முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (305)

3041. தங்கம் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு?
     சீனா [தங்கம் வாங்குவதில் முதலிடம் நம்மவர்கள் தான்!]

3042. சுத்தமான தங்கம் என்பது எத்தனை Carat?
     24 Carat
[சுத்தமான தங்கத்தை வைத்து எந்த ஒரு ஆபரணங்களும் செய்யமுடியாது. வேறு உலோகங்கள் கலக்கப்படவேண்டும்.]


3043. Carat அலகு குறிப்பது எதனை?
     எத்தனை பங்கு வேறு உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை. [22 Carat எனில் அதில் 2 பங்கு வேறு உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும்.]

3044. Carat எனும் அலகு எப்படி அப்பெயரை பெற்றது?
     எகிப்தியர்கள், Carob Seed எனப்படும் விதைகளில் அளவைக் கொண்டுதான் தங்கத்தை அளவிட்டனர். அதன் பெயரே இன்றளவும் Carat எனுமாறு உள்ளது.

3045. Rose Gold எனப்படுவது?
    தங்கத்தோடு அதிகளவு தாமிரம் சேர்க்கப்படும்போது அதன் நிறம் Rose ஆகிறது. இதை , Rose Gold என்பர்.

3046. கூவம் ஆற்றின் வேறு பெயர்?
     திருவல்லிக்கேனி ஆறு

3047. பூமியின் சகோதரி எனப்படும் கோள்?
     வெள்ளி (Venus)

3048. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு?
     அமெரிக்கா

3049. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என பாடியவர்?
     பாரதிதாசன்

3050. மிக இலேசான உலோகம்?
    லித்தியம் [இலேசான வாயு - ஹைட்ரஜன்]

கருத்துகள்