முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (293)

2921. வாவல் என்றால் என்ன பொருள்?
     தாவுதல் [வாவலிலிருந்து தான் வௌவால் எனும் சொல் வந்ததாம்.]

2922. வாலிபநிலையைக் கடந்த நட்சத்திரம்?
     Red Supergiant Star

2923. தன் வாழ்க்கையில் இறுதிநிலையை அடைந்த நட்சத்திரம்?
     சூப்பர் நோவா

2924. இறந்துபோன நட்சத்திரத்திற்கு என்ன பெயர்?
     நியூட்ரான் நட்சத்திரம்

2925. வெள்ளை நிறப்புலி , தங்க நிறப்புலி  போன்ற புலி வகைகள் எப்படி உருவாகின?
     DNA மாற்றத்தால்

2926. பக்கவாதம் (Paralysis / Stroke) எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?
     பொட்டாசியம்

2927. பல்சிதைவு எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?
     ஃபுளோரைடு

2928. பூரணமை / பூரணை என்றால் என்ன?
     முழு நிலவு [பௌர்ணமியின் மூலச்சொற்கள் இவை!]

2929. White Elephant Project என்றால் என்ன?
     ஒரு திட்டத்திற்காக செலவழிப்பது வீண் என்ற பொருளில் அந்த திட்டத்தை White Elephant Project என்பதுண்டு. எவ்வளவு முதலீடு செய்தாலும் விழுங்கிவிட்டு பிரதிபலனை தராத திட்டம் , White Elephant Project எனப்படும்.

2930. ஏன் மற்றும் எதற்கு - இரண்டிற்குமான வேறுபாடு?
     ஏன் என்ற கேள்விக்கு காரணத்தை கூறவேண்டும். எதற்கு என்ற கேள்விக்கு நோக்கத்தை கூறவேண்டும்.  [ஏன் சாப்பிட்டாய்? வயிறு பசித்தது (காரணம்). எதற்கு சாப்பிட்டாய்? உயிர் வாழ (நோக்கம்).]

கருத்துகள்