முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (291)

2901. ஊர்ட் மண்டலம் என்றால் என்ன?
     1932ல் ஜ்அன் ஊர்ட் (Jan Oort) எண்ணற்ற வால்நட்சத்திர கூட்டங்களை ஓரிடத்தில் குழுமியிருக்கக் கண்டுபிடித்தார். அவ்விடம் ஊர்ட் மண்டலம் (Oort's Space) எனப்படுகிறது.

2902. ஹாலியின் வால் நட்சத்திரம் (Halley's Comet) என்பது?
     ஹாலி என்பவர் விண்ணில் மிகப் பெரிய வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்து அது மீண்டும் 76 ஆண்டுகட்கு பின்னர் தோன்றும் என அறிவியல் சாட்சியாக முழங்கினார். அவர் கூறியவாறே அதுவும் தோன்றியது. ஆனால், அது மீண்டும் தோன்றுவதற்கு 16 ஆண்டுகட்கு முன்னரே ஹாலி இறந்துவிட்டார். எனவே , அந்த வால் நட்சத்திரம் , ஹாலியின் பெயரைத் தாங்கி வந்து செல்கிறது.

2903. உயிரி தோன்ற அடிப்படையான வேதிமூலம்?
     ரிபோஸ் எனப்படுவது சர்க்கரையின் வேதிப்பொருள் ஆகும். உயிர்கள் தோன்ற இது அடிப்படையானது. அதாவது , ரிபோஸ் இருந்தால் அதிலிருந்து கண்ணுக்கு தெரியாத நுண்ணிய உயிர்கள் தோன்றும். அதிலிருந்து உயிர்கள் பரிணமிக்கும். எனவே , இந்த வேதிமூலம் தான் உயிர்கள் தோன்ற ஆதிமூலம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , பூமியில் விழுந்த விண்கல் ஒன்றில் இந்த ரிபோஸ் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படியானால் விண்ணிலும்......?

2904. மெழுகுவர்த்தியை முதன்முதலில் உருவாக்கியவர்கள்?
     சீனர்கள்

2905. மெழுகுவர்த்தியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
     இங்கிலாந்து நாட்டவர்கள்

2906. Monocular Vision என்றால் என்ன?
     கண்கள் இருவேறு தளங்களில் அமையப்பெற்று இருவேறு‌ பார்வைகள் தெரியுமாயின் அதுவே Monocular Vision. உதாரணமாக , பச்சோந்தியின் கண்கள் இரண்டும் ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளை காணும். காரணம், அதற்கு இரண்டு பார்வைகள் !

2907. Binocular Vision என்றால் என்ன?
     இரண்டு கண்களும் ஒரே தளத்தில் அமையப்பெற்று , ஒரே ஒரு பார்வை இருக்குமாயின் அதுவே Binocular Vision. இதற்கு உதாரணம் , நாம் தான். கண்ணு ரெண்டு இருக்கு ! ஆனா , பார்வ ஒன்னு தான இருக்கு!  "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (லாலலா...)" என்ற பாடலில் வரும் வரிகள் இவை : "இரண்டு கண்கள் என்றாலும்  பார்வை என்றும் ஒன்றுதான்  உருவத்திலே தனித்தனிதான்  உள்ளம் என்றும் ஒன்றுதான்!"

2908. ஒளியின் வேகம் (Speed of the Light)?
     3 இலட்சம் கி.மீ / நொடி

2909. ஒளியாண்டு எனப்படுவது?
     ஒளி , ஓராண்டில் பயணிக்கும் தொலைவு
[ஒரு நொடியிலயே 3 இலட்சம் கி.மீ வேகத்துல போகுதாம்... ஒரு வருசமுன்னா.....]


2910. உலகிலேயே மிகச்சிறிய அணு?
     ஹைட்ரஜன்
[எல்லா அணுக்களிலும் எலக்ட்ரான் , புரோட்டான் மற்றும் நியூட்ரான் இருக்கும். அணுவின் கரு பகுதியில் , நியூட்ரானும் புரோட்டானும் சேர்ந்திருக்கும். இந்த அணுக்கருவை தான் எலக்ட்ரான் சுற்றி வரும். ஹைட்ரஜனில் நியூட்ரான் கிடையாது. ஒரே ஓர் எலக்ட்ரான் மற்றும் ஒரே ஒரு‌ புரோட்டான் மட்டுமே....]

கருத்துகள்