முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Genetics I

 
Traits

மரபுரீதியாக கடத்தப்படும் பண்புகள்தான் Traits எனப்படுகின்றன. உதாரணமாக, கண்விழியின் நிறம், முடி அமைவு, உயரம் முதலானவை மரபுரீதியாக கடத்தப்படுவை… இவை யாவும் Traits தான். A "trait" in genetics and biology refers to a specific characteristic or feature of an organism, such as eye color or hair texture, which is determined by the combination of alleles (gene variants) inherited from one's parents.


மெண்டல் விதிகள்

Traits, ஒரு தலைமுறையிலுருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படுவதை விவரிக்கும் விதிகள். Mendelian genetics is based on the principles discovered by Gregor Mendel and focuses on the inheritance of traits from one generation to the next.


ஜீனோடைப்

ஜீன் என்பது மரபுவிதியை தன்னகத்தே வைத்திருக்கும் DNA துண்டம். ஒருவருடைய கண்ணின் நிறம் இன்னதாக இருக்கவேண்டும் என நிர்ணயிப்பது இந்த விதிதான். அல்லீல் என்பது ஒரே ஜீனின் விதவித தோற்றங்கள். அதாவது, ஒரு ஜீனானது கண்ணின் நிறம் ஊதாவாக இருக்கக்கடவட்டும் என விதிக்கும். மற்றொன்றோ, பச்சை மீதுதான் என் இச்சை என புதிய விதிவகுக்கும். இவைதான் அல்லீல்கள். இரண்டும் நிறத்திற்கான ஜீன்கள்! ஆனால், வேறுவேறு விதமாக நிறத்தை நிர்ணயிக்கின்றன. ஜீனோடைப் என்பது, இந்த அல்லீல்களின் தொகுப்பு. அல்லீல்களை ஒருசேர கொண்டிருப்பதுதான் Genotype! Genotype refers to the genetic makeup of an organism or an individual with respect to a specific trait or a set of traits. It consists of the alleles, or variations of genes, that an individual possesses for a particular characteristic.


Genotype Notation

Genotype, பொதுவாக ஆங்கில எழுத்துக்களால் குறிக்கப்படும். Aa என குறித்து, A-யை ஊதா நிற கண்விழிக்கான அல்லீல் எனலாம். a-யை பச்சை நிற கண்விழிக்கான அல்லீல் எனலாம். When we represent the genotype of an individual, we use letters to denote the alleles they carry for a specific trait. Aa Genotype: The letter "A" represents one allele for the eye color trait. The letter "a" represents another allele for the same eye color trait. In this case, "A" and "a" are different forms of the same gene that determine eye color.


Phenotype 

ஜீனின் மரபுவிதிகள் வெளிப்படுவதுதான் Phenotype. ஜீனோடைப்புகளுக்கூடான கலப்புதான் Phenotype-ஐ கொணரும். இரத்தினசுருக்கமாகவென்றால், கண்ணுக்கு புலப்படும் மரபு வெளிப்பாடு! Phenotype refers to the observable physical or biochemical characteristics of an organism. It includes all the traits and features that you can see, measure, or detect in an individual. These traits are the result of the interaction between an organism's genotype (its genetic makeup) and its environment. For example, the color of a person's eyes, their height, or the presence of certain diseases are all aspects of an organism's phenotype. It is what you can visually or physically observe in an individual, in contrast to their genotype, which is the genetic information or the combination of alleles they carry.

கருத்துகள்