முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

5. CELL BIOLOGY (தமிழ் - English) : Cell Signaling

செல்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வது செல் சமிக்ஞையின் மூலமாகதான்…Cell signaling is a fundamental process in biology that allows cells to communicate with each other.

Ligands: ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லுக்கு தகவலை எடுத்துச்செல்லும் நுண்ணிய அமைப்புகள் இவை. இவை புரதமாகவோ, மூலக்கூறுகளாகவோ இருக்கலாம். Ligands are signaling molecules, which can be proteins, small molecules, or even gases. They bind to specific receptors on the target cell's surface.

Receptors: Ligands கொண்டுவந்த தகவல்களை செல்லினுள் ஒரு பாதையை ஏற்படுத்தி எடுத்துச்செல்லும் நுண் அமைப்புகள். அந்த பாதையே, சமிக்ஞை கடத்தும் பாதை (Signal Transduction Path) எனப்படும். இந்த Receptors, செல்லின் புறப்பகுதியில் காணப்படுபவை. Receptors are proteins on the cell's surface or inside the cell that bind to ligands. They are highly specific, and when a ligand binds to its receptor, it initiates a cellular response.

Ligands மற்றும் Receptors :: ஓர் உதாரணம்
பறக்கும் மற்றும் பயமுறுத்தும் ஹார்மோனை அறிந்திருக்கலாம். ஓர் அதிர்ச்சியூட்டும் விடயத்தை கேள்விபடுகையில் இவை இயக்கப்படுபவை… இவையே அட்ரீலனீன்கள் எனப்படும் எபிநெஃப்ரீன்கள்! இவை ஒருவகை Ligands தான்! அதிர்ச்சியடையும்போது, இவை இதயத்தை நோக்கி இரத்த ஓட்டத்தோடு சென்று, அங்குள்ள இதயச்செல்களின் புறப்பரப்பில் கொழுவிருக்கும் Receptors-களாகிய, Beta Adrenergic Receptors-ஐ சீண்டும். இவை, இதயச்செல்லுக்குள்ளாக ஒரு சமிக்ஞை கடத்துப்பாதையை ஏற்படுத்தி, அதிர்ச்சியை செல்களுக்கு தெரிவிக்கும். உடனே, இதயத்துடிப்பு அதிகமாகும். In a "fight or flight" situation, such as when you're suddenly confronted with danger, your body releases epinephrine into the bloodstream. This is the ligand. Epinephrine circulates through your bloodstream and reaches different cells throughout your body. On the surface of target cells (e.g., heart muscle cells), there are adrenergic receptors, specifically beta-adrenergic receptors. These receptors are like locks, and epinephrine is the key that fits into these locks. When epinephrine binds to the beta-adrenergic receptor, it triggers a conformational change in the receptor. This change activates the receptor. Activated receptors initiate a signal transduction pathway inside the cell. This pathway involves a series of protein interactions and can lead to various responses. In the case of epinephrine binding to beta-adrenergic receptors on heart muscle cells, the response is an increase in the rate and force of heart contractions. This prepares the body to respond quickly to the perceived threat.To prevent a continuous response, epinephrine is eventually removed from the receptor, and the receptor returns to its inactive state.

சமிக்ஞை கடத்துப்பாதை
சமுத்திரத்தில் பாலம் கட்டும் கதைபோன்றது இது… இங்கு மிதக்கும் கற்கள் அல்லாமல் இரண்டாம் தூதுவர்கள் எனப்படும் நுண் மூலக்கூறுகள் இடம்பெறுகின்றன. அதாவது, புறப்பகுதியில் Receptor-ஓடு ஒரு Ligand இணைந்ததும், அந்த தகவலை உள்ளேயுள்ள உட்கருவறைக்கு எடுத்துச்செல்ல அவை அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக, Second Messengers எனப்படுபவைதான் எடுத்துச்செல்லும் பணியை காலங்காலமாக செய்கின்றன. அவை உள்ளே செல்வதைதான் பொதுவாக சமிக்ஞை கடத்துப்பாதை என்பது…Second messengers play a vital role in signal transduction within cells. They are small molecules that transmit and amplify signals from the cell surface to the cellular interior.

கருத்துகள்