முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

7. CELL BIOLOGY (தமிழ் - English) : Cell Adaptations

 
சிலியா மற்றும் ஃப்ளாஜெல்லா
ஏற்கெனவே நாம் இவற்றை ஆய்ந்துள்ளோம். சிலியா என்பது பனங்கொட்டையை நார் சூழ்ந்ததுபோல, செல்லை சூழ்ந்திருக்கும் மயிரிழை அமைப்புகள். செல்லின் புறப்பரப்பில் ஏதேனும் ஒரு நுண்பொருள் நகரவும், சில சமயங்களில் செல்லே நகரவும் இவை துணைபுரிபவை. ஃப்ளாஜெல்லா என்பவை, சாட்டை போன்றவை. இவை, விந்து செல்களின் வால் பகுதியில் காணப்படுபவை. இவற்றைக்கொண்டுதான், அந்த செல்கள் நகர்கின்றன. Cilia are tiny, hair-like structures on the cell surface that are involved in the movement of certain cells or the movement of substances across the cell's surface. They're found in the respiratory tract to move mucus and trapped particles out of the lungs. Flagella are longer whip-like structures that also facilitate cell movement. They are typically found in cells like sperm, which use flagella to swim.

மைக்ரோவில்லி
பெரிய கைக்கு மாவுப்பண்டம் அதிகங்கிடைக்குங்குற கத தான்… ஒரு சில செல்கள் தாதுக்களை உறிஞ்சுபவை. உதாரணமாக, சிறுகுடலில் உள்ள செல்கள், உண்ட உணவிலிருந்து தாதுக்களை உறிஞ்சாகவேண்டும். அவை சற்று அளவில் பெரிதாக இருப்பது ஏற்றது. ஆனால், மிகப்பெரியதாக இருப்பது ஏற்றதன்று. எனவே, அவற்றின் புறப்பரப்பில் இந்த மைக்ரோவில்லிகள் இடம்பெறுகின்றன. பல கோடி விரல்கள் வெளிநீண்டதைப்போல, சிறுகுடல் செல்களின் புறப்பரப்பில் இவை காணப்படுகின்றன. ஊட்ட தாதுக்களும் உறிஞ்ச ஏதுவாகின்றன. Microvilli are small, finger-like projections on the surface of certain cells, primarily in the small intestine. They increase the surface area of the cell's membrane, which is important for the absorption of nutrients.

வலுத்த சந்திப்பு
இரண்டு செல்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த சந்திப்பில், எந்த துளையுமில்லாமல் வலுத்த அமைப்பு இருப்பது, வலுத்த சந்திப்பு. அதாவது, ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்குள் செல்ல வழியில்லை! Tight Junctions are seals between adjacent cells that prevent the leakage of extracellular fluids. They're essential in tissues like the intestines to maintain a barrier.

இடைவெளியுள்ள சந்திப்பு
இரண்டு செல்களும் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டிருக்கும் பொதுச்சுவரில் துளைகள் காணப்படும்! Gap junctions are channels between adjacent cells that allow for the passage of ions, signaling molecules, and small molecules. They play a role in communication between cells in tissues like the heart.

டெஸ்மாசோம்கள்
குரோமோசோமும், ரிபோசோமும் மட்டுமே தெரிந்த நமக்கு, டெஸ்மாசோம் புதிதுதான். இவை, செல்சவ்வை விரிக்கும் சிக்கலான புரதங்கள். உதாரணமாக, இதயம் சுருங்கி விரியும் உறுப்பு! அதன் செல்களின் செல்சுவர்களில், டெஸ்மாசோம் இல்லையென்றால்…. கண்ணாடி போல நொறுங்க வாய்ப்பிருக்கிறது… அப்போது கீழ்வரும் இந்த வரிகள் பொய்யாகும் : “ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை! கடல் கை மூடி மறைவதில்லை!” Desmosomes are complex protein structures that span the cell membrane. They are primarily found in tissues that experience mechanical stress, such as the skin, heart muscle, and the cervix.

கருத்துகள்