முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (286)

2851. ஓரெழுத்து ஒரு மொழி சொல் என்றால் என்ன?

     ஓர் எழுத்தையுடைய பொருள் தரும் சொல் [வா , தா , போ , கோ(அரசன்) , ஈ(கொடு) , ஆ(பசு)]

2852. தமிழில் மொத்தம் எத்தனை ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் உள்ளன?
     42

2853. தொகை சொல் என்றால் என்ன?
     ஒரு சொல்லின் கீழ் பல சொற்கள் அடங்குமாயின் அதுவே தொகை சொல்லாம்.
[இருவினை = நல்வினை , தீவினை ; முத்தமிழ் = இயல் , இசை , நாடகம்]


2854. கீழ்வாய் எண் என்றால் என்ன?
     ஒன்று எனும் முழு எண்ணை விட குறைந்த பகுதிகள் யாவும் கீழ்வாய் எண்கள். [1/2 - அரை ; 1/4 - கால்]

2855. மேல்வாய் எண் என்றால் என்ன?
     ஒன்றிற்கும் மேலான முழு எண்கள் யாவும்.[2,3,4,.......................,ஈறிலி]

2856. உலகின் சமதளமான (தட்டையான) நாடு?
     மாலத்தீவு

2857. இந்திய வானாராய்ச்சி மையத்தின் (ISRO) தலைமையகம் எங்குள்ளது?
     பெங்களூர்

2858. "கிளிகளை வீட்டில் வளர்த்தால் கைது" - ஏன்?
     கிளிகளும் அழிந்துவரும் அரிய பறவைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டன. Online-ல் கிளி வணிகம் அமோகமாக நடைபெறுகிறது. செல்லப்பறவையாக அநேக வீடுகளில் கிளிகள் வளர்க்கப்படுகின்றன. அதனாலேயே , கிளிகளின் இனவிருத்தி தடைபடுகிறதாம்.

2859. எழுதுவதற்கான மையை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள்?
     சீனர்கள்

2860. முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மைக்கு சூட்டப்பட்ட பெயர்?
     இந்திய மை
[சீனர்கள் தாமே கண்டுபிடித்த மைக்கு ,  India Ink என்று பொருள்படுமாறு சீனமொழியில் பெயரிட்டுள்ளனர். காரணம் , மை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், இந்தியாவிடமிருந்து பெறப்பெற்றனவாம்.]

கருத்துகள்