முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (303)

3021. மண்பானை நீர் குளிராக இருக்க காரணம்?
     மண்பாண்டத்தில் நுண்ணிய துளைகள் பரவலாக அனைத்து புள்ளிகளிலும் உண்டு. உள்ளேயுள்ள நீர், எப்போதும் மிகவும் நுண்ணிய அளவில் ஆனால் அனைத்து பரப்பிலும் வெளியேறும். வெளியேறும் நீரின் அளவு மிகவும் குறைவு என்பதால் எளிதில் நீராவியுமாகும். ஆக , பானைக்குள் இருக்கும் வெப்பத்தை பெற்று ஆவியாவதால் , மண்பாண்டத்தில் உள்ள நீர் குளிர்ச்சியாகிறது.

3022. பாஸ்டரைசேஷன் (Pasteurization) என்றால் என்ன?
     பால் கெட்டு போகாமல் பதப்படுத்தும் முறை. இதை லூயி பாஸ்டியர் கண்டுபிடித்ததால் அவரது பெயரையே இம்முறைக்கு இட்டனர்.

3023. பாஸ்டரைசேஷன் எவ்வாறு நடத்தப்படும்?
     161 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் சுமார் 15 விநாடிகள் கொதிக்கவைக்கப்பட்ட பால் மிக வேகமாக குளிர்விக்கப்படும்.

3024. அல்ட்ரா பாஸ்டரைசேஷன் எவ்வாறு நடத்தப்படும்?
     161 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில மிக நீண்ட நேரம் கொதிக்கவைக்கப்பட்ட பால் மிக வேகமாக குளிர்விக்கப்படும்.

3025. பாஸ்டரைசேஷனின் இன்னொரு பெயர்?
     HTST - High Temperature Short Time

3026. மிகவும் கனமான தனிமம்?
     யுரேனியம்
[ மிகவும் இலேசான தனிமம் ஹைட்ரஜன். ]


3027. தூக்கசுழற்சி (Sleep Cycle) என்றால் என்ன?
     ஒரு தூக்கசுழற்சி என்பது ஐந்து நிலைகளை உடையது. அவை , முதல் நிலை , இரண்டாம் நிலை , மூன்றாம் நிலை , நான்காம் நிலை மற்றும் REM நிலை போன்றவை. முதல் நிலையில் துவங்கி REM நிலை வரையாக ஒரு முழுமையான தூக்க சுழற்சியாகும். இதுபோல பல தூக்கசுழற்சிகள் ஓரிரவு தூக்கத்தில் நிகழும். சராசரியாக , ஒரு தூக்கசுழற்சி 120 நிமிடங்கள் வரை நீடிக்குமாம்.

3028. REM நிலை என்றால் என்ன?
     Rapid Eye Moment (REM) எனப்படுவது தூக்கசுழற்சியின் ஐந்தாம் நிலை. இந்நிலையில் தான் , இதயத்துடிப்பு அதிகமாயிருக்கும்... சுவாசம் வேகமாய் நிகழும்... கண்கள் இமைக்குப்பின் வேகவேகமாய் முன்பின் செல்லும்... கனவுகள் வரக்கூடும்...

3029. Non-REM நிலைகள் என்றால் யாவை?
     முதல் நான்கு தூக்கசுழற்சி நிலைகளும் Non-REM நிலைகளாம்.

3030. ஒவ்வொரு தூக்கசுழற்சி நிலைகளிலும் என்ன நிகழும்?
     முதல்நிலை - கண்கள் முன்பின் அசையும். குறைந்த இதயத்துடிப்பு. குறைந்தளவு சுவாசம்
    இரண்டாம் நிலை - தசைகள் ஓய்வடையும். குறைந்த இதயத்துடிப்பு.
    மூன்றாம் நிலை - முழு உடல் ஓய்வு
    நான்காம் நிலை - ஆழ்ந்த தூக்கம்
   REM நிலை - தன்னை மறந்த தூக்கம். அதிகரித்த இதயத்துடிப்பு. அதிகரித்த சுவாசம். வண்ணக் கனவுகள்

கருத்துகள்