முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (304)


3031. டால்ஃபின்களின் கூட்டம் எவ்வாறு ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது?
     School அல்லது Pod

3032. Piscivorous என்றால் என்ன?
     கடல்சார் உயிரினங்களை மட்டும் உண்ணும் உயிரினங்களை Piscivorous என்பார்கள். டால்ஃபின் இத்தகையது தான். [மீனராசியை Pisces என்பதுண்டு (). Piscis என்பது மீனைக் குறிக்கும் இலத்தீன் வார்த்தை.]

3033. Dolphin என பெயர் வர காரணம்?
     கிரேக்கத்தில் Delphus என்றால் கர்ப்பப்பை உடைய மீன் (Fish with a Womb) என பொருளாம். டால்ஃபினும் குட்டியிடும் பாலூட்டி வகைதான். Delphus எனும் சொல்லிலிருந்து தான் Dolphin எனும் ஆங்கிலச்சொல் வந்துள்ளது.

3034. Dolphin என்பதன் தமிழாக்கம்?
     ஓங்கில்

3035. ஓங்கில் எத்தகைய பண்புடையது?
     ஓங்கில் , மனிதனை போலவே சிந்திக்கும் திறனுடையது. அறிவார்ந்தது. கண்ணாடியில் தம் பிம்பங்களை "நாம் தான்" என அடையாளம் காணமுடிந்தவை ஓங்கில்கள். பல முறை மனிதர்களை காப்பாற்றியுள்ளனவாம். வாழும் கடல் கன்னிகள் , ஓங்கில்களே ! வேட்டை விலங்குகளான சுறா முதலானவை , மனிதர்களை தாக்க முற்படும்போதெலாம் , உயிரை பொருட்படுத்தாமல் ஓங்கில்கள் அவர்களை காக்க முற்படுமாம்.

3036. நமது உணவுகுழலின் பெயர்?
     Esophagus

3037. கல்லீரலோடு இணைக்கப்பட்டுள்ள பித்தப்பையின்  பயன்?
     உணவு செரிமானத்திற்கு தேவையான பித்தநீரை (Bail) அது சுரக்கும்.

3038. மனித இதயத்தில் நான்கு அறைகளுண்டு. இந்த ஒவ்வொரு அறையும் Chamber எனப்படும். இந்த அறைகளை நடுவில் பிரிக்கக்கூடிய சுவர் அமைப்பு உண்டு. அதன் பெயர்?
     செப்டம் (Septum)

3039. மனித இதயத்தில் மேற்புறமுள்ள இரண்டு அறைகளின் பெயர்?
     ஆட்ரியா (Atria)

3040. மனித இதயத்தில் கீழ்புறமுள்ள இரண்டு அறைகளின் பெயர்?
     வெண்ட்ரிக்கிள் (Ventricles)

கருத்துகள்