முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (294)

2931. Leopard - ன் தமிழாக்கம்?
     சிறுத்தை

2932. Jaguar - ன் தமிழாக்கம்?
     வலியச்சிறுத்தை

2933. Cheetah - ன் தமிழாக்கம்?
     சிவிங்கிப்புலி

2934. பூனை குடும்பத்திலேயே மிகப்பெரிய விலங்கு?
     புலி
[புலி, 350 கிலோ வரை வளரும். சிங்கமோ 270 கிலோ வரை தான். நான் ஒரு புலி என்று கூறி கம்பீரமாக நின்றால் , சாம்பாரில் போடும் "புளியா" என்ற காலாவதியான நகைச்சுவையை கூறி ஆசுவாசமாகிக்கொள்ளும் நபர்கள் இன்றளவிலும் நம்மோடு.... அவர்களுக்கு பதிலளிக்க தமிழில் ஓர் அழகான சொல்லாடல் உண்டு... அதுதான் "காயா வேங்கை மற்றும் பாயா வேங்கை" என்பது. காயா (த) வேங்கை என்பது புலி. பாயா (த) வேங்கை என்பது புளி.]


2935. துயிலன் மற்றும் துயில்நன் - வேறுபாடு?
     துயிலன் - தூங்கியிருப்பவன் / தூங்குபவன்
    துயில்நன் - தூங்கவைப்பவன்
[இதுபோலதான் , மகிழன் என்றால் மகிழ்ந்திருப்பவன். மகிழ்நன் என்றால் மகிழவைப்பவன். நாம் மகிழ்நன்களாகயிருந்தால் , மகிழன்களாகிவிடலாம்... என்ன நான் சொல்றது...?]


2936. மிகப்பெரிய உடும்பு?
     கொமோடோ டிராகன் (10 அடி & 170 கிலோ)

2937. தமிழில் உடும்பின் மற்றொரு பெயர்?
     நெடுவாலி [நீளமான வாலுடையது என்ற பொருளில்...]

2938. உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா (Gulf)?
     மெக்சிகன் வளைகுடா

2939. உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா (Bay)?
     ஹட்சன் விரிகுடா

2940. வளைகுடா என்றால் என்ன?
     நிலத்தால் மூன்று பக்கமும் சூழப்பட்ட கடல் நீர்ப்பரப்பு


கருத்துகள்