முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (301)

3001. திரவ நிலையில் இருக்கும் உலோகம்?
     பாதரசம் (Mercury)
[முதன்முதலாக இதை பார்க்கும்போது , அடடே விநோதமா இருக்கேனு விளையாட தூண்டும்... அபூர்வமான இந்த திரவ உலோகம் , ஆபத்தும் கூட... அதிக நச்சுத்தன்மை பாதரசத்தில் உள்ளது.]


3002. பாதரசத்தின் தாது?
     சின்னபார்
[இயற்கையில் வேதிப்பொருட்கள் பிற வேதிப்பொருட்களோடு இணைந்துதான் காணப்படும். அவ்விதம் சின்னபார் எனப்படும் வேதிப்பொருள் கலவையிலிருந்துதான் பாதரசம் அதிகமாய் கிடைக்கிறது.]


3003. சூதம் என்றால் என்ன பொருள்?
     பாதரசம்
[சூதம், கொடிய விடமுடைய பாதரசத்தினை குறிக்கும் சொல். இச்சொல் , சித்தர்களால் புழங்கப்படுகிறது. சீனா , எகிப்து போன்ற நாடுகளின் பண்டைய நம்பிக்கையின்படி , பாதரசம் சாகாத வரத்தை தருமாம். அதை குடித்து இறந்துபோன சீன மன்னர் மீண்டும் உயிருடன் வரவேண்டுமென அவரை தகனித்த இடத்தில் பாதரசத்தை பாயவிட்டிருக்கின்றனர். இவர்கள் இப்படியிருக்க, சித்தர்களோ இதன் விசத்தன்மையை நன்கறிந்திருந்தனர்.]


3004. பார்ப்பதற்கு பாதரசம் போலவே தோன்றும் உலோகம்?
     கேலியம் (Gallium) [பாதரசம் , அறை வெப்பநிலையிலேயே உருகிவிடும். கேலியம் திடமாய் நிற்கும்.]

3005. பாதரசத்தின் வேதி குறியீட்டிற்கான பொருள்?
     Hg என்பது பாதரசத்தின் வேதி குறியீடு. இதற்கு Hydrogyros என விரிவு. Hydro என்றால் நீர். Gyros என்றால் வெள்ளி. நீர்மநிலையில் வெள்ளிபோல் காட்சிதருவதால் இப்படி!


3006. பாதரசத்தோடு தங்கம் , வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்க்கப்பட்டால் என்ன ஆகும்?
     இரும்பை தவிர எந்த உலோகம் பாதரசத்தோடு சேர்க்கப்பட்டாலும் அவை அதில் கரைந்து Amalgam எனப்படும் உலோக கலவை உருவாகும்.

3007. மனித உடலில் பாதரசம் எவ்வாறு கலக்கிறது?
     மீன்கள் , தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றில் மனிதர்களின் இயற்கையை மீறிய செயல்பாடுகளால் அதிகபடியாக பாதரசம் கலக்கிறது. இவற்றை உண்ணும்போது, மனித உடலில் பாதரசத்தின் அளவு அதிகரித்து அதன் நச்சுத்தன்மை வெளிப்படுகிறது.

3008. மினாமாட்டா நோய் (Minamata Disease) என்றால் என்ன?
     ஜிசோ எனப்படும் ஜப்பானிய தொழிற்சாலை , பாதரச கழிவுகளை ஆற்றில் கலந்துவிட , அதில் இருந்த மீன்களை உண்ட மக்கள், பல தீராத உபாதைகளுக்கு ஆளாகினார்கள். பலர் இறந்தனர். பலர் உறுப்பு முடக்கமானார்கள். மினாமாட்டா எனும் இடத்தில் இது உருவானதால் , அவ்வூரின் பெயரையே நோய்க்கு இட்டனர். [Minamata disease was first discovered in the city of Minamata, Kumamoto Prefecture, Japan, in 1956, hence its name. It was caused by the release of methylmercury in the industrial wastewater from a chemical factory owned by the Chisso Corporation, which continued from 1932 to 1968.]

3009. டென்டல் அமால்கம் (Dental Amalgam); என்றால் என்ன?
     பாதரசத்தோடு எந்த உலோகம் சேர்ந்தாலும் அது அமால்கம் எனப்படும். அவ்விதம் துத்தநாகம் , தங்கம் , வெள்ளி போன்றவை பாதரசத்தோடு சேரக் கிடைப்பது தான் டென்டல் அமால்கம். இது பற்குழிகளை அடைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. [The amalgam of mercury with gold, silver or zinc is widely used for dental fillings.]

3010. பாதரச வெப்பநிலைமானியை (Mercury Thermometer) கண்டுபிடித்தவர்?
     Daniel Gabriel Fahrenheit

கருத்துகள்