முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (287)

2861. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்?
     தஞ்சாவூர்

2862. காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி?
     பவானி

2863. ஜெயகாந்தனுக்கு இராஜராஜன் விருதைப் பெற்றுத் தந்த நாவல்?
     சுந்தரகாண்டம்

2864. வைகை ஆறு தோன்றுமிடம்?
     அகத்தியர் குன்றுகள்

2865. மணிமுத்தாறு தோன்றுமிடம்?
     கல்வராயன் மலை

2866. விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள்?
     ஸ்புட்னிக் - I
[சோவியத் யூனியனின் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-I , அக்டோபர் 4 , 1957ல் விண்ணில் ஏவப்பட்டது. 92 நாட்கள் விண்ணில் இது இயங்கியவாறு உலா வந்ததாம்.]


2867. விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள்?
     ஸ்புட்னிக் - II
[இதில் தான் லைக்கா எனப்படும் பெண் நாய் இடம்பெற்றது. 10 நாட்கள் விண்வெளியில் லைக்கா உயிர் வாழ்ந்தது‌. இதை வைத்து , விண்ணில் உயிர்வாழ முடியும் என கண்டறியப்பட்டது. இந்த செயற்கைக்கோளும் சோவியத் யூனியனதுதான்.]


2868. விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர்?
     யூரி ககாரின் (Yuri Gagarin)
[சோவியத் யூனியனை சேர்ந்த யூரி தான் முதன்முதலில் விண்வெளி சென்ற மனிதராம். VOSTAK - I என்ற விண்கலத்தில் விண்வெளி சென்றார். பூமியை முழுவதுமாக சுற்றியும் வந்தாராம்.]


2869. விண்வெளி நிலையங்கள் யாவை?
     விண்வெளியில் பூமியிலுள்ளவாறு , நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சல்யூட் , மிர் போன்றவை சோவியத் யூனியனின் நிலையங்கள். ஸ்கை ல்அப் (SkyLab) எனப்படுவது அமெரிக்காவின் நிலையம். மேலும் 16 நாடுகள் கூடி சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்ணில் ஏற்படுத்தியுள்ளன. விண்ணாராய்ச்சி செய்பவர்கள் விருந்திற்கு செல்வதுபோல் இந்த நிலையங்களுக்கு சென்று தங்குவது வாடிக்கை.

2870. விண்ணில் வளர்ந்த முதல் தாவரம்?
     தேல் க்ரெஸ் (அராபிடாப்ஸிஸ் தாலியானா)
[Thale Cress எனப்படும் இந்த தாவரம் வெண்ணிற பூக்களுடன் கடுகு செடி போல் இருக்கும். Salute எனப்படும் சோவியத் யூனியனின் விண்வெளி நிலையத்தில் இது நடப்பட்டு வளர்க்கப்பட்டது. மேலும் விண்வெளியில் நெற்பயிர் உற்பத்தி SkyLab எனப்படும் அமெரிக்க விண்வெளி நிலையத்தில் அரங்கேறியது.]

கருத்துகள்