முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (292)

2911. ஒலியின் (Sound) வேகம்?
     1236 கி.மீ / மணி
[மின்னல் (Lightening) எனப்படுவது ஒளி (Light ). இடி (Thunder) எனப்படுவது ஒலி (Sound). ஒளி அதிவேகமாக பயணிப்பதால் நம் கண்களுக்கு முதலில் மின்னல் தான்‌ தெரியும். ஒலி , ஒளியை‌ விட மிக குறைவான வேகத்தில் பயணிப்பதால் , இரண்டாவது தான் இடி சத்தம் கேக்கும்.]


2912. ஒலியின் வேகத்தை மிஞ்சும் விமானம்?
     Super Sonic
[ஆனால் , கற்பனை செய்யமுடியாத அளவுக்கு வேகமாகவுள்ள ஒளியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு எந்த வாகனங்களும் கண்டறியப்படவில்லை.]


2913. எதிர்பொருள் (Anti Matter) என்றால் என்ன?
     உலகில் அனைத்தும் இருமை பண்பை (Dual Property) உடையவை. ஆண் - பெண் , இரவு - பகல் , நன்மை - தீமை என... அவ்வகையில் பொருள் (Matter) என்ற ஒன்று இருந்தால் அதற்கு எதிரான (Anti Matter) பொருளும் இருக்கும் என வில்லியம் ஹீக்ஸ் கூறினார்.

2914. பாசிட்ரான் எனப்படுவது?
     எலக்ட்ரான் எதிர் மின்சுமை உடையது என அறிவோம். அதே எலக்ட்ரான் , நேர் மின்சுமை உடையதாகயிருந்தால்....? அதுதான் Positive Electron எனப்படும் பாசிட்ரான். இதுவும் ஓர் எதிர் பொருள் (Anti Matter) தானே... சாதாரண எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரானுக்கு எதிராக நேர்மின் சுமையுடைய எலக்ட்ரான் தான் , பாசிட்ரான். எலக்ட்ரான் என்பது பொருள் என்றால், பாசிட்ரான் என்பது எதிர்ப்பொருள். [எலக்ட்ரானும் , பாசிட்ரானும் மோதினால் பயங்கரமாக ஆற்றல் வெளிப்படுமாம்.]

2915. எதிர்மின் சுமையுடைய புரோட்டான் உண்டா?
     ஆம். ஆனால் , நேர்மின் சுமையுடைய எலக்ட்ரான் பாசிட்ரான் என பெயரிடப்பட்டது போல , எதிர்மின் சுமையுடைய புரோட்டான் பெயரிடப்படவில்லை.
[புரோட்டானும் , எதிர் புரோட்டானும் மோதினால் காமா கதிர்கள் வெளிப்படும்.]


2916. எதிர் ஹைட்ரஜன் எனப்படுவது?
     ஓர் எதிர் புரோட்டானும் ஓர் எதிர் எலக்ட்ரானும் (பாசிட்ரான்) சேர்ந்திருக்கும் ஹைட்ரஜன் , எதிர் ஹைட்ரஜன் ஆகும். இதுவும், ஓர் எதிர் பொருள்.[பொதுவாக ஹைட்ரஜனில் , ஒரு புரோட்டான் மற்றும் ஓர் எலக்ட்ரான் இருக்கும். ஆனால் எதிர் ஹைட்ரஜனில், ஓர் எதிர் புரோட்டானும் (எதிர்மின் சுமையுடைய புரோட்டான்) ஓர் எதிர் எலக்ட்ரானும் (நேர்மின் சுமையுடைய எலக்ட்ரான் - பாசிட்ரான்) இடம்பெறும். இது செயற்கையானது.]

2917. எதிர் ஹைட்ரஜனின் பயன்?
     எதிர் ஹைட்ரஜன், ஒரு சிறந்த எரிபொருள். மேலும் , ஒளியின் வேகத்தில் செல்வதற்கு தேவையான எரிபொருள் இதுவே. சுமார் , 80% ஒளியின் வேகத்தில் செல்லும் அதிவேக Rocket Engine, அமெரிக்காவால் கண்டறியப்பட்டுள்ளது.

2918. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர்?
     இராபர் பாய்ல்

2919. இன்னும் உருவாகாமல் உள்ள நட்சத்திரம்?
     Prostar - கருவிலுள்ள நட்சத்திரம்

2920. உருவாகி வாலிப நிலையில் உள்ள நட்சத்திரம்?
     Main Sequence Star - இளம் நட்சத்திரம்

கருத்துகள்