முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (296)

 2951. கத்தரிக்கோலை கண்டுபிடித்தவர் என வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுபவர்?                 லியானர்டோ டா வின்சி [மோனாலிசா ஓவியத்தை வரைந்ததோடு நில்லாமல் கத்தரிக்கோலையும் கண்டுபிடித்தாராம் டா வின்சி.... டா வின்சி கோட் என்ற திரைப்படம் ஒன்றுண்டு. சில பல காரண காரியங்களால் அது தமிழகத்தில் தடை செய்யப்பட்டது.]

2952. ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மணமும் நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில் அதன் தன்மை யாது?
     வெளிர் நீல நிறத்தில் ஒளிரும்.

2953. மா என்றால் என்ன பொருள்?
     மாம்பழம் என்பதை அடுத்து விலங்கு என்ற பொருளும் உண்டு. [மான் , மாடு , அரிமா (சிங்கம்) , கோட்டுமா (பன்றி)]

2954. ஆலி - ஆழி - ஆளி வேறுபாடு?
     ஆலி - பூதம்
  ‌    ஆழி - பெருங்கடல்
  ‌    ஆளி - சிங்கம்


2955. யாளி என்றால்.....? குற்றாலக்குறவஞ்சியின்படி , ஆளி என்றால் சிங்கம் என பொருள். யாளியோ யானையும் சிங்கமும் சேர்ந்த ஒரு வடிவம். ஆக , புதிர்க்கிடமான யாளியின் விரிவு, யானை + ஆளி என்பதே....

2956. ஒரு பெரிய மூலக்கூறினை சிறிய மூலக்கூறுகளாக உடைக்கும் நிகழ்வு?
     சிதைமாற்றமுறுதல் (Catabolism) [சர்க்கரை மூலக்கூறு உடையப்பெற்று நீர் மற்றும் CO2 மூலக்கூறுகள் உருவாதல்.]

2957. ஒரு மூலக்கூறு வளர வளர பிரிதொரு மூலக்கூறாக மாறுதல்?
     வளர்மாற்றம் (Anabolism) [அமினோ அமிலம் , புரதமாதல்]

2958. வேதிபொருட்கள் தொடர்ந்து உயிர் மூலக்கூறுகளாக மாற்றப்படுதல்?
     வளர்சிதை மாற்றம் (Metabolism)

2959. தாவரங்களுக்கு அறிவியல் பெயரிடும் அமைப்பு?
     ICBN [International Code for Botanical Nomenclature]

2960. விலங்குகளுக்கு அறிவியல் பெயரிடும் அமைப்பு?
     ICZN [International Code for Zoological Nomenclature]

கருத்துகள்