முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (299)

2981. பறக்கும் மீன் வகை எது?
     பிளாங்க்டன் எனப்படும் மீன் வகை நீரின் மேற்புறத்தில் வேகமாக வந்து நான்கு இறக்கைகள் போன்ற செதில்களால் 60 கிலோமீட்டர் வேகத்தில் சிறிது தூரத்திற்கு எதிரிகளிடமிருந்து தப்பிக்க பறவைகள் போல பறக்கும் சக்தி வாய்ந்தது.

2982. கடலின் ஓநாய் எனப்படும் மீன்?
     Orca or Killer Whale என்றழைக்கப்படும் மீனினம் கடலின் ஓநாய் என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் வேட்டையாடும் வியூகம் ஓநாய்கள் வேட்டையாடும் விதத்தை ஒத்துப்போவதால் அப்படி அழைக்கப்படுகிறது. [பார்க்க பிரம்மிப்பூட்டும் விதத்தில் அழகாகவும் இருக்கும் இந்த மீன் , ஆபத்தின் கருவூலமாம்!]

2983. மனிதனை போன்ற பற்களை உடைய மீன்?
     செம்மறி மீன் (Sheepshead Fish). மீனின் பற்கள் , சற்று செம்மறி ஆட்டினது போல் தான் உள்ளன.

2984. மாசி என்பது எதை குறிக்கும்?
     தமிழ் மாதத்தை குறிப்பதோடு கடல் மீன் வகையையும் மாசி என்ற சொல் குறிக்கும்.

2985. தமிழகத்தில் கடற் கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் மீனவர்களின் பொதுப்பெயர்?
     பரதவர் 

2986. புட்டான் பூச்சி எனப்படுவது?
     தட்டான் பூச்சி தான்
[இதை தட்டாரப்பூச்சி , தும்பி என்றெல்லாம் அழைப்பதுண்டு. தட்டான் என்றால் பல பொருள்கள் உள்ளன. பொற்கொல்லர் வேலை செய்பவர்கள் அவ்வாறே அறியப்படுகின்றனர். மேலும் , தானம் கேட்பவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர்கள் என தட்டான் எனும் சொல் பொருள்தரும்.]


2987. ஊசித்தட்டான் எனப்படுவது?
     ஆங்கிலத்தில் Damselfly எனப்படும் இந்த பூச்சி , பார்ப்பதற்கு தட்டானின் உறவுமுறை போல் இருந்தாலும், இது தனி சிற்றினம் ஆகும். ஆனால் , இரண்டையும் ஒரே பேரினமான Odonata-வில் தான் வகைப்படுத்தியுள்ளனர்.
[இவற்றின் வாலில் பீடி சுற்றும் நூல் கட்டி விளையாடியதெல்லாம் ஒரு காலம்.... வெயிலோடு விளையாடி என்ற பாடலில் வரும் வரிகள் அப்படியே கிராமத்து சிறுவர்களின் சிறுவயதை நினைவுறுத்தி ஒரு துளி கண்ணீரையாவது தூண்டிவிடும். அவ்வரிகளில் ,
   "நண்டூரும் நரி ஊரும்
   கருவேலங் காட்டோரம்
   தட்டானைச் சுத்தி சுத்தி
   வட்டம் போட்டோமே"
எனும் வரிகள்..... ஒரு கனம் நம் (என்) வயதை குறைத்து மீண்டும் தட்டானை விரட்டி விளையாட தூண்டும். காணுங்கள் : https://youtu.be/hERmFDZdpZ0]


2988. தட்டானுக்கு Dragon Fly என பெயர் வர காரணம்?
     பண்டைய ரோமானிய , கிரேக்க நாகரீகத்தில் நடைமுறையில் வாழ்ந்ததற்கு எந்த வித ஆதார அத்தாட்சிகளும் இல்லாத Dragon-ஐ பிசாசின் வடிவமாக கற்பனை செய்து கொண்டனர். மேலும் , இதை தழுவியவையும் அவ்வண்ணமே திரித்தன. தட்டான் பூச்சி வந்தால் , கண்ணை பிடுங்கிவிடும் எனவும் நம்பினர். (இது வரை யார் கண்ணையும் பிடுங்கியதில்லை. பிடுங்கபோவதுமில்லை) மூடநம்பிக்கையை நம்பிக்கையின் சாயலில் காட்டுவதில் வல்லவர்கள் நாம். எனவே , தட்டானை அவலட்சணமான பூச்சி என அவ்வாறு பெயரிட்டுக்கொண்டனர் மனநோயாளிகளான மனித இனங்கள்.
[நம்ம ஊர்ல தட்டான் கூட்டமா வந்துச்சான நல்ல மழ வரும்ணு சொல்லுவாங்க.... இன்னும் பல நாடுகளில் செழிப்பின் அடையாளமாக தட்டான் பூச்சி கருதப்படுகிறது. மேலும் , கொசுக்களை வேட்டையாடுவதில் தட்டானுக்கு இணை தட்டானே! Odonil , Odomos போன்ற கொசுவிரட்டிகளின் பெயர்கள் , Odonataவை ஒத்துள்ளனவே...]


2989. மனிதனுக்கான அறிவியல் பெயரின் பொருள் என்ன?
     homo sapiens என்பது மனிதனின் அறிவியல் பெயர். இதில் , Homo என்பது மனிதன் எனும் பேரினத்தை குறிக்கும். உதாரணமாக , புலியின் அறிவியல் பெயர் panthera tigris. சிங்கத்தின் அறிவியல் பெயர் panthera leo. இங்கே , panthera என்பது பெரும்பூனைகள் எனும் பேரினம். tigris மற்றும் leo போன்றவை சிற்றினங்கள். Homo எனும் பேரினத்தில் அடங்கும் sapiens எனும் சிற்றினம் தான் நாம். புலியின் பேரினத்தில் சிங்கம் இருப்பதுபோல் , நம் பேரினத்தில் நம்மை போன்ற பிற சிற்றினங்கள் பல காலங்களுக்கு முன்‌ இருந்ததற்கான தொல் படிமங்கள் கிடைத்துள்ளன. அவ்விதம் homo என்றால் மனிதன். sapiens என்றால் அறிவார்ந்தவன். homo sapiens என்றால் அறிவார்ந்த மனிதன். (நமக்கு நாமே சூட்டிக்கொண்டோம்.)

2990. தட்டானின் விஞ்ஞான பங்கு?
     இன்று வரை பலதரப்பட்ட கண்டுபிடிப்புகள் , இயற்கையை உன்னிப்பாக கவனித்ததன் பொருட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. சிங்கம் , சிறுத்தைகளின் வேட்டை 65% மட்டுமே வெற்றியளிக்குமாம். தட்டானின் வேட்டையோ , 95% வெற்றிதருமாம். அதன் வேட்டை தந்திரத்தை அறிவியலாளர்கள் ஆய்வு செய்து அதை ஒத்துள்ள போர் விமானங்களை உருவாக்குகின்றனர். (நாம் அறிவார்ந்தவர்கள் ஆதலால் மிக நுணுக்கமாக நமக்கு கொல்லும் யுக்தி தெரியும்)  Helicopters அனைத்தும் தட்டானின் வடிவை ஒத்துள்ளன.

கருத்துகள்