முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3. CELL BIOLOGY (தமிழ் - English) : Cell Transport

செல்லின் உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளேயும் மூலக்கூறுகள் செல்லும் நிகழ்வுதான் செல் போக்குவரத்து. ஒரு செல்லின் இயக்கத்திற்கு இது அவசியம். Cellular transport refers to the movement of substances in and out of cells, which is essential for maintaining cell function.

செல் போக்குவரத்திலுள்ள இரண்டு வகைகள்
1.செயலுடைய போக்குவரத்து (Active Transport)
2.செயலற்ற போக்குவரத்து (Passive Transport)
The two main types of cellular transport are Passive Transport and Active Transport.

செயலுடைய போக்குவரத்து: செல்லினுள் குறைந்த அடர்த்தி உள்ள இடத்திலிருந்து அதிக அடர்த்தி உள்ள இடத்திற்கு மூலக்கூறுகளை (இரும்பு மூலக்கூறுகள்) நகர்த்துதல். இதற்கு அதிக ஆற்றல் தேவை. Active Transport is a biological process that moves molecules or ions across a cell membrane against their concentration gradient, which means it moves substances from an area of lower concentration to an area of higher concentration. This process requires the expenditure of energy, usually in the form of adenosine triphosphate (ATP), to transport molecules or ions through specialized proteins called pumps or transporters. Active transport is essential for maintaining specific concentrations of ions and molecules within cells.

செயலற்ற போக்குவரத்து: சமநிலை தோன்றும்வரை, செல்லினுள் இருக்கும் மூலக்கூறுகள், அதிக அடர்த்தி நிறைந்த பகுதியிலிருந்து, குறைந்த அடர்த்தி உள்ள பகுதியை நோக்கி நகருதல். இதற்கு ஆற்றல் தேவையில்லை. அழுத்தமே போதும்! Passive transport depends on the concentration gradient of the substance being transported. Substances move from areas of higher concentration to areas of lower concentration until equilibrium is reached. Unlike active transport, which requires energy (usually in the form of ATP), passive transport does not require the cell to expend energy.

செல் போக்குவரத்தின் பயன்கள் : ஆக்சிஜன், குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் முதலான தேவையான மூலக்கூறுகளை உள்ளிழுத்தல். தேவையற்ற கழிவு பொருட்களை வெளியே தள்ளுதல். அத்தியாவசிய மூலக்கூறுகளை சமநிலையில் வைத்திருத்தல். Cells need nutrients, such as glucose and amino acids, as well as oxygen for energy production. Transport mechanisms allow these essential substances to enter cells. Cells produce waste products like carbon dioxide and metabolic byproducts. Cellular transport enables the removal of these waste materials from cells. Cells must regulate the balance of ions (e.g., sodium, potassium, calcium) and molecules (e.g., water) to maintain the right conditions for cellular processes. Transport proteins help achieve this balance. அடர்த்தி குறைந்த பகுதியிலிருந்து அடர்த்தி நிறைந்த பகுதிக்கு மூலக்கூறுகள் நகர்த்தப்படுவதைதான் செயலுள்ள போக்குவரத்து என்கிறோம். இதற்கு அதிக ஆற்றலும் தேவை. ஆற்றின் போக்கிற்கு எதிராக நீந்துவதற்கு எப்படி ஆற்றல் தேவையோ, அப்படிதான் இதுவும். செயலுடைய போக்குவரத்திற்கு, ATP மூலக்கூறுகளினால் ஆற்றல் கிட்டும். (Active transport is a crucial cellular process that moves substances against their concentration gradient, from an area of lower concentration to an area of higher concentration. This process requires energy in the form of adenosine triphosphate (ATP) to pump substances across the cell membrane.)

NEET : Which cellular process requires energy to move molecules against their concentration gradient?
Answer : Active transport

நுண் அமைப்புகள்: புரத எக்கிகள் (Protein Pumps) எனும் நுண் அமைப்புகள் செல்சவ்வில் புதைக்கப்பட்டு காணப்படும். இவைதான் செல்லின் உள்ளும் வெளியும் செல்லும் மூலக்கூறுகளை வெளியே தள்ளுவதும் உள்ளே எக்கி இழுப்பதும்! இவையே, செயலுடைய போக்குவரத்திற்கு உதவுபவை. இவற்றிற்கான ஆற்றலைதான், ATP மூலக்கூறுகள் வழங்குகின்றன. (Active transport relies on specialized protein pumps embedded in the cell membrane. These pumps act as molecular machines that facilitate the movement of specific substances.)

NEET : What is the primary source of energy used in active transport?
Answer : Adenosine triphosphate (ATP)

புரத எக்கிகள்: புரத எக்கிகள், மிகவும் குறிப்பிடத்தக்கவாறு இயங்குபவை. உதாரணமாக, சோடியம் பொட்டாசியம் எக்கி, சோடியத்தை வெளியே தள்ளுவதும், பொட்டாசியத்தை உள்ளே இழுப்பதுமாக செயல்படும் தன்மையுடையது. இது, வேறு மூலக்கூறுகளை சீண்டுவதில்லை. (Each active transport pump is specific to the substance it transports. For example, the sodium-potassium pump (Na+/K+ pump) is responsible for moving sodium ions (Na+) out of the cell and potassium ions (K+) into the cell.)

சோடியம் பொட்டாசியம் எக்கி: சோடியம் பொட்டாசியம் எக்கியினால்தான், நம்மால் நரம்புசார் உணர்வுகளை அறியமுடிகிறது. இதுவே, தசை சுருக்கத்திற்கும் காரணமாகிறது. ஒட்டுமொத்தமாக, செயலுள்ள போக்குவரத்து நடைபெறுவதால்தான், உடற்சமநிலை (Homeostasis) பேணப்படுகிறது. (The sodium-potassium pump is one of the most well-known examples of active transport. It helps maintain the cell's resting membrane potential and is essential for nerve impulse transmission and muscle contraction.) சோடியம் பொட்டாசியம் எக்கியில் ஒரு முறைக்கு மூன்று சோடியம் மூலக்கூறுகள் வெளியேயும், இரண்டு பொட்டாசியம் மூலக்கூறு உள்ளேயும் செல்கின்றன. (In this pump, three sodium ions are actively transported out of the cell, while two potassium ions are actively transported into the cell for every cycle. ATP provides the energy needed for this process. ATP is hydrolyzed (broken down) to ADP (adenosine diphosphate) during this energy-consuming step.)

கருத்துகள்