முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (285)

2841. சான்று மற்றும் சாட்சி - வித்தியாசம்?
     சான்று என்பது ஆதாரம் / அத்தாட்சி(Evidence or Testimony). சாட்சி என்பது கண்காட்சி (Eye Witness).

2842. தப்பு மற்றும் தவறு - வித்தியாசம்?
     தெரிந்து செய்தால் அது தப்பு. தெரியாமல் செய்தால் அது தவறு.

2843. அகழ்வாராச்சியாளர்களின் சொர்க்கம்?
     எகிப்து

2844. எகிப்திலுள்ள உலர் உடல்கள் (Mummies) சேதமடையாமலிருக்க காரணம்?
     வேதியியல் முறையில் பாதுகாக்கபடுவதுதான் காரணம். இதற்கு எம்பாமிங் (Embalming) என்று பெயர்.

2845. கீச்சகத்தில் (Twitter) இலச்சினை (logo) யாக இருக்கும் பறவையின் பெயர் என்ன?
     இந்த இலச்சினை 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பெயர் Larry. கூடைப்பந்தாட்ட வீரர் Larry ன் நினைவாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

2846. தமிழ்நாட்டில் காடுகள் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
     மேட்டுப்பாளையம்

2847. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
     ஆடுதுறை

2848. தமிழ்நாட்டில் கரும்பு ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
     சிறுகமணி / கடலூர் / வேலூர்

2849. தமிழ்நாட்டில் மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
     தஞ்சாவூர்

2850. தமிழ்நாட்டில் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
     பழனி

கருத்துகள்