்?
     சம்பு + அளம் = சம்பளம். சம்பு என்றால் நெல்லைக் குறித்திடும். அளம்‌ என்றால் உப்பு. அக்காலத்தில் உழைப்பிற்கு தரப்படுவது நெல்லும் உப்பும்தான். ஆகவே, ஊதியம் சம்பளம் என்றானது. ஆங்கிலத்தின் Salary எனும் சொல்லில் கூட Salt என்ற சொல் மணம் நுகரலாம்....

கருத்துகள்