முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (289)

2881. பறவைகளின் முன்னோடி எனப்படும் உயிரினம்?
     டீரோடாக்டைல் (Pterodactyl)
[இது ஊர்வன பண்புகளை ஒருங்கே பெற்றிருக்கும். டீரோடாக்டைல் என்றால் பறக்கும் பல்லி என்று தான் பொருளாம். அதாவது பறவைகள் பல்லி போன்ற ஊர்வன சந்துக்களிலிருந்து பரிணமித்தன என இதிலிருந்து அறியலாம். உதாரணமாக , கோழியையும் டைனோசரையும் சற்றே உற்று நோக்கினால் இரண்டிற்கும் சிறிது உருவ ஒற்றுமையை காணலாம்.]


2882. முதல் பறவை எனப்படுவது?
     ஆர்க்கியாப்ட்ரிக்ஸ் (Archaeopteryx)
[புதைப்படிமமாக கண்டறியப்பட்ட இந்த ஆர்க்கியாப்ட்ரிக்ஸ் நீண்ட முள்ளெலும்புகளையுடைய வாலை உடையது. கூரிய பற்களை உடையது. தலையில் செதில்களை உடையது. இவை யாவும் ஊர்வனவற்றின் பண்புகள். மேலும் , இறக்கைகளையும் கூரிய அலகையும் உடையது. முன்னங்கால்கள் இறக்கைகளாக பரிணமித்துள்ளன. பாதி ஊர்வனபண்பும் மீதி பறவைகளின் பண்பும் உடையதாகயிருந்து , ஊர்வனவற்றிற்கும் பறவைகளுக்கும் பாலமாக ஆர்க்கியாப்ட்ரிக்ஸ் உள்ளது. மேலும் , இது பறக்கும் பண்புகள் ஏதுமின்றி குதிக்கும் பண்புகளையே அதிகம் பெற்றுள்ளது. (கோழி , பென்குவின் , கிவி , நெருப்புக் கோழி , வான்கோழி போன்றவைதான் தற்காலத்திய டைனோசர்கள்)]


2883. நவகுஞ்சரம் எனப்படுவது?
     புராணங்களில் உள்ள ஒருவகை பறவை
[இந்த விசித்திர உயிரினம் தன்னகத்தே 9 வெவ்வேறு வகையான உயிரினங்களின் பாகத்தை அடக்கியுள்ளது. விலங்குபோலும் பறவைபோலும் ஒருங்கே உள்ளது.]


2884. பறவைகளை போன்ற அலகையுடைய விலங்கு?
     பிளாட்டிபஸ்

2885. பிளாட்டிபஸ்ஸின் தமிழாக்கம்?
     வாத்தலகி

2886. தோலின் மூன்று அடுக்குகள்?
     எபிடெர்மிஸ் (மேல்தோல்) , டெர்மிஸ் (நடுத்தோல்) , கொழுப்பு அடுக்கு (Fat Layer - அடித்தோல்)

2887. செயற்கை தோல் ஆராய்ச்சி செய்த பல்கலைக்கழகம்?
     டொராண்டோ பல்கலைக்கழகம்
[தீ விபத்து அல்லது சருமவியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயற்கையாக தோல் (Artificial Skin) உற்பத்தி செய்ய டொராண்டோ பல்கலைக்கழகம் விழைந்தது. சம்மந்தப்பட்ட மனிதரின் செல்லைக் கொண்டு செயற்கை தோல் வளர்ச்சி நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் சில மைக்ரான் அளவில் மட்டுமே செயற்கை தோல் வளர்ந்தாலும் தொடர் ஆய்வினால் சில வேதிப்பொருட்களின் உதவியோடு பல சென்டிமீட்டர் அளவில் செயற்கை தோல் வளர்க்கப்பட்டது.]


2888. செல் சவ்வின் பயன் என்ன?
     செல்களுக்கிடையே காணப்படும் இந்த செல் சவ்வினால் தான் செல்களுக்கிடையே தொடர்பு ஏற்படுகிறது.

2889. செயற்கை செல் சவ்வை உருவாக்கியவர்?
     நிரல் தேவராஜ் - கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் , அமெரிக்கா

2890. ஆரஞ்சு பழம் / சிசிலிபழத்தின் மூலமாக செயற்கை தோலை உருவாக்கியவர்கள்?
     தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள்

கருத்துகள்