முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (288)


2871. விண்வெளியில் முதன்முதலில் மலர்ந்த தாவரம்?
     ஜின்னியா (Zinnia)
[விண்ணில் முதன்முதலில் வளர்ந்த தாவரம் வேண்டுமாயின் தேல் க்ரெஸ்ஸாக இருக்கலாம். ஆனால், முதன்முதலில் மலர்ந்த தாவரம் ஜின்னியா தான். சூரிய ஒளிக்கு பதிலாக LED ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் விண்ணில் வளர்க்கப்பட்டன. சூரியகாந்தியைதான்‌ முதலில் மலரச்செய்ய முயற்சித்தனர். சூரிய ஒளியில் தான்‌ நான் மலர்வேன் என அடம்பிடித்ததாலோ என்னவோ ஜின்னியா முந்திக்கொண்டது.]


2872. கண்ணாடி வில்லையின் (Lense) கண்டுபிடிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
     கண்ணாடி வில்லை கண்டுபிடிப்பால் தொலைநோக்கியும் நுண்ணோக்கியும் உருவாகின. தொலைவிலிருப்பதை காணமுடிந்ததால் கிரகங்களை தேடும் விண்ணாராய்ச்சியியல் பிறந்தது. நுண்ணியவற்றை காணமுடிந்ததால் நுண்ணுயிரியல் பிறந்தது.

2873. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களை முதலில் கண்டறிந்தவர்?
     ஆண்டன் வான் லூவன்ஹூக்
[அந்த நுண்ணியிர்களுக்கு பாக்டீரியா என பெயரிட்டவர் கிறிஸ்டியன் கொட்பிரைட் எகிரன்பர்க்.]


2874. மனித கண்களால் காணமுடிந்த  பாக்டீரியா?
     எபுலோபிஸியம் பிஷல்சன் (Epulopiscium fishelson)
[Brown Surgeon Fish எனும் மீனின் உடலில் ஓம்புயிரியாக (Symbiont) வாழும் இந்த பாக்டீரியா அளவில் சற்று பெரியதாகயிருப்பதால் (0.5 - 0.6 mm) மனித கண்களால் காணமுடிகிறது.]


2875. ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் பெயரிடப்பட்ட பாக்டீரியா?
     சோலிபேஸிலஸ் கலாமி (solibacillus kalami)
[அமெரிக்காவில் விண்ணில் பாக்டீரியா வாழ்கிறதா என கண்டறிவதற்கு தனியே ஒரு‌ குழு இயங்கிவருகிறது. அதில் கஸ்தூரி வெங்கட்ராமன் எனும் இந்திய தலைமை விஞ்ஞானியும் இடம்பெறுவது பெருமை. அவர்கள் விண்ணில் புதிதாக கண்டறிந்த பாக்டீரியா , மனித இனத்திற்கு பல்வேறு விதத்தில் உதவும்‌‌ என அறிந்தனர். உதாரணமாக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையுடையது போல. கஸ்தூரி அவர்களின் பரிந்துரையின் பேரில் , அமெரிக்கா அந்த பாக்டீரியாவுக்கு அப்துல்கலாம் அவர்களின் பெயரையே கலாமி என முடியுமாறு சூட்டியுள்ளது. மக்கள் சேவை செய்த கலாமை போல் மருத்துவ சேவை செய்கிறது கலாமி.]

2876. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம்?
     மணிலா (Manila)

2877. கடல் நீரைக்கொண்டு ஒளிரும் விளக்கை கண்டறிந்தவர்?
     அயிசா மிஜெனோ (Aisa Mijeno)
[பிலிப்பைன்ஸ் மக்கள் இரவு நேரங்களில் பெரும்பாலும் மின்சார வசதியின்றி மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்தி வந்தனர். இது உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது அல்ல. அயிசாவின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பு பிலிப்பைன்ஸ் மக்களின் இரவுகளை ஒளிமயமாக்கியது. உப்பு நீரில் சிறிது வேதிபொருட்களை சேர்க்கும்போது மின் உற்பத்தி அரங்கேறும் என்பதே இதன் அடிப்படை.]


2878. SALt என்பதன் விரிவாக்கம்?
     Sustainable Alternative Lighting
[கடல் நீரைக்கொண்டு உருவான ஒளிர்விளக்கு நல்ல ஒரு மாற்று வழியாகும். இதன் சுருக்கமே SALt என்றானது. கடல்நீரும் Salt! கடல்நீர் கொண்டு மின்விளக்கை உருவாக்கும் அமைப்பும் SALt! இதன் நிறுவனர் அயிசா‌ தான்! இந்த விளக்குதான் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் பல தெருக்களில் பிரகாசிக்கிறது.]


2879. LED-இன் முழுமை?
     ஒளிகாலும் இருவாயி விளக்கு (Light Emitting Diode)

2880. பெரமோன் (Pheromone) என்றால் என்ன?
     மனிதர்கள், நாவசைத்து பேசி தகவல் தொடர்பு செய்கின்றனர். ஒரு சில பூச்சிகள் ரீங்காரம் செய்தும், மரங்கொத்தி பறவை மரத்தில் கொத்தியும்,  டால்பின் வெவ்வேறு ஒலிகளை எழுப்பியும், பூனை மற்றும் நாய் தங்கள் சிறுநீரை கொண்டும் கூட தகவல் தொடர்பு செய்யுமாம்‌. அவ்விதம் எறும்பு போன்ற பூச்சியினங்கள் , பெரமோனை வெளிப்படுத்துகின்றன. இது அவற்றின் உடலிலிருந்து சுரக்கும் ஒரு‌ நொதி தான். இதை உணரும் மற்ற எறும்புகள் நம்மருகே பிரிதொரு எறும்பு உள்ளதென உணரும். எறும்புகள் வரிசையாக செல்லவும் பெரமோன் தான் காரணம் என்கின்றனர். பல உயிரினங்கள் பெரமோனை வெளிப்படுத்துகின்றன.

கருத்துகள்