முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (302)

3011. ரசமணி என்றால் என்ன?
     திரவநிலையில் உள்ள பாதரசத்தை திண்ம நிலையில் கொணரலாம் என்பதே ரசவாதம் (Alchemy). அதாவது , இயலாத ஒன்று. அவ்வாறு திண்மமான கோளவடிவ பாதரசமே ரசமணியாம்.

3012. சிவப்பு பாதரசம் என்ற ஒன்று உண்டா?
     மெய்யாகவே மெய்யாகவே அப்படி யாதொன்றும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பாக, இந்த சிவப்பு மெர்குரி உடையவர்கள் கோடீஸ்வரர்கள் என்று சில வாலில்லா பேசும் குரங்குகளால் பரப்பப்பட்ட புரளியின் காரணமாக பாதரசம் குறித்த தேடலில் அவ்வப்போது சிவப்பு பாதரசம் எட்டிப் பார்க்கிறது.

3013. Mercury என்பது பாதரசம் என்ற திரவ உலோகத்தை குறிப்பதோடு எந்த கிரகத்தையும் குறிக்கிறது?
     புதன் எனும் கிரகத்தை Mercury என்றே அழைப்பர்.

3014. புதன் ஏன் மெர்குரி என அழைக்கப்படுகிறது?
     மெர்குரி என்றால் பாதரசம் என பொருள். ஆனால், பாதரசத்திற்கும் புதனுக்கும் எள்ளளவும் பந்தமில்லை. புதனோ அதிகபடியான இரும்பினால் ஆன கிரகம். இங்கே மெர்குரி என்பது பாதரசத்தை குறிக்கவில்லை. மாறாக , ரோமானிய புராணங்களில் வரும் தூது செய்யும் தேவதையான மெர்குரியை‌ குறிக்கிறது.
[மெர்குரி என்பது வழக்கொழிந்துபோன பண்டைய ரோமானிய புராணங்களில் வரும் தூது தேவதை (Messenger). இந்த தேவதை , பயங்கரமான வேகத்தில் இறை காரியம் குறித்த செய்திகளை‌ கொண்டு செல்லுமாம். சற்று கிளறினால் , கிரேக்க புராணத்தில் ஹெர்மிஸ் (Hermes) என்ற பெயரில் இதே தேவதைதான் , தூது செல்கிறது (அதே பயங்கரமான வேகத்தில்). புதன், சூரியக் குடும்பத்தில் மிக வேகமாக சுழலும் கோள். 88 புவிநாட்களில் , முழு சூரியனையும் சுற்றிவிடும். இதன் வேகத்தை அறிந்த ரோமானியர்கள், அவர்களின் அதிவேக தூது தேவதையோடு புதனை உருவகித்து , Mercury எனப் பெயரிட்டு விட்டனர்.]


3015. பாதரசம் ஏன் மெர்குரி என அழைக்கப்படுகிறது?
     பாதரசம் , Quick Silver என்றும் அழைக்கப்படுகிறது. ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்குமென வேகமாக இடம்பெயர்கிறது பாதரசம். அதிவேகமாக தூது செல்லும் மெர்குரி தேவதை நியாபகம் வருகிறதா? அந்த வேகத்தை இந்த வேகத்தோடு உருவகித்து , பாதரசத்திற்கும் Mercury என பெயரிட்டனர்.
[கிரேக்க, ரோமானிய நாகரிகங்கள் என்றோ சிலுவைப்போர்களால் அழிந்துவிட்டன. ஆனால், அவற்றின் எச்சங்கள், இன்றளவும் பல அறிவியல் பொருட்களில் பெரும்பாலும் பெயர்வடிவில் நிற்கின்றன.]


3016. இந்தியாவின் தவளை மனிதர்?
     பேராசிரியர் பிஜு (Professor Biju)
[உலகெங்கும் 7000க்கும் மேற்பட்ட தவளையினங்கள் உள்ளன. இந்தியாவில் 350 வகைகள் உள்ளனவாம். அதில் 80க்கும் மேற்பட்டவற்றை பிஜு ஐயா தான் கண்டறிந்துள்ளார். ஆகவே , அவரே தவளை மனிதர்.]


3017. தவளைகளும் தேரைகளும் (Frogs and Toads) எந்த விலங்கியல் வகுப்பில் வகைபடுத்தப்பட்டுள்ளன?
     Anura (அனுரா)

3018. "நுணலும் தன் வாயால் கெடும்" - இதில் நுணல் என்பது?
     தவளை தான்
[மழை காலத்திற்கு , மழை காலம்  என அங்கீகாரம் கொடுப்பதே தவளைகளின் கச்சேரி தான்! இணையை கவருவதற்காக தவளைகள் நடத்தும் இந்த கச்சேரியால் , வினையும் சேர்ந்தே கவரப்படுகிறது. பாம்பு முதலான பிற உயிரினங்கள் இந்த சத்த அதிர்வுகளால் ஈர்க்கப்பட்டு எளிதில் பசிதீர்ந்து ஏப்பம் விட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. ஆக, நுணலும் தன் வாயால் கெடும் என்பது இங்ஙனமே ! நாவடக்கம் இல்லாத மனித நுணல்கள் ஏராளம்!]


3019. வாற்பேய் என்றால் என்ன?
     தவளையின் குடம்பி (Larva) நிலையான தலைப்பிரட்டை
[சிறுவயதில் தேளி எனப்படும் பெருங்கெழுத்திமீன் என்று கூறி இறாலை பிடித்து விளையாடியவர்களும் நாம் தான்!  விலாங்கு மீன் குட்டி என அரட்டாளையை (தலைப்பிரட்டை) பிடித்து விளையாடியவர்களும் நாம் தான்!  மேலும் , தென்பொதிகை ஐந்தருவியில் கிடைத்த தலைப்பிரட்டை சற்று அளவில் பெரியதாய் இருந்து உண்மையிலேயே மீன் தான் என பல நாட்கள் என்னை ஏமாற்றிவிட்டது.]


3020. தவளைகளின் கூட்டத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
     Army
[Orchestra (கச்சேரிக்கூட்டம்) என்ற   பொருத்தமானதாகயிருக்குமே..... Dora The Explorer (டோராவின் பயணங்கள்) எனும் குழந்தைகட்கான (நமக்கான) சித்திரத்தில் கோக்கி (Coqui) என்ற ஒரு தவளைக் குட்டி வரும். அது தன் குடும்பத்தோடு சேர்ந்ததும் இன்னிசை கச்சேரியை நிகழ்த்தும். காணுங்கள் : https://youtu.be/w-NP1b58cDM]

கருத்துகள்