முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Genetics II

அல்லீல்களின் இரண்டு வகைகள் : ஓங்கு அல்லீல் மற்றும் ஒடுங்கு அல்லீல். Dominant and recessive alleles are terms used in genetics to describe the interactions between different forms of a gene (alleles) and how they influence the expression of a specific trait. They are typically notated using letters.

ஓங்கு (Dominant) அல்லீல்
பெரிய எழுத்தால் இது குறிக்கப்படும். அதாவது, Aa என்பதில் A என்பது ஓங்கு அல்லீல். சரி… Aa என்றால் என்ன? ஒரு ஜீனோடைப் தானே!? ஒரு ஜீனோடைப்பில் ஓங்கு அல்லீல் இருந்தால், வெளிப்படும் மரபு பண்பு ஓங்கு அல்லீலினதுதான். உதாரணமாக, A என்பது ஊதா நிற கண்விழிக்கும், a என்பது பச்சை நிற கண்விழிக்குமான அல்லீல்கள் என்போம். அல்லீல்களை ஒருசேர கூறுவதுதானே ஜீனோடைப்… Aa என்ற ஜீனோடைப், ஓங்கு அல்லீலின் பண்பாகிய, ஊதா கருவிழியை வெளிப்படுத்தும். Genotype-ல் எது ஓங்கு அல்லீலோ, Phenotype-ல் அதுவே வெளிப்படும். A dominant allele is one that, when present in an individual's genotype, will mask the effect of the corresponding recessive allele. In other words, the dominant allele's trait will be expressed in the individual's phenotype. Dominant alleles are usually represented by uppercase letters, such as "A." 

ஒடுங்கு (Recessive) அல்லீல்
சிறிய எழுத்தால் இது குறிக்கப்படும். அதாவது, Aa என்பதில் a என்பது ஒடுங்கு அல்லீல். ஒரு ஜீனோடைப்பில் இரண்டுமே ஒடுங்கு அல்லீல்களாக இருந்தாலேயொழிய, வெளிப்படும் மரபு பண்பு ஓங்கு அல்லீலினதுதான்!

Aa - ஓங்கு பண்பு (ஊதா கருவிழி)
aA - ஓங்கு பண்பு (ஊதா கருவிழி)
AA - ஓங்கு பண்பு (ஊதா கருவிழி)
aa - ஒடுங்கு பண்பு (பச்சை கருவிழி)

A recessive allele is one that is only expressed in an individual's phenotype when it is present in a homozygous state (both alleles are recessive) or when no dominant allele is present. Recessive alleles are typically represented by lowercase letters, such as "a."

Codominant Alleles
இது வழக்கத்திற்கு மாறானது! ஒரு ஜீனோடைப்பிலுள்ள எல்லா அல்லீல்களின் பண்பும், ஓங்கு பண்பாகயிருந்து ஃபீனோடைப்பில் வெளிப்பட்டுவிடும். AB என்ற ஒரு ஜீனோடைப்பி்ல், A ஊதாநிற கண்விழிக்கும், B நீலநிற கண்விழிக்குமான அல்லீல்கள் என்றால், AB-யால் வெளிப்படும் ஃபீனோடைப்பில், இரண்டு பண்புகளும் கலந்தவாறு காணப்படும்! இரண்டு அல்லீல்களும் இங்கே ஓங்குபண்புடையவைதான். In codominance, both alleles are equally expressed in the heterozygous individual.Using "AB" as an example, if "A" represents a violet eye allele and "B" represents a blue eye allele, an individual with the "AB" genotype would have eyes that are a mixture of violet and blue. This means both "A" and "B" alleles are fully expressed in the phenotype, resulting in a unique eye color.

Incomplete Dominant Allele


இதுவும் வழக்கத்திற்கு மாறானது! ஒரு ஜீனோடைப்பில், ஓங்கு அல்லீல் அரைகுறை ஓங்கு பண்புடையதாகயிருக்கும் விநோத நிலை இது. Aa-யில், A சிவப்பு நிற கண்விழிக்கும், a வெண்ணிற கண்விழிக்குமான அல்லீல்கள் எனில், ஃபீனோடைப்பில், இரண்டு பண்புகளும் வெளிப்படும். ஒரு கண்விழி சிவப்பாகவும் மற்றொன்று வெள்ளையாகவும் வெளிப்படுமா என கேட்கவேண்டாம்! ஒரு கூடை Sunlight! ஒரு கூடை Moonlight! என்பதை போல, கொஞ்சம் ஓங்குபண்பும் கொஞ்சம் ஒடுங்குபண்பும் வெளிப்படும்! அதாவது, சிவப்பு + வெள்ளை = இளஞ்சிவப்பு நிற கண்விழிகள். In incomplete dominance, neither allele is completely dominant, and the heterozygous individual displays an intermediate or blended phenotype. Using "Aa" as an example, if "A" represents a red eye allele and "a" represents a white eye allele, an individual with the "Aa" genotype would have pink eyes. In this case, the phenotype is a mixture or blend of the two alleles, resulting in a new trait (pink eye color) that is different from the traits associated with either allele.

ஹோமோசைகஸ் அல்லீல்கள்

ஒரு ஜீனோடைப்பில் உள்ள அல்லீல்கள் இரண்டும் ஒரே வகையானவை. அதாவது, இரண்டுமே ஓங்குப் பண்போடு இருக்கலாம் அல்லது இரண்டுமே ஒடுங்குப் பண்போடு இருக்கலாம். உதாரணம் : BB, Bb 

ஹெட்டிரோசைகஸ் அல்லீல்கள்
ஒரு ஜீனோடைப்பில் உள்ள அல்லீல்கள் இரண்டும் வேறுவேறு வகையானவை. ஓர் ஓங்கு அல்லீலும் ஓர் ஒடுங்கு அல்லீலும் காணப்படுவதுதான் இது. உதாரணம் : Bb, bB. Individuals can have homozygous alleles (two of the same, e.g., BB or bb) or heterozygous alleles (two different, e.g., Bb).

கருத்துகள்