முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (290)

2891. பன்றி எத்தகைய உணவு பழக்கம் உடையது?
     பன்றி ஓர் அனைத்துண்ணி (Omnivorous). தாவர உண்ணிகளான (Herbivorous) ஆடு‌ மாடுகளோடு வகைபடுத்தப்பட்டிருந்தாலும் , பன்றி ஓர் எலும்பு கிடைத்தால் கூட விடாமல் உண்டுவிடுமாம்.

2892. பன்றியின் மோப்ப சக்தி எத்தகையது?
     Truffles எனப்படும் காளான்கள் பூமிக்கடியில் வளர்பவை. பூமிபரப்பிலிருந்து மூன்று அடிக்கு கீழேயுள்ள இவற்றை இதற்கான பன்றி வகையைக் (Truffle Hog) கொண்டு கண்டுபிடிப்பார்களாம். பன்றியின் மோப்ப சக்தி இத்தன்மையது. யானைக்கு துதிக்கை போல தான் பன்றிக்கு அதன்‌ மூக்கும்.

2893. பன்றிகள் ஏன் சுத்தமாகயிருப்பதில்லை?
     வியப்பென்னவெனில் காட்டுப்பன்றிகள் மிகவும் சுத்தமானவை. தம் இருப்பிடத்தை எப்போதும் தூய்மையாகவே வைத்திருக்குமாம். எப்போது பன்றிகள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டனவோ அப்போதே பன்றிகளுக்கு இப்படிப்பட்ட பழக்கம் தொற்றியதாம் ! பன்றியோடு சேர்ந்த கன்றின் கதியை விளக்கும் நாம் , மனிதனோடு சேர்ந்த பன்றியின் கதியை மறப்பதேனோ....

2894. செம்மறி ஆடுபோலவே காட்சியளிக்கும் பன்றி?
     மங்காலிக்கா (Mangalica)

2895. "கேழல் - எய் - எய்ம்மா - ஏனம் - முளவுமா - கோட்டுமா" - இவற்றிற்கெல்லாம் என்ன பொருள்?
     அட ! இவையெல்லாம் பன்றியின் செல்லத் தமிழ் பெயர்கள்

2896. குட்டிப்போட்ட பன்றிக்கும் குட்டிப்போடாத பன்றிக்கும் முறையே ஆங்கிலத்தில் என்ன பெயர்கள்?
     குட்டிப்போட்ட பன்றி - Sow Pig
    குட்டிப்போடாத பன்றி - Gilt Pig


2897. அறிவான விலங்குகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் விலங்கு?
     பன்றி தான். நாய்களை விடவும் பன்றிகள் புத்தியில் உயர்ந்தவையாம். கொஞ்சம் முயற்சித்தால் பன்றிகளால் Video Game கூட விளையாட முடியுமாம். நினைவு சக்தியும் மிக அதிகமாம். மூன்று வயது குழந்தைக்கு உள்ள புத்தி கூர்மையை உடையதாம்.

2898. ஏன் மனிதனுக்கான மருந்துகளை பரிசோதிக்க பன்றிகள் பயன்படுகின்றன?
     மனிதனை போல பன்றிகள், 8 மணி நேரம் தூங்குபவை. மனிதனை போல தூக்கத்தில் கனவுகள் காண்பவை. பன்றிகளின் உள் உடலமைப்பும் மனிதனை போன்றதுதான். இதனாலேயே மனிதனுக்கான மருந்துகளை பன்றியைக்கொண்டு பரிசோதித்த பின்னர் வெளியிடுகின்றனர்.

2899. பன்றிக்காய்ச்சல் பரவ காரணம்?
     பன்றிகளே... பன்றிகளுக்குள் பரவிக் கொண்டிருந்த வைரஸ் , மனிதனுக்கும் பரவ, பன்றிக்காய்ச்சல் (Swine Flu) பரிணமித்தது.

2900. நாம் காசு சேர்த்து வைக்கும் உண்டியல் ஏன் பன்றியின் வடிவில் பெரும்பாலும் உள்ளது?
     பண்டைய ஐரோப்பாவில் உலோகம் கிடைப்பது அரிதாம்... எனவே , Pig Clay எனப்படும் களிமண்ணால் நம்மூர் மண்பாண்டங்கள் போல , பாத்திரங்கள் செய்யப்பட்டனவாம். அவ்வாறே , உண்டியலும் செய்யப்பட, காலப்போக்கில் களிமண்ணின் பெயர் தொக்கிவிட , பன்றியின் பெயர் (Piggybank) முந்திக்கொண்டது.

கருத்துகள்